பொது இடத்தில் பொறுமை

    

    சுற்றுலா ஸ்தலம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்குக் குடும்பமாக ஒரு புதுமணத்தம்பதியினரும் வந்திருந்தனர். நாங்கள் குடும்பமாகச் சாப்பிட உட்கார்ந்திருந்தோம். எங்களுக்கு அருகில் அவர்கள் குடும்பம் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும் போது அந்தப் புது மணமகள் கோபித்துக்கொண்டு நான் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள். கணவர் எவ்வளவோ கெஞ்சியும் அவள் மறுத்து தூர தூர செல்ல ஆரம்பித்தாள். கணவர் தொடர்ந்து கெஞ்சியும், குடும்பத்தினர் கெஞ்சியும் அவள் வரவில்லை. அரைமணி நேரம் கழித்து அந்த மணமகனும் சாப்பிடாமல் வேதனையோடு அமர்ந்திருந்தார். பலர் சிரிக்கும் அளவிற்கு அந்தப் பெண் மோசமாக நடந்து கொண்டது அவருக்கு அவமானமாக இருந்தது.

பொது இடங்களில் கணவன் மதிக்கும்படி மனைவி நடந்துகொள்ள வேண்டும். "அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடு நியாயஸ் தளங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர் பெற்றவனையிருக்கிறான்" என்று நீதி.31:23 கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்? நமது நடக்கை மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
கணவன் மனைவியாக ஒரு திருமணவீட்டிற்கு அல்லது பொது நிகச்சிக்குப் போகிறோமென்றால் சில காரணங்களால் மணக் கசப்பு ஏற்படலாம். உடனே அதற்கு பிரதிபலனாக சண்டையிடுவதோ, சாப்பிடாமல் அடம் பிடிப்பதோ அல்லது அழுது வேதனைப் படுவதோ முழு சந்தோஷத்தையும் அழித்து விடும். மாறாக இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவி பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தபின் அந்த காரியங்கள் குறித்துப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் பொது இடத்தில நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளை நாம் மறந்து விடக்கூடாது.
ஒரு முறை தெருவிலே நடந்து சென்று கொண்டிருந்தேன். தெரு முனையில் பெருங்கூட்டம் நின்றிருந்தது. ஒருவன் ஒரு பெண்ணை நன்றாக அடித்துக் கொண்டிருக்கிறான். அவளைச் சுற்றி ஒரு கூட்டம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு, என் மனைவி நான் எப்படியும் அடிப்பேன். நீ யார் கேட்பதற்கு? என்று சொல்லி அடித்துக் கொண்டிருந்தான்.
சில ஆண்களும் பொது இடத்தில மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் நடந்து கொள்ளுகின்றனர். மனைவியை அடிப்பதே சரியான முறையல்ல. அப்படியிருக்கும்போது, பொது இடத்தில அடிப்பது மிகவும் வருந்தத்தக்கது. மனைவி தவறு செய்தாலும், சொல்லித் திருத்த வேண்டும். அதுவும் மனைவியைத் திருத்துவதற்காகப் பொது இடத்தில் அடிப்பதால் அவமானமும், வேதனையும் தான் பெருகும்.
கொலோ.3:12 கூறுகிறது. "நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத் தாழ்மையையும் சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் உடையவர்களாய் வாழ வேண்டும்" என்று பவுல் குறிப்பிடுகிறார்.
பொறுமையோடு சில காரியங்களை அணுக வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி