ஒற்றுமையைப் பேணிக்காக்கும் குணசாலி
ஒருவர் பொறுத்தால் இருவர் கூடிவாழலாம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். குணசாலியான ஒரு பெண்மணி பல விஷயங்களில் பொறுமை உடையவளாக இருந்தால் குடும்பம் ஒருபோதும் பிரியவே பிரியாது.
கணவனும், மனைவியுமாகப் பேசி கொண்டிருந்தால் சில மாமியாருக்குப் பிடிக்காது. உடனே டேய் என்னடா செய்யுற எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது. நீ என்ன உன் மனைவியோடு கொஞ்சி கொஞ்சி குலாவிட்டு இருக்கிற, எனக்கு ஏதாவது மாத்திரை வாங்கித்தா, ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போ என்பார்கள்.
"ஏண்டி நீ என் மகனோடு பேசி பேசி அவன் நேரத்தையெல்லாம் வீணடிக்கிறியே, வீட்டுல எதனை வேலை இருக்குது. வீட்டைப் பெருக்கலாம், பாத்திரத்த கழுவலாம். எனக்கு ஏதாவது கசாயம் வச்சிக்கொடுக்கலாம் அதெல்லாம் விட்டுவிட்டு இப்படி கூத்தடிக்கிறீயே, போய் வேலையைப்பாரு."
"ஏம்ப்பா என்ன மட்டும் தனியாய் படுக்கப் போட்டு, நீங்க மாத்திரம் தனியா படுக்கிறீங்க, எனக்கு எதாவது நெஞ்சுவலி வந்தா என்ன செய்கிறது. கூப்பிட முடியுமா, கூப்பிட்டா தான் உங்க காது கேட்குமா?"
"என் மகனை என்னை விட்டு பிரிச்சிட்டு தனிக்குடித்தனம் போயிறலாம்னு நினைக்கிறீயா, அது நான் சாகும் வரையிலும் நடக்கவே நடக்காது."
"ஏன்டா உன்னை இத்தனை வயசு வரையிலும் வளர்த்து ஆளாக்கின என்ன மறந்திட்டு, நேற்று வந்தவளோடு ஐக்கியம் ஆயிட்டியாங்கும். "
எத்தனை மாமியார்கள் இப்படி வலம் வந்து கொண்டிருந்தாலும், சில பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியோடு வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மாமியாரோடு நம்மால் வாழமுடியாது என்று தலைதெறிக்க ஓடின மருமக்களும் இருக்கிறார்கள். ஆனால் குணசாலியான ஒரு பெண் இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்.
தன் கணவன் மாமியார் வயிற்றில் பிறந்ததாலும், தன் மகனை 27 வயது வரையிலும் சீராட்டி, பாராட்டி வளர்த்தாலும் அன்பு பீறிட்டுப் பாயத்தான் செய்யும். அதே வேளையில் கணவனையே நம்பி வந்த உங்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும் கணவனின் பங்காகும். இந்த இடத்தில தான் கணவன்மார் முடிவெடுக்க முடியாமல் சிக்குகின்றனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்று சொல்லுவார்கள் அதே நிலைதான் ஆண்களின் நிலை.
நல்ல பெண்மணி கணவனின் மனநிலையையும், மாமியாரின் மனநிலையையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். புருஷன் தன தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இசைந்திருப் பான் (ஆதி.2:24) என்ற வாக்கியம் மிகவும் எளிதாக நடப்பதல்ல, செயல் வடிவம் ஆக்கும்போது ஏற்படுகிற சிக்கல்கள், அதிகம். இருவரையும் சிநேகிக்க வேண்டும். அதே வேளையில் அவரவர் நிலையைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
Comments
Post a Comment