குணசாலியான மனைவி


 குணசாலியான மனைவி, கணவனை புரிந்து கொண்டு இசைவாக நடப்பவள். தன் கணவனுக்கும் தனது மாமியாருக்கும் இடையே உள்ள பாச உணர்வைப் புரிந்து கொண்டால் தான் புகுந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும்.

இந்த பாருங்க உங்க அம்மா நான் வைக்கிற குழம்பு நல்லா இல்லைங்குறாங்க. நான் செய்கிற ஒவ்வொரு செய்கையையும் குறை சொல்லுறாங்க. காலையிலே விடிறதுக்கு முன்னே என்ன மட்டும் எழுப்பி வீட்டு வேலை வாங்குறாங்க. நம்ம இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்கிறதைத் திருட்டுத்தனமா காது கொடுத்துக் கேக்கிறாங்க. இப்படியே போச்சுன்னா அப்புறம் நான் சண்டைபோட வேண்டியதிருக்கும் என்றாள்.
இதைக்கேட்டுகிட்டு இருந்தவன், இந்த பாரு எங்க அம்மா சொல்லுறத கேட்டுக் கிட்டு இருக்கண்ணா இரு. இல்லாட்டி உங்க வீட்டுக்கு ஓடிப்போயிரு.
ஒங்க அம்மாவைப்பற்றிப் பேசினா மட்டும் ஏன் உங்க வயிறு எரியுது. என்னைப்பற்றி என்னவெல்லாம் பேசுறாங்க. அது ஒன்றும் உங்க காதுக்குள்ளே ஏறாதா?
ஏறாதடி ஏறாது... எதைச் செய்தாலும் எங்கம்மா நல்லதுக்குத்தான் செய்வாங்க.
ஏய் நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? அம்மா பைத்தியம் பிடிச்சு அலைறியே, உங்க அம்மாவக் கெட்டிக்கிட்டு நீயே ஆளு. நான் எங்க வீட்டுக்குப் போறேன் என்று பறந்து போனாள்.
இன்று இதைப்போன்ற காரியங்கள் குடும்பங்களில் நிகழ்வதைப் பார்க்கிறோம். நல்ல பையனுக்கு இப்படி ஒரு பெண் வாய்த்திருக்கிறாளே, என்று பலரும் வேதனைப்படுகின்றனர். உண்மையிலயே பிரச்சனை எங்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் நமது கணவன் தன தன் தாயின் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அம்மாவை தெய்வத்துக்கு ஒப்பாக கருதக் காரணம் என்ன?ஏன் தெருச்சண்டையில் கூட தன்னைப் பற்றி தரக்குறைவாகப் பேசும் பொது பொறுத்துக் கொள்ளும் ஆண் தன் தாயைப்பற்றி பேசியதும் கொதித்து எழுவது என்? தன் குடும்பத்தை விட்டு விட்டு கணவனே கதி என்று வந்தவளுக்கு கணவன் முதலிடம் தராமல் தன் தாயின் மீது அளவு கடந்த பாசம் காட்டுவது ஏன் என்றால், தன் தாயின் இரத்தம் தான் அவனுடைய (கணவன்) உடலில் ஓடுகிறதே ஒழிய, மனைவியின் இரத்தம் இல்லை. தாய்க்கும் மகனுக்கும் மரபணு 50% ஒற்றுமையாக உள்ளதாக அறிவியல் குறிப்பிடுகிறது. ஆனால் கணவன் மனைவியின் மரபணு ஒற்றுமை என்பது 0% தான். எனவே இயற்கையாக தன் தாயின் மீது பாச உணர்வு பெருகுகின்றது. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தன் மாமியாரை சரிக்கட்டுவது என்று நீங்கள் நினைக்கலாம்.
திருமறையில் ரூத் புத்தகத்தைத் திரும்ப திரும்ப வாசியுங்கள். ரூத் தன் மாமியார் நகோமியை எப்படி தன்வயப்படுத்தியிருப்பாள் என கற்பனை செய்து பாருங்கள். மாமியார் மெச்சிய மருமகளாக காணப்படும் அளவிற்கு எப்படி எல்லாம் நடந்திருக்கக் கூடும்? நமது மாமியாரை, கணவனை எப்படி சரி செய்வது?
தன்மாமியாருக்கும் தன் கணவனுக்கும் இடையே உள்ள நெருக்கமான மரபணு உறவு இருப்பது போல் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே உறவு மெதுவாய் மலர ஆரம்பிக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் தன் தாய் பெரிதா அல்லது தன்பிள்ளை பெரிதா என்று தீர்மானிக்கும் தன் பிள்ளைகளே முக்கியம் என்ற சூழல் வர ஆரம்பிக்கும். இச்சூழலில் தன் தாயின் ஆலோசனைகளைத் தாண்டிச் செயல்பட ஆரம்பித்து விடுவார் உங்கள் கணவர். தன்னுடைய பிள்ளைகளின் நல்வாழ்வை மனதில் கொண்டு உங்கள் மீது அக்கறை செலுத்துவார். முக்கியத்துவம் கொடுப்பார்.
சிறு வயது முதற்கொண்டே வளர்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை எப்படி உறுதியாக இருந்ததோ அதைப் போன்று நாளடைவில் உங்கள் மீது நம்பிக்கை வளர்ந்து உறுதியாக மாற ஆரம்பிக்கும். இவள் நம் மனைவி. இவளோடு காலம் காலமாய் வாழலாம் என்ற உறுதியான நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கும் போது மனைவியின் பேச்சை நம்ப ஆரம்பிக்கிறான். எனவே எடுத்த எடுப்பிலே கணவனைத் தன்பக்கமாகத் திருப்ப நினைப்பதும் தனிக்குடித்தனம், என்று செயல்படுவதும் மாமியாரோடு உள்ள உறவை அறுக்க வேண்டும், மாமியாருக்கு அனுப்பும் பணத்தை நிறுத்த வேண்டும், பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும் என நினைப்பதும் முட்டாத்தனம். எனவே இயற்கையாக அமைந்த சூழ்நிலையைப் புரிந்து பொறுமையோடு இருப்பவளே உண்மையான குணசாலி.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி