அற்பமான பிரச்சனைக்கு விலகுபவர் குணசாலியான பெண்

 


குடும்ப வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே ஒத்துப் போகாமல் போகும் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் அற்பமான காரணங்களையும் பெரிதாக மாற்றுகிற பெண்ணால் கணவன் வேதனைப்படுகிறான் அல்லது கணவனால் பெண்கள் நரக வேதனைப்படுகின்றனர்.

சில பெண்கள் உணவை அதிகமாக சமைத்து விட்டு, மீந்ததை வெளியே கொட்டி விடுவார்கள். ஆண்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்து உயர்ந்திருந்தால் இதனை ஏற்க முடியாமல் பெரிய சண்டையாக்கி விடுவார்கள். அதை போன்று சில ஆண்கள், கையில் பணம் இருக்கும் போது, விலை அதிகமான பொருட்களை எல்லாம் வாங்கிப் போட்டு விடுவார்கள். இதனை சிக்கனமாக வாழ்ந்த பெண்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனே பெற்றோருக்கு தொலைபேசியில் பேசி பிரச்சனையைப் பெரிதாக்கி விடுவார்கள். குடும்பமே இதற்க்கு நாட்டாமை பேசி, தீர்ப்பளிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பற்பசையை எடுத்து பயன்படுத்தும் போது கூட சிலர் அதிகமாய் எடுப்பதற்கும், சிலர் கொஞ்சமாக எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அவற்றை எடுக்கும் பொது கீழே இருந்து அழுத்திக் கொண்டு வருவதும், சிலர் மேலே இருந்தே அழுத்தி எடுப்பதிலும் கூட பிரச்சனைகள் உருவாவதுண்டு. இப்படி பிரச்சனைகள் அற்பமாக இருந்தாலும் அதனை ஊதி ஊதி பெரிதுபடுத்துவதால் பிரிவினை ஏற்படுகிறது.
கவுன்சிலிங் வருபவர்களின் பிரச்னைகளைக் கேட்கும் போது சில வேலை ஆச்சரியமாக இருக்கும். எப்படியென்றால் அவர்கள் கூறும் பிரச்சனை வேறு. சண்டைப் போடுவது, சிறு பிரச்சனையைக் கூட பெரிதாக்குவதால் அது அடிதடியாக மாறுகிறது. எனவே பிரச்சனை வரும் போது அதை தவிர்க்க முற்பட வேண்டும். ஒரு குடும்பத்தலைவன் சின்னப் பிரச்சனை வரும் போது எப்படிக் கையாளுகிறான் என்பதைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.
மனைவி சின்ன, சின்னக் காரியங்களுக்காகச் சண்டையிடும் போது, கணவன் அதை நிறுத்திப் பார்ப்பார். முடியவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போய் விடுவார். அப்படியே மார்க்கெட் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து விடுவார். வீட்டின் முன் நின்று கொண்டு தலையில் உள்ள தொப்பியை எடுத்து வீட்டிற்குள்ளே வீசி விடுவார். அந்த தொப்பி உள்ளே 40 கி.மீ வேகத்தில் சென்றது. அது அப்படியே 40 கி.மீ வேகத்தில் திருப்பி வந்து விடும். அப்பொழுது தெரிந்து கொள்வான். தன் மனைவி கோபம் இன்னும் குறையவில்லை என்று. எனவே திரும்பி கடைக்குப் பொய் ஒரு டீ அருந்தி விட்டு மீண்டும் வீட்டிற்கு வெளியே நின்று தொப்பியை வீட்டிற்குள் 40 கி.மீ வேகத்தில் விடுவார். அது திருப்பி 20 கி.மீ வேகத்தில் வெளியே வந்து விடும். சரி, தன் மனைவியின் கோபம் குறைய ஆரம்பித்து விட்டது என புரிந்து கொண்டு, ஆலயத்தின் முன் போய் ஒரு சின்ன ஜெபம் செய்து விட்டு, கடையில் போய் மனைவிக்குப் பிடித்த அல்வாவையும், பூவையும் வாங்கிக் கொண்டு உள்ளே வந்து வைத்து விடுவார். முகம் அலசி விட்டு, தன் வேலையை ஆரம்பித்துவிட்டு ஓரக்கண்ணால் நோட்டமிட்டால், அந்த மனைவி கணவன் கொண்டு வந்த அல்வாவையும் பூவையும் தேடிப் பார்ப்பாள். சரி, மனைவியின் கோபம் பூஜியம் கி.மீ. க்கு வந்து விட்டது என்று சந்தோஷப்படுவார்.
அற்பமான சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது சகஜம் தான். அதை பெண்கள், பெரிதாக்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே பெரிதாக்கினாலும் மற்றவர்கள் இலகுவாகக் கையாண்டால் பிரச்சனை ஒன்றுமில்லாமல் போய்விடும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி