குணசாலியான பெண்ணும் பொறுப்புணர்வும்

 

மாலை வேளையில் குடும்பங்களை சந்திக்க சென்றிருந்தேன்.  ஒரு குடும்பத்திற்குள் நுழைந்ததும் அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். குடும்பத்தின் தலைவரைப் பற்றிக் கேட்டேன்.  எங்கே இருக்கிறார்கள் என கேட்டதும், சிரித்துக் கொண்டே எங்கே இருக்கிறார் என தெரியாது.  எப்பொழுதாவது வருவார்.  ஒரு நாளும் பிள்ளைகள் படிப்பைப் பற்றியோ வீட்டை எப்படி நடத்துகிறாய், சாப்பாடு செலவுக்குப் பணம் வேண்டுமா என்றோ ஒரு போதும் கேட்டதில்லை.  வீட்டிற்கு வரும்போது குடிக்காமல் வந்தாலே பெரிய காரியம்.  visiting professor போன்று எங்களை visit பண்ண வருவார்.  இன்று ஒரு கம்பெனியில் பணியாற்றுகிறேன் என்பார், அடுத்த முறைவரும்போது அங்கு ஒன்றும் workout ஆகவில்லை எனவே வேற கம்பெனிக்கு போய் விட்டேன் என்று கதை விடுவார்.  நாங்கள் இப்பொழுது அவரை கணக்கிலே எடுத்துக் கொள்ளுவது இல்லை.  அவரை பற்றி நாங்க கவலைப்படுகிறதையெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சி என்று சிரித்துக் கொண்டே கூறினார்.    

     இப்படிக் கடமைக்காகக் குடும்பத்தை visit செய்பவர் சிலர், பிள்ளைகள் மீது உள்ள பொறுப்பையும், குடும்ப பொறுப்பையும் தட்டிக் கழிப்பவர் சிலர், வீட்டில் எதாவது பிரச்னை வந்து விட்டால் இருந்த இடமே தெரியாமல் மாயமாகும் சிலர், பண நெருக்கடி ஏற்பட்டால் எனக்கா, குடும்பமாக ஒன்றுமில்லை என்று சத்தியம் பண்ணவும், சபிக்கவும் தொடங்கும் பேதுருக்கள் சிலர், தொழிலைத் தொடங்கி நஷ்டத்தில் முடிந்தால் மனைவிதான் காரணம் என்று பழியை மனைவி தலையில் போட்டு விட்டுக் கையைக் கழுவி விடும் பிலாத்துக்கள் சிலர்.  குடும்பத்தைப் பற்றியோ குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியோ சிந்தியாமல் நேரத்துக்கு நேரம் வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டு குறட்டை போடும் ஆண்கள் சிலர். மனைவியை கட்டின நாளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லாமல் சமையல் அறையைச் சிறைக்கூடமாக்குக்கும் சிலர், கணவனிடம் மகிழ்ச்சியோடு பேச மனைவி காத்திருக்கும்போது வேலை செய்து tv யை on  செய்து சரணாகதி என்று மூழ்கிவிடும் சிலர். 

     இப்படி பல ஆண்கள் ஜந்துக்களாக  வாழ்ந்து பொறுப்புணர்வு அற்றவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆண்களைத் திருமணம் செய்த பெண்கள் வாழ்க்கையை வெறுத்து, குடும்பத்தை விட்டு வீட்டை விட்டு செல்லாமல் குணசாலியாக இருந்து, சாதுரியமாக செயல்பட்டுப் பிள்ளைகள் பெரிய நிலைமைக்கு வரும் வரை முதுகெலும்பாக இருந்து தூக்கி நிறுத்துகிற பெண்மணிகளாக மாறவேண்டும்.  கணவனின் குறைகளை மட்டும் பார்த்து நின்றால் நடுக்கிணற்றில் ஆழ்ந்து விடவேண்டியதிருக்கும்.  அதற்கு மாறாக கிணற்றில் தள்ளிவிட்டு விட்டால் நீச்சல் அடித்தே ஆக வேண்டும் என்று நினைத்து கையை மேலும் கீழுமாக அடித்து, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கரையை அடைவது தான் சிறந்த வாழ்க்கை.  

     எல்லாருக்கும் பொறுப்புணர்வு உடைய கணவன் கிடைப்பான் என்று நினைக்க இயலாது.  பொறுப்புணர்வு இல்லாத கணவனாக இருந்தாலும் மனைவி பொறுப்புடைய பெண்மணியாக செயல்படுவது அவசியம்.  1சாமு 25:24 வசனத்தில் அபிகாயில் என்ற பெண்மணி பொறுப்பில்லாமல் பேசின தன கணவனாகிய நாபாலை பொருட்படுத்தாமல் ஞானத்தோடு தன குடும்பத்தையும், சொத்தையும்  காப்பற்றினாள். 

       நீதிமொழிகள் 31ம் அதிகாரம் பொறுப்புள்ள பெண்மணியின் செயல்களைக் குறிப்பிடுகின்றது.  இவையாவும், பொறுப்புள்ள ஆண் கணவனாகக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பொறுப்புள்ள மனைவியால் குடும்பம் தழைத்தோங்க இயலும். 

     சில இடங்களில் கணவன், மனைவி இருவரும் நிர்வாக திறமையுள்ளவர்களாக இருக்கும் போது பகிர்ந்து செயல்பட முற்படவேண்டும்.  ஈகோ தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  நீதிமொழிகள்:31:31-யை நினைவூட்ட விரும்புகிறேன் " அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது" என பலர் பாராட்டும் அளவிற்கு குணசாலிகளாகப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்