பெண்ணின் வருமானமும் குடும்ப ஆளுகையும்

 

    மாதம் மாதம் 70 ஆயிரம் ரூபாய் அந்த குணசாலியான பெண் சம்பளமாகப் பெற்றுவந்தார். கணவன் 20 ஆயிரம் மட்டுமே சம்பளமாக பெற்று வந்தார். நல்ல கம்பெனியில் மனைவி பணியாற்றி முன்னேறிச் சென்றதால் குடும்பப் பொறுப்பை மனைவி கையில் எடுக்க விரும்பினார். நீங்க கொஞ்ச சம்பளம் வாங்குறீங்க. அதுவும் நிரந்தரமாக இல்லை. நான் வாங்குகிற சம்பளப் பணத்தை வங்கியில் என் account-லே வைத்துக் கொள்ளுகிறேன். தேவையானால் நான் எடுத்துத் தருகிறேன். மற்றபடி நீங்கள் பணத்தை விரயம் செய்துவிடுவீர்கள் என்று உறுதியாகக் கூறினாள்.

குடும்ப வரவு செலவு அத்தனையும் அவள் கையில், குடும்பத் தலைவனாக வீட்டில் நேராநேரம் சாப்பிட வேண்டும். சமைக்க விட்டால் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்ல வேண்டும். சரியாக சிலிண்டர் வாங்க வேண்டும். பிள்ளைக்கு fees கட்ட வேண்டும். E.B. Bill மறக்காமல் கட்ட வேண்டும். கார்ஐ சுத்தமாகக் கழுவி விட்டு விட வேண்டும். பிள்ளையை Tuition-க்கு அனுப்ப வேண்டும். வேறு எதிலும் தலையிடாமல் மனைவியின் முடிவுகளுக்குத் தலையசைக்க வேண்டும். இந்த வாழ்க்கை கணவன் சார்லஸ்க்கு போர் அடித்து விட்டது.
மனைவி தன்னை மதிக்காமல் இருப்பது குறித்து மனம் நொந்து போனான். தாங்க முடியாமல் ஒரு நாள் கொதித்து எழுந்தான். வாணி நீ செய்கிறதுச் சரியாக தெரியவில்லை. நான் வீட்டில் வேலைக்காரன் போன்று காணப்படுகிறேன். எனக்கே தெரியாமல் நீயே வீட்டுமனை வாங்கி உன் பெயரிலே வீட்டை கட்டி விட்டாய். Car உன் பெயரிலே வாங்கி Registration செய்து விட்டாய். இப்பொழுது புதிய இடத்தையும் நம்ம இரண்டுபேர் பெயரில் பதிவு பண்ணினாள் என்ன என்று கத்தினான்.
இந்த பாருங்க நான் அதிகமாக சம்பாத்தியம் பண்ணுகிறேன். நம்ம பிள்ளையின் எதிர்காலத்துக்காகத் தான் சேர்த்து வைக்கிறேன். உங்க சம்பளத்தை ஒரு வாரம் கூட வீட்டுக்குப் பயன்படுத்த முடியாது. உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நானே பார்த்துக்கிறேன். நீங்க சும்மா என்னோடு கூட இருந்தா போதும் என்று சத்தமாகக் கூறினாள். அப்படின்னா நீ என்னோடு வாழ வேண்டிய அவசியம் இல்லை. உங்க அம்மா வீட்டுக்குப்போ என்றான் சார்லஸ்.
இந்த பாருங்க எங்க அம்மா வீட்டுக்கு நான் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்க வேணும்னா உங்க அம்மா வீட்டுக்குப் போங்க. உங்களை வச்சி நாங்க வாழல என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள்.
அடுத்த நிமிடமே உடுத்தின உடையோடு மானஸ்தன் போல் வெளியேறினான் சார்லஸ்.
பிரியமானவர்களே ஆண்கள் மனைவிமாரை விரட்டிய காலம்போய், மனைவி கணவனை விரட்டும் சூழலும் நம் சமுதாயத்தில் பெருகி வருகிறது. ஆண்கள் குடும்பத்தின் தலைவர், எனவே அவர் தாம் அனைத்துப் பொறுப்புகளுக்கும், முடிவு எடுப்பதற்கும் உரியவர் என்பது முந்தைய காலம். நம் தகப்பனார் மட்டும் பணிசெய்திருப்பார், அம்மா வீட்டு வேலைகளை செய்திருப்பார்கள். எனவே வெளியில் நடைபெறும் சூழல்கள் தெரியாமல் இருந்திருப்பார்கள்.
இன்று பெண்கள் வெளியே வேலை செய்ய ஆரம்பித்து விட்டதால், உலக நடப்புகள் நன்றாகத் தெரிகிறது. அதே வேளையில் கணவனின் வருவாயை விட மனைவியின் வருவாய் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இச்ச்சூழலில் சில கணவன்மார்களுக்குத் தாழ்வு மனப்பான்மை பெருகிவருகிறது. சிலர் தாழ்வு மனப்பான்மையை மறைக்க மனைவியை கட்டுப்படுத்த நினைக்கின்றனர். வன்முறைகளையும் கையாளுகின்றனர். சிலர் மனைவியின் வருவாய் அதிகமாக வந்தால் சந்தோஷப்படுகிறவர்களாகவும் இருக்கின்றனர்.
சில பெண்கள் தாங்கள் அதிகமாக சம்பாதிப்பதால் கர்வமாக நடந்து கொள்ளுவதும் உண்டு. நாம் என் கணவனுக்குக் கட்டுப்பட வேண்டும். நாம் சம்பாதிக்கிறோம். நாம் செலவு செய்கிறோம். கணவன் கணக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மமதையோடு நடந்து கொள்வது குடும்பத்தைப் பிரிக்கும் சூழலை உருவாக்கி விடும்.
எபேசியர். 5:22-25 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள் என்று கணவன், மனைவி இருவரும் பொறுப்பாக, இசைந்து வாழ வேண்டும் என்று குறிப்பிடுகிறது. பணம் ஒரு குடும்பத்தின் தலைமைத்துவத்தை நிர்ணயிப்பதாக இருக்கக் கூடாது. மாறாக அன்பு குடும்பத்தை வழி நடத்துவதாகவும், கீழ்ப்படிதல் அன்பின் அடிப்படையிலுமே அமைய வேண்டும். அப்பொழுது சிறந்த குடும்பமாகத் திகழ முடியும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்