குணசாலியான பெண் தன் வாழ்வை மோட்சமாக்குகிறாள்
அன்பிற்குரியோரே குடும்பவாழ்வில் நாம் அடியெடுத்து வைத்ததும் தொட்டதெல்லாம் துலங்கும் என்றோ, துன்பமே அல்லாத பரலோகம் என்றோ அடியெடுத்து வைக்க முடியாது. குணசாலியான பெண் ஒரு குடும்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போது நரகமாய் காணப்பட்டாலும், அதை மோட்சமாக மாற்றிக்கொள்ள முடியும். ஏனென்றால் பலர் மற்றவர்களை சரிப்படுத்துகிறேன் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிற படியால் தங்கள் வாழ்க்கையையே நரகமாக மாற்றிக் கொள்ளுகிறார்கள். பிறரைக் குற்றம் பார்க்கிறவர்கள் தங்கள் உள்ளத்தில் பொறாமையையும், எதிர்ப்புகளையும் சம்பாதிப்பதால் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியில்லாமல் ஆக்கிக்கொள்ளுகிறார்கள்.
கணவனையோ அல்லது மனைவியையோ குற்றம் சாட்டிக்கொண்டேயிருக்கும் போது நாம் மாறுவதற்கு விருப்பப்படவில்லை என்பது தான் உண்மை. நாம் பிறரை மாற்றுவதைக் காட்டிலும் நம்மையே நாம் மாற்றிக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம். சில வேளை கணவன் இடத்தில் மனைவி தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். நான் அந்த இடத்தில் இருந்தால் எப்படி செயல்படுவேன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வாழ்க்கை என்பது நமது கையில் தான் இருக்கிறது. “Life is nothing but a game of choices” நாம் எப்படி ஒரு காரியத்தை எடுத்துக் கொள்ளுகிறோமோ அதை பொறுத்து தான் நமது மகிழ்ச்சி அமையும். ஒரு காரியத்தை Positiveவே ஆக எடுத்துக் கொண்டால் மனம் மகிழும். அதையே negative ஆக எடுத்துக் கொண்டால் உள்ளம் புண்படும். இருப்பினும் நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நமது வாழ்வில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை. ஆகவே நல்ல பாதிப்புகள் வாழ்க்கையில் நடைபெற வேண்டுமானால் நல்ல செயல்களை செய்யவும் , சிந்திக்கவும் வேண்டும்.
ஒரு வயதான கொத்தனார் தன்னுடைய காண்ட்ராக்டரைப் பார்த்து அய்யா நான் வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனக்கு வயதாகிவிட்டது என்று கூறினார். உடனே அந்த முதலாளியான காண்ட்ராக்டர் அவரைப் பார்த்து எனக்கு இன்னும் ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டிக் கொடுத்து விட்டு வேலையிலிருந்து நின்று விடுங்கள் என்றார். உடனே அந்த கொத்தனாரும் சரி என்று அந்த வீட்டு வேலையைச் செய்தார். ஆனால் அரை குறை மனதோடு தன்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ஏனோ, தானோ என்று செய்து முடித்தார். விட்டால் போதும் என்ற மனப்பான்மையோடு வேலை முடிந்து விட்டது என்றார். அப்பொழுது அந்த முதலாளி அந்த வீட்டின் சாவியைக் கொடுத்து இது உங்களுக்குத் தான் என்றார். அந்த கொத்தனாரோ அதிர்ந்துப் போனார். எனக்கு என்று முன்பே தெரியுமானால் எப்படியெல்லாம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி என்னுடைய வசதிக்கேற்றபடி செய்திருப்பேனே என்று மனம் வருந்தினார்.
நமது வாழ்வும், சந்தோஷமும் நம்முடைய கையிலே என்று சிந்திக்கிற எந்தப் பெண்ணும் குணசாலியே Happiness depends on ourselves என்று அரிஸ்டாட்டில் வார்த்தை மிகவும் உண்மையுள்ளது.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
மேலும் பல செய்திகளை படிக்க visit: blog.tdtachristianmatrimony.com
Comments
Post a Comment