பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

    


    குடும்பத்தை நல்வழிப்படுத்தி, பிள்ளைகளுக்கு முன்மாதிரியை வைப்பதில் மனைவிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. சென்னையில் ஒரு குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றிருந்தேன். வீட்டிற்குள் சென்றதும் பிள்ளைகள் நடந்து கொண்ட விதம், குடும்பத் தலைவியின் பாங்கான நடக்கைகள் என்னை மிகவும் கவர்ந்தது. குடும்பத்தலைவரிடம் பிள்ளைகள் மரியாதையோடு நடந்து கொண்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. மெதுவாக அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கணக் காரணத்தை அருகில் இருந்த சகோதரர் எனக்கு விளக்கினார். அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமே அந்தக் குடும்பத்தின் தலைவிதான். தன் கணவரிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளுவார். கணவன் விரும்பாத காரியத்தை ஒருபோதும் சண்டையிட்டு நிறைவேற்றிக் கொள்ளமாட்டார். கணவன் மகிழ்ச்சியோடு இருக்கும்போது கணவனிடம் காணப்படும் குறைகளை நாசுக்காக எடுத்துக்காட்டுவர். பிள்ளைகள் இந்த முன்மாதிரியால் கவர்ந்து இழுக்கப்பட்டதால் பிள்ளைகளும் பெற்றோரோடு சண்டையிடுவதோ, எதிர்த்துப்பேசுவதோ இல்லை என்றார். ஒரு மனைவியின் வாழ்வு எந்த அளவிற்குப் பிள்ளைகளிடம் தாக்கத்தை உருவாக்குகிறது என்று பார்க்கும் போது இதை வசிக்கும் சகோதரிகளும் இதைப் பின்பற்றிப் பார்க்கலாமே.

என்னிடம் பலர் தங்கள் பிள்ளைகளைப்பற்றி குறை கூறுவார்கள். என் பிள்ளை என்னை எதிர்த்துப் பேசுகிறான், செல்போன் வேண்டும் என்று அடம் பிடிக்கிறான், கையில் கிடைத்தப்பொருளைத் தூக்கி வீசுகிறான். சண்டை போட்டுக் கொண்டு அறைக் கதவை பூட்டிக்கொள்ளுகிறான். சண்டை போட்டால் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்குச் செல்ல மறுக்கிறான் எனவே நீங்கள் ஆலோசனை கூறுங்கள் என்கின்றனர். இவைகளை எங்கிருந்து கற்று கொள்ளுகிறார்கள் என்றால் அருகில் உள்ளோரிடம் அல்லது தாயிடம் இருந்து மட்டுமே கற்று கொள்ள்கின்றனர். மனைவியின் நடக்கைகள் பிள்ளைகளை வெகுவாய் பாதிக்கும். நீங்கள் உங்கள் கணவனை மதிக்காமல் பேசும் வார்த்தைகளை பிள்ளைகள் கவனிக்கிறார்கள். அதையே அவர்கள் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஒருவர் இவ்வாறு கூறுகிறார். இவ்வாறு
"ஊட்டி வளர்த்த ஆசைமக்கள் நல்லோராவதும், அவர்களே ஈட்டியாய் மாரி இதயந்தகர்ப்பதும், ஈன்றோர் வளர்ப்பால்"
நம்முடைய வார்த்தைகளைக் காட்டிலும் செயல்கள் பிள்ளைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஓளவையார் எழுதிய பாடலில் ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது.
"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ்வில்
புலி கிடந்த தூறாய் விடும் (மூதுரை)
இதன் பொருள் மணைவியானவள் நற்குணம் நிறைந்தவளாக இருந்தால் கணவனுக்கு எதுவும் இல்லா விட்டாலும் திருப்தியாக மன சமாதானத்தோடு வாழ இயலும். ஆனால் எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு மனமடிவை உண்டாக்குகிறவளாக மனைவியிருந்தால் அது புலிவாழும் குகைக்குள் கணவன் வாழ்ந்தது போல் இருக்கும். புலிவாழ்ந்த குகைக்குள் ஒரு மனிதன் இருந்தால் எப்பொழுது சண்டை வருமோ, எதற்கெல்லாம் சண்டையிடப்போகிறாளோ, எதில் எல்லாம் குற்றம் கண்டு பிடிப்பாளோ, எந்த காரியத்தை வைத்து இந்த நாளை நரகமாக்குவாளோ என்று பயந்து பயந்து வாழ ஆரம்பிப்பான். என் தான் வீட்டிற்கு போகிறோமோ? என்று நினைத்து நினைத்து வெளியே பிறருடன் நேரத்தைச் செலவிடுவதும், அலுவலகத்தில் Overtime கேட்டு வீட்டிற்குச் செல்வத்தைத் தவிர்க்கிறவனாகவும் மாறிப்போவான்.
என் கணவன் வீட்டிற்கே சரியாக வரமாட்டார் என்று கூறும் பெண்மணிகளே, உண்மை புரிகிறதா? காத்துள்ளவன் கேட்கக்கடவள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி