நாங்க Robot இல்லங்க

    

    பிள்ளைகள் exam என்றவுடன் பயந்து போய் மம்மி எனக்கு வயிறு வலிக்கிறது, தலைவலியாக உள்ளது, மயக்கம் வருவது போல் உள்ளது என்று கூறுகிறீர்களா? எனக்குப் பயமாக உள்ளது நான் exam எழுதப் போகவில்லை என்று கூறுகிறீர்களா? எனக்குப் படித்தது எல்லாம் மறந்துவிட்டது நான் fail  ஆகிவிடுவேன் என்று புலம்புகிறார்களா? நான் டாக்டர்க்கு படிப்பதற்கு லாயக்கற்றவள்? எனக்கு அந்த திறமையெல்லாம் கிடையாது என்று புலம்புகிறார்களா? என்னை நீங்க படி படி என்று சொன்னா நான் வீட்டை விட்டு எங்காவது ஓடிப்போய் விடுவேன் என்று சண்டையிடுகிறார்களா?  நீங்க எனக்கு அம்மாவும் இல்ல, அப்பாவும் இல்ல எப்பப் பார்த்தாலும் என்ன படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டு இருந்தா?

    இப்படியெல்லாம் பிள்ளைகள் புலம்புகிறார்கள் என்றால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

    பிள்ளைகள் அதிகமாக மார்க் வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.  அதற்காக பிள்ளைகளை exam-க்கு ஆயத்தப்படுத்துகிறேன் என்று "பார்த்துக்க என் மானத்தை  வாங்கிராதே நான் உன் மார்க்க பார்த்துதான் தலைநிமிர்ந்து நடக்கணும், இல்லன்னா எங்க ஆபீஸ்ல தலை காட்ட முடியாது" என்று உங்கள் கவுரவத்தையும், பிள்ளைகள் படிப்பையும் இணைத்துப் பார்க்கக்கூடாது.  

    பிள்ளைகளுக்கு எக்ஸாம் இருக்கும்போது நீ ஒரு ரூம்ல இருந்து படி. நாங்க உன்னையே பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? நாங்க டிவி பார்க்கிறோம்.  நீ உக்கார்ந்துகிட்டு டிவி-யில் என்ன ஓடுதுன்னு கேட்டுகிட்டு இருக்காத என்று நீங்க டிவி பார்க்க போயிட்டாதீங்க.  பிள்ளைகள் கவனம் நிச்சயமாக டிவி-யில் தான் இருக்கும்.  பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் எப்பொழுது இருந்தாலும் டிவி பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். 

    உறவினர்கள், நண்பர்களுக்கு தங்கள் பிள்ளைகள் தேர்வு எழுத்துவதைக் கூறி ஆண்டவரிடம் வெண்டுதல் செய்யக் கூறுங்கள்.  அப்படிக்கூறும் போது அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்வர்.  அதேவேளையில் தேர்வு நேரத்தில் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள்.  விருந்தினர்கள் வந்தால் பிள்ளைகளுக்கு படிக்கும் மூடு இல்லாமல் போய்விடும்.  

    தேர்வு நேரத்தில் பிள்ளைகளிடம் அதிக அக்கறை கொண்டு, உன் புக்கைக் கொடு எப்படி படித்திருக்கிறாய் என்று பார்க்கப்போகிறேன் எனக் கூறி பிள்ளைகளிடம் கேள்வி கேட்டால்  சில வேளைகளில் அவர்கள் ரீவ்ய்ஸ் பண்ணாத பகுதிகளில் இருந்து பதில் கூற இயலாமல் தவிப்பர்.  உடனே புத்தகத்தை தூக்கி வீசிவிட்டு நீ படிச்ச படிப்புக்கு பெரிய கோழி முட்டை தான் கிடைக்கும், நீ டாக்டர் ஆக மாட்ட, காம்பௌண்டர் கூட ஆக கஷ்டம் தான், இப்படியே போய் பரீட்சை எழுதுனா பியூன் வேலை தான் கிடைக்கும் என்று எரிந்து கொட்டாதிருங்கள்.  நீ படிச்சது மறந்து போய்விடலாம் கவலைப்படாதே.  முன்பு பிடிச்சதை ஒரு ரீவய்ஸ் பன்னு.  பின்பு நான் அந்த பகுதியிலிருந்து கேள்வி கேட்கிறேன்.  Exam time - யில் பயப்படக்கூடாது.  நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று உறுதுணையாக இருங்கள்.  

    பெற்றோர்கள் தேர்வு நாட்களை ஒட்டி பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது நன்று.  பிள்ளைகள் தனிமையாக இருக்கும்போது படித்துவிட்டு யாரிடமும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் போர் அடித்து தூங்கி விடலாம் அல்லது கொஞ்ச நேரம் டிவி பார்ப்போமே என்று டிவி, பார்க்க ஆரம்பித்து நேரத்தை விரயம் செய்யலாம்.  அதைத் தவிர்க்க பெற்றோர் உடன் இருப்பது நல்லது.  பிள்ளைகள் படிக்கும் பொது ஜூஸ் செய்து கொடுத்து சற்று நேரம் பேசிக் கொண்டும் இருக்கலாம்.  அதே வேளையில் நீங்களும் ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தால் பிள்ளைகள் உற்சாகமாக படிக்க இயலும்.  

தேர்வுக்குப் பின்...

    ரிசல்ட் வரும் நாட்களை பயத்துடன் பிள்ளைகள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  நீங்கள் பிள்ளைகளிடம் நீ என்ன மார்க் வாங்கப் போறீயோ,  நான் கேட்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேனோ? அல்லது நான் தலையில முக்காடு போட்டிட்டு போக வேண்டிய சூழல் வருமோ என்னவோ? என்று எதிர்மறையாகவே பேசிக்கொண்டிருந்தால் பிள்ளைகள் மிகுந்த அச்சத்துடன் இருக்க ஆரம்பிப்பார்கள்.  

    ஒரு நாள் என் மகள் மற்ற பிள்ளைகளுடன் காலாண்டுத் தேர்வு முடிந்த உடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள்.  அவள் தோழி அவளைப் பார்த்து, எங்க அப்பா, நீ முதல் ரேங்க் வாங்காததால் என்னுடன் பேசக்கூடாது என்று கூறினாங்க.  எங்க அம்மா என்னை அடித்தார்கள் என்றும் கூறி வருந்தியுள்ளாள்.  அப்பொழுது என் மகள், எங்க அப்பா என்னை அடிக்கல, குறைந்த மார்க் வாங்கின subject-ல நல்ல முயற்சி பானு என்று சொன்னார்கள்.  எங்க அப்பா ஒருபோதும் படிப்பிற்காக அடிப்பது இல்ல என்று கூறியுள்ளான். 

    உடனே அவள் தோழி உங்க அப்பா மாதிரி எனக்கு அப்பா இருந்தா நல்லா இருக்கும் என்று கூறியுள்ள.  இந்த சம்பவம் ஒரு பிள்ளையின் தேர்வு முடிவுகள் அவளிடம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.  

    பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட ரிசல்ட் வந்தாலும் பரவாயில்லை, நீ நன்றாக எழுதியுள்ளாய் கவலையைவிடு.  கடவுள் விட்ட வழிபோல் இருக்கட்டும் என்று தைரியம் கொடுக்க வேண்டும்.     

    ஒரு முறை +2 தேர்வு முடிவு வெளியானபோது ஒரு பெண் பிள்ளை தான் விரும்பிய MBBS படிப்பதற்கு போதுமான மார்க் வரவில்லை என்று தற்கொலை செய்து கொண்டாள்.  காரணம் பெற்றோர் நீ படித்தால் MBBS இல்லை என்றால் மற்ற அனைத்தும் வேஸ்ட் என்று பேசியே வளர்த்துள்ளனர். 

    இப்படி பிள்ளைகளுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.  பிள்ளைகள் நல்ல மார்க் பெற முடியாவிட்டால் தற்கொலை செய்வதற்கு இது தான் காரணம்.   பிள்ளைகளுடைய capacity-யை நாம் புரிந்து கொள்ள வேண்டும், Quarterly, Half yearly  மற்றும் Revision மார்க்கை வைத்து எவ்வளவு மார்க் எடுக்க முடியும் என்பதை ஓரளவு தெரிந்து நமது மனநிலையையும், பிள்ளைகள் மன நிலையையும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

    Over Expectation  என்பதைத் தவிர்க்க வேண்டும்.  பிள்ளைகள் எட்ட முடியாத, வாங்க முடியாத அதிக மார்க்கை Achieve  பண்ணைச் சொல்லுவது தவறு. எவ்வளவு மார்க் வாங்கினாலும் என் மகன் / மகள் தான்.  நான் எப்பொழுதும் அன்பு செலுத்த ஆயத்தமாக உள்ளேன் என்பதைக் காட்டுகள்.  நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி