குணசாலியான பெண்


 இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்லிடம் உங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள் என்று எதை நம்புகிறீர்கள் என்று கேட்டனர். அவர் கூறினது என்னவென்றால் நானும் என்னுடைய மனைவியும் திருமணத்தில் இணைந்த நாளே மிகவும் மகிழ்ச்சியான நாள். என் வாழ்க்கையில் பெற்ற வெற்றிக்கெல்லாம் அவளே காரணம் என்றார். அந்த அளவு மனைவியின் அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார். மனைவியும் தன் கணவனின் வெற்றிக்குப் பின்னால் நின்று உதவியுள்ளார்.

ஒரு நல்ல மனைவி தன் கணவனின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவளாகவும், அதை ஊக்குவிக்கிறவளாகவும் இருக்க வேண்டும். சில வேளைகளில் கணவனின் அலுவலக வேலையைக் குறித்த அறிவு அதிகம் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் கணவன் தன்னுடைய தொழிலில் பெரும் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியுறுபவளாக இருக்க வேண்டும். தன் கணவனின் வெற்றியைக் கண்டு கொள்ளாதவளாகவும், அதை அற்பமாக எண்ணக்கூடியவளாகவும் இருக்க கூடாது. இது எல்லாம் ஒரு மேட்டரா பெருசா மெச்சிக்கிட்டு இருக்கிறீங்க. அங்க பாருங்க மோடி எப்படி கவர்ந்து, பெரிய சாதனை பண்ணியிருக்கிறார். நீங்க சாதாரண சின்னக் காரியத்தைச் செய்து பெருசா சாதிச்சமாதிரி பேசிக்கிட்டு இருக்கிறீங்க என்று தரக்குறைவாகப் பேசக்கூடாது.
ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். பிறரின் திறமை நம் கணவனுக்கு இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொருவரின் தனித்திறமைகளை பிறரிலிருந்து வேறுபடும். எனவே பிறரின் திறமையைப் போல் தன் கணவனிடம் இல்லையே என்று கூறி வருத்தப்படவோ அல்லது அவமானப்படுத்தவோ கூடாது. என்னுடைய கணவர் ஒரு வேலைக்கும் உதவாதவர் என்று பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தக் கூடாது. உங்கள் கணவர் எந்தப் பண்பில், செயல்பாடுகளில் அதிக உற்சாகம் நிறைந்தவர் என்று எண்ணிப்பாருங்கள். அதைக் குறித்து அவரை மெச்சுங்கள் .
உங்கள் கணவனை எப்பொழுதும் லாயக்கற்றவர் என்று சொல்லிக்கொண்டிராமல் அவரை மெச்சவும் செய்யுங்கள். எல்லாக் கணவன்மாரும் தம் மனைவியால் தாமே மெச்சப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தான் செய்த சாதனைகளைத் தன் மனைவி பார்த்து புன்முறுவலோடு மெச்சவேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. உலகமெல்லாம் அவரை மெச்சினாலும் தன்மனைவியால் பாராட்டப்படுவதையே மிக முக்கியமானதாக நினைக்கிறார்கள். நீங்கள் மெச்சுவதால் உங்கள் கணவருக்கு தன்னம்பிக்கை அதிகமாக வளருகின்றது. மேலும் மேலும் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக் கொண்டே போகிறது. காரணம் தன் மனைவியால் தான் தொடர்ந்து பாராட்டப்பட வேண்டும் என்று எண்ணுகிறான். அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும் (நீதி. 31:11)
கணவன் தன் மனதால் முழுமையாக நம்பும் ஒரே நபர் மனைவி தான். உலகில் மற்றவர்கள் மாய்மாலமாகப் பாராட்டலாம். சுயநலத்திற்காகப் பழகலாம், மெச்சலாம். ஆனால் உண்மையாகவே தன் வாழ்வில் லாப, நஷ்டத்தில் பங்குபெறும் ஒரே நபர் மனைவி மட்டுமே என்பதை ஒவ்வொரு கணவரும் அறிந்திருக்கிறார்கள். எனவே உங்கள் கணவர் உயர உயர பறக்க உதவுங்கள். நீங்களும் உயர உயர மேன்மை பெறுவீர்கள் என்பதை மறந்து விடாதிருங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி