நற்கிரியை செய்யும் பெண்


    ஒரு கிராம ஆலயத்திற்குச் செய்தி கொடுக்க கண்தெரியாத ஒரு நபர் சென்றார். பேருந்தில் இருந்து இறங்கி பிறர் உதவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். வெயில் மிகவும் அதிகமாக இருந்ததால், ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டார். முன், பின் தெரியாத ஒரு கண் தெரியாத நபர் தமது திண்ணையில் வந்து அமர்ந்து இருக்கிறதைக் கண்ட அந்த வீட்டுப் பெண், அய்யா என்ன இங்க உட்கார்ந்து இருக்கீங்க?என்று வினவ, அவரும் ஆலயத்திற்குச் செல்ல வந்ததையும், வெயிலின் தாக்கத்தால் அமர்ந்து விட்டதையும் கூறினார். கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா? என்று அவர் கேட்க, உள்ளே சென்ற பெண் ஒரு செம்பு நிறைய மோர் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் அதை வியந்து குடித்தார். அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டார் அவர், அந்த பெண்மணி தன் பெயரைக் கூறியதும் ஆச்சரியப்பட்டார். இயேசுவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தன்னுடைய நற்குணத்தாலே அவரை வியக்க வைத்தாள்.  

    பெண்களின் நற்குணமானது கணவனை, குடும்பத்தாரை மட்டும் அல்ல அனைவரின் உள்ளத்தையும் மகிழ்ச்சியூட்டக்கூடியது. 1 தீமோத்தேயு 2:10இல் தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும் என்று பவுல் அடிகளார் வலியுறுத்துகின்றார்.

    ஒரு புது மணமகன் தன நண்பனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டிற்குச் சென்றதும், சோபாவில் அமரச் சொல்லி விட்டு, மனைவியிடம் வந் து, வா உன்னை என் நண்பனிடம் அறிமுகப்படுத்துகிறேன் என்று அழைத்தார். அதற்கு அந்தப் பெண் விருப்பப்படவில்லை. பின்பு தன் நண்பனைப் பார்த்து டீ குடித்து விட்டுச் செல்லுங்கள் என்றார். நிமிடங்கள் பல கடந்தும் டீ வரவில்லை. மெதுவாக மனைவி இருக்கும் அறையைப் பார்த்துப் பார்த்துப் பேசினார். பின்பு சற்று உட்காருங்கள் என்று, உள்ளே போய்ப் பார்த்தால் மனைவி வேறு வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். டீ போடலியா? என்று கேட்க, நீங்க வேணும்னா உங்க பிரண்டுக்கு டீ போட்டுக் கொடுங்க. எனக்கு வேறு வேலையிருக்கு என்றாள். மனம் உடைந்தவனாக தன் நண்பனைப் பார்த்து, வாங்க நாம ஜாலியா வெளியே பொய் டீ குடித்து விட்டு வருவோம் என்று, கூறி பிரச்சனையைக் காட்டிக் கொள்ளாமல் நெளிந்தார். நிலமையைப் புரிந்து கொண்ட நண்பர், தான் டீ இப்போதுதான் குடித்ததாகக் கூறி இருக்கையைக் காலி செய்தார்.

    கணவனுக்குப் பிற ஆண்கள் முன் தலைகுனிவு ஏற்படாமல், தலை நிமிர்ந்து நிற்கச் செய்வரில் மனைவியின் நற்கிரியை முதலிடம் வகிக்கிறது. சாந்தம், அமைதி, உதவும் மனப்பான்மை இவையெல்லாம் பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டிய நல்ல குணங்கள், நம் வீட்டுச் சத்தம் பிறருக்குக் கேட்கும் வண்ணம் சத்தமிட்டுப் பேசுவதால் பெண்ணின் ஆளுமைத் தன்மை உயர்ந்து விட்டது என்று கருதக்கூடாது.

    சாதுசுந்தர்சிங் தன் சகோதரியிடம் கிறிஸ்தவப் பெண்கள் பாக்கியம் பெற்றவர்கள். நீ கிறிஸ்துவை ஏற்றக்கொள்ள மறுக்கிறீயே என்று வினவும்போது, அவரது சகோதரி தன்னிடம் உள்ள நற்குணங்கள், சிறந்த பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவப் பெண்களிடம் இல்லையென்றும், பலர் சோம்பேரிகளாக இருக்கின்றனர் என்றும் கூறினார். இதைக்கேட்ட சாதுசுந்தர்சிங் கிறிஸ்தவப் பெண்களின் நிலையை உணர்ந்து வருந்தினார்.

    நன்கு படித்தப் பெண்களும், பணம் சம்பாதிக்கும் திறமையுள்ள பெண்கள் பலரும் தங்கள் கணவனின் உள்ளத்தில் இடம் பிடிக்காமல் போவதற்கு ஒரு காரணம் நற்குணம் இல்லாமைதான்.
    எனவே நற்குணத்தை வளர்த்துக் கொள்ளுவோம். வளமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்