குணசாலியை நிர்ணயிக்கும் குணம்

 


ஒரு பெண்ணின் குணநலனே அவள் குணசாலியா அல்லது குணசாலியில்லையா என்பதை நிர்ணயிக்கும். மிகவும் படித்ததால் அல்லது நல்ல திறமை இருப்பதால் அல்லது அதிக வருவாய் ஈட்டுபவராக இருப்பதால் குணசாலியாக இருப்பதில்லை. மாறாக கணவன், மனைவி உறவு மற்றும் குடும்பம், அக்கம்பக்கம் பழகும் தன்மையே குணசாலியை நிர்ணயிக்க உதவுகிறது.

இங்கிலாந்து ராணியாக இருந்தாலும், குடும்பத்தில் கணவனுக்கு மனைவி. பிள்ளைகளுக்கு அம்மா என்கிற உறவைக் கட்டிக்காக்க வேண்டும். இந்த உறவு நிலையில் விரிசல் விழ ஆரம்பிக்கும்போது ஊருக்கு நல்ல பெண் கணவனுக்கு அல்லது பிள்ளைக்கு ஆகாத பெண்மணியாக மாறிவிடுகிறாள். ஊரில் கேட்டால் மிகவும் நல்ல பெண், Sunday school எடுப்பதில் திறமைசாலி, வாலிபப் பெண்கள் கூட்டத்தில் தவறாமல் பங்கெடுப்பவள். திருமறைப் போட்டியில் முதலிடம். ஆனால் திருமணமான பின் குடும்ப வாழ்வில் failure ஆகிவிடுகிறது. ஏனென்று தெரியாமல் பலர் திகைக்கின்றனர்.
திருமறையில் ஈசாக்கு ரெபெக்காள் வாழ்க்கையைக் குறித்து அபிமெலேக்கு குறிப்பிடும்போது, " ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக் கொண்டிருக்கிறதைக் கண்டான்" கணவன் மனைவி என்ற உறவானது நெருங்கிய உறவாக இருக்கிறது. ஆனால் இந்த நாட்களில் இருவரும் வேலைக்குச் சென்று வருவதால் வந்த உடன் சாப்பிட்டு டிவி பார்த்து விட்டு இரவு 10 மணிக்குத்தான் அதிலிருந்து விடை பெறுகின்றனர் . பின்னர் களைப்பில் யாருடனும் பேசாமல் தூங்கி விடுகின்றனர். பின்னர் காலையிலே மிஷின் போன்று உழைக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையே இயந்திர மயமாக்கப்பட்டது போல் உள்ளது. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் இடம் இல்லை. வீட்டிற்குள் கோபம், எரிச்சல் போன்றவற்றை மட்டுமே காட்டிவிட்டுச் சென்று விடுகிறோம்.
தன் கணவன் தன் மீது அன்பு செலுத்தி கவனித்துக் கொள்ள வேண்டுமானால் எப்படி ஒரு பெண் நடந்து கொள்ள வேண்டும் என்று டாக்டர். சாலினி தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பெண் குரங்கு ஒன்றுக்கு நல்ல பழம் கிடைத்தால் அதைக்கொண்டு போய் தலைமை ஆண் குரங்கிடம் கொடுத்துப் பகிர்ந்து கொள்ளும். பின்னர் அந்த ஆண் குரங்கின் மேல் உள்ள பேன்களை எடுத்து விடும். இதனால் அந்த ஆண் குரங்கிற்கு அந்தப் பெண் குரங்கின் மேல் ஒரு பாசம் ஏற்படுகிறது. அந்தப் பெண் குரங்கை யாராவது தொந்தரவு செய்தால் உடனே அந்த தலைமை ஆண் குரங்கு சண்டையிட ஆரம்பிக்கும். காரணம் பாசப் பிணைப்பே. இதைப்போன்று தான் மனுக்குலம் காணப்படுகிறது. எந்த மனைவி தன கணவனை மனம் உகந்து பராமரிக்கிறாளோ, சிறு உதவிகள் செய்து கணவன் உள்ளத்தை சந்தோஷப் படுத்துகிறாளோ அவள் மீது கணவனுக்கு அன்பு உருவாகிறது. மனைவிக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதை அந்த கணவனே எதிர்கொள்கிறான்.
இன்று கணவன் மீது அன்பு காட்டுவதில் மனைவிகள் குறைவுபடுகின்றனர். நன்றாகப் பணம் சம்பாதித்துக் கொடுக்கிறேன் என் மீது பாசம் இல்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர். பணம் உறவை வலுப்படுத்துவத்தைக் காட்டிலும் பாசம் தான் உறவை வலுப்படுத்தும். இயந்திரம் போன்று வாழும் மனித வாழ்வில் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள நேரம் இல்லை. புரிந்து கொள்ளுதலுக்கு வழியில்லை. தன கருத்தே சரியானது என்ற பிடிவாதத்தில் மற்றவர்கள் உணர்வுகளைச் சிதைக்கிறோம்.
கணவன் அல்லது மனைவி திருமணமானதால் கட்டுப்படுத்துவதற்கு அல்லது அதிகாரம் செலுத்துவதற்கு உரிமை உண்டு என்று எண்ணி பிறரை கூண்டு கிளியாக்கி பழம், பால் கொடுத்து சித்திரத்தைச் செய்கிறறோம். குயிலைப் பிடித்துக் கூட்டுக்குள் அடைத்து கூவச் சொல்வதும், மயிலைப் பிடித்து காலை உடைத்து ஆடச்சொல்வதும், கணவன் மனைவியைத் திருமணம் செய்ததால் பாசத்தை நேசத்தைக் கொட்டச் சொல்லுவதும் ஒன்றே. இவைகள் சாத்தியமற்றவை. சதோஷமற்றவை. இயற்கையாக ஊறும் பாசமே உண்மையான பாசம்.
குணசாலியான பெண், மேலே குறிப்பிட்ட grooming behavior செயல்பாட்டை செயல்படுத்தி இறைவன் ஏற்படுத்திய வாழ்வில் மகிழ்ந்து களிகூருவோம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி