மனைவி கிரீடமா? எலும்புருக்கியா?

மாலையில் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். வீட்டில் உள்ளவர்களிடம் குடும்பத் தலைவரை எங்கே என்று கேட்டேன். தனி அரை ஒன்றிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இருமிக் கொண்டே படுத்திருந்த ஒரு ஆண் உருவத்தைக் காட்டினார்கள். இவர்தான் என் கணவர் என்றார்கள். உருவம் இருந்தது எலும்பு எலும்பாய் தெரிந்து கொண்டு. என்ன பிரச்சனை என்று கேட்டேன். அவர் (எலும்புருக்கி) டிபி நோயால் கஷ்டப்படுகிறார்கள் என்றார்கள். அந்த மனிதன் கணவனாக இருந்தாலும், எந்த செயலையும் உற்சாகமாய் செய்ய இயலாத மனிதனாக இருந்தான்.

இந்தச் சம்பவத்துக்குப் பின் வீட்டிற்கு வந்தேன். ஒரு வசனம் என் நினைவுக்கு வந்தது. "குணசாலியான ஸ்திரி தன் புருசனுக்கு கிரீடமாயிருக்கிறாள். இலச்சை உண்டு பண்ணுகிவளோ அவனுக்கு எழும்புறுக்கியாயிருக்கிறாள். "( A helpful wife is a jewel for her husband, but a shamelss wife will make his bones rot)" ஒரு மனிதன் மணிமகுடம் அணிந்தவனாக ஊருக்குள் வலம் வருவதும், எலும்பு கூடாக திரிவதும் மனைவியின் கையில்தான் இருக்கிறது. திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைவதில் கணவன், மனைவி இருவர் கையில்தான் 8௦% இருக்கிறது. மீதி 2௦% தான் பெற்றோர் உறவினர், சுற்றியுள்ள மக்கள். குறிப்பாக கணவனின் மகிழ்ச்சியில் மனைவியின் பங்கு முக்கியம் பெறுகிறது. ஆயிரம் பிரச்சனைகள் வெளியே இருந்தாலும் அன்பான மனைவி இருந்தால் பிரச்சனையை பகிர்ந்து கொள்ளவும், நான் மட்டுமல்ல என் மனைவியும் தோள் கொடுப்பாள். என்னைப் புரிந்துக் கொள்ளுவாள் என்ற மகிழ்ச்சியான எண்ணமும் உருவாகும் .
வெளியிலிருந்து பிரச்னையோடு வீட்டிற்கு வரும் கணவனிடம் வாசலில் வைத்தே வீட்டுப் பிரச்சனைகள் அனைத்தையும் எடுத்துப்பேசும் போது வீடு நரகமாக மாறிவிடுகிறது. கணவன் மனம் தளர்ந்து விடுவான். சந்தோசத்தை இழந்து போவான். ஒரு வேளை குடிகாரனாக கூட மாறிப்போய் விடுகிறான். போதை வஸதுக்களைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகிறான்.
குறிப்பாக நேரில் மனைவியோடு சண்டையிட முடியாத கணவன்மார் குடித்து விட்டு வந்து சண்டையிடுவதும் உண்டு. ஏனெனில் தன் நிலையை மறந்து அடிக்கவும், பொருளை உடைக்கவும் செய்யும்போது, குடிகாரன், அவனைத் திருத்த முடியாது என்று பலர் கூறுவர். போதையில்லன்னா நல்ல மனுஷன்தான் என்று ஒருவன் கூறுவான். இதையே சாக்காக எடுத்துக்கொண்டு குடிவெறியனாக மாறிவிடுகிறான். குடித்து குடித்து வாழ்வை இழந்த மனிதனாக மாறிவிடுகிறான்.
"மனைத்தக்க மாண்புடையவள் ஆகித்தற் கொண்டாள்
வளர்த்தக்காள் வாழ்க்கைத்துணை"
என்று மனைவியின் குணநலன்கள் குறித்து குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இல்லற வாழ்வில் ஈடுபடும் பெண்ணின் நல்ல செயல்களினாலும், குடும்ப நிலையை அறிந்து வாழும் தன்மையாலும் தான் கணவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
எளிதில் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்வதும், வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு யாரிடத்திலும் பேசாமல் இருப்பதும், குடும்ப வைபவங்களுக்குச் செல்லும்போது பிறருடன் அளவளாமல் தனித்து நிற்பதும், மாமியார், மாமனார், உறவினருடன் பேசுவதற்கு விருப்பம் அற்று நிற்பதும், பிறருடன் இசைந்து வாழ மறுப்பதும், பிறருக்கு முன்பாக கணவனை இகழ்வதும், சிறுபிரச்சனைகளைப் பெரிதாக்கி வீட்டார் அனைவரையும் கஷ்டப் படுத்துவதும் கணவனுக்கு எலும்புறுக்கியாயிருக்கும் பெண்ணின் தன்மைகளாகும்.
    நட்பு, ஒத்துழைப்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற நன்னடத்தைகளே கணவனுக்கு கிரீடமாக இருக்கிறது. எனவே அந்த நற்குணங்களுடன் வாழ முற்படுவோம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்