மனிதனை மனிதனாக்குவோம்

 

 பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளைப் பார்த்து நீ நமது குடும்பத்தில் மருத்துவராக வேண்டும்.  முதல் ரேங்க் எடுப்பதில் கருத்தாக இருக்க வேண்டும் என்றனர் பெற்றோர்.  பள்ளியிலும் "மதிப்பெண் ஒன்றுதான் வாழ்க்கை" என்பதை எழுதாத சட்டமாக வைத்திருக்கின்றனர்.  பெற்றோரின் விருப்பப்படியே மிகவும் கஷ்டப்பட்டு அந்த மாணவி முதல் இடத்தை தக்கவைத்து இருந்தான்.  இறுதி வருடத்து தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டது.  ஆசிரியர்கள் பல வார்த்தைகளால் திட்டினார்.  வீட்டிற்கு மாலையில் வந்தவள் தன்பெற்றோர் இனிப் பேசப்போவதை நினைத்துப் பயந்து வேதனைப்பட்டாள்.  படிப்பின் மீது பெரிய வெறுப்பு வந்தது.   தற்கொலைக்கு  முயன்றாள்.  ஆனால் பெற்றோர் தீடீரென்று பார்த்து அவளை காப்பாற்ற முற்பட்டனர்.  ஏன்  இதை செய்தாய் என்று கேட்ட போது, நீங்க திட்டுவீங்க என்று பயந்து இறந்திடலாம் என்று முடிவு செய்தேன் என்று கூறி கண்களை மூடினாள்.  

 அன்புக்குரியோரே கல்விகற்கும் மாணவர்களின் திறமைகளை உணராமல் மதிப்பெண் பெறுவதையே குறிக்கோளாய் வலியுறுத்தி மாணவப் பருவத்தையே கசப்பாக மாற்றுவது நியாயமா? இன்று பள்ளிச்சூழலும், கற்பிக்கும் முறைகளும், தினந்தோறும் தேர்வுநடத்துகிற முறைகளும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.  LKG யில் இரண்டாவது ரேங்க் பெற்றாலே மருத்துவராகும் வாய்ப்பை இழந்தது போல் துடிக்கின்ற பெற்றோர்களும், பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறுவதால் பள்ளிக்கு நற்பெயரை வாங்கி அட்மிஷனில் பணம் குவிக்கும் நிர்வாக முறையும், நல்ல இந்தியக் குடிமக்கள் உருவாக்குவதில் தங்கள் பங்களிப்பு என்ன என்பதைக் கேள்வி குறியாக்கியுள்ளனர். 

பலர் நன்கு படித்துப்பட்டங்கள் பெற்றாலும் தனிப்பட்ட வாழ்விலும் சமூகத்தோடு ஒத்துப்போகும் சூழலிலும் வேறுபட்டுத் தோல்வி அடைகின்றனர்.  எனவே நல்ல மனிதர்களாய் வாழ மூன்று முக்கிய வழிகளை  பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவசியம்.

1.(Personal Adjustment) தன் குணத்தோடு தானே ஒத்துப்போதல்

    ஒவ்வொருவருக்கும் சில குணங்கள், எதிர்பார்ப்புகள், விருப்பு,வெறுப்புகள் தனித்தனியே அமைந்திருக்கும்.  இந்த குறை, நிறைகளை ஏற்று அவற்றை பயனுள்ள வகையில் மாற்றிக்கொள்ளவேண்டும். சமுதாயத்திற்குப் பயனுள்ள நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளவும் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத தீய குணங்களை விட்டுவிடவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உதவிட வேண்டும்.  

2.(Social Adjustment) சமூக நல்லிணக்கம்

    ஒருவர் தனது குணத்தையும், தன்னுடைய நடவடிக்கைகளையும் தானே ஏற்றுக்கொள்வது போன்று மற்றவர்களின் உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ளுகிற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு வாழப் பழக வேண்டும்.  இன்று மாணவர்கள் மத்தியிலே சாதிச் சண்டைகள், சமயச் சண்டைகள் ஏற்படுகிறது.  இந்த மன எழுச்சியைக் கட்டுக்குள் வைத்து நல் உறவை வளர்க்க முற்படவேண்டும்.  ஒருவருடைய கருத்துக்கள் பிடிக்காவிட்டாலும் நட்புறவுக்காக தன்னுடைய கருத்துக்களை விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையை வளர்க்க ஆசிரியர்கள் உதவி புரிய வேண்டும்.  

    மாணவப் பருவத்திலேயே கோபம், குழு மனப்பான்மை, சண்டையிடுதல், பிறரை இழிவாகப் பேசுதல் போன்றவற்றை பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பழகிக்கொள்கிறார்கள் இச்சூழலில் தன்னுடைய உணர்வுகளைப் போன்று பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ளவும், மதிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் பழக்குவிக்கப்பட வேண்டும்.  முன்பின் அறியாத மாணவனுக்கு உதவவும், பயத்தில் மாட்டிக் கொண்டோருக்காக இரக்கப்படவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

3.(School/College Adjustment) பள்ளி கல்லூரியோடு ஒத்துப்போகுதல்

    பள்ளிக்கூடத்தின் அல்லது கல்லூரியின் குறிக்கோள், நடைமுறை ஒழுங்குகள் போன்றவற்றுடன் ஒத்துபபோக பழக்குவிக்க வேண்டும்.  பிறரோடு போட்டிப் போட்டு படிப்பிலும் விளையாட்டிலும் முன்னுக்கு வருவதிலும் முனைப்போடு இருப்பர்.  ஆனால் இந்த வெற்றிக்காகப் போராடும் மனப்பான்மையினால் ஏற்படும்.  பொறாமையும், குழுவாக வெறித்தனமும்,  மூர்க்கமாக பிறருடன் சண்டையிடுவதும் தவிர்க்கப்பட்டு தவிர்க்கப்பட்டு இணக்கமான சூழ்நிலை ஏற்பட ஆசிரியர்கள் உதவ வேண்டும்.  பள்ளியில் கல்லூரியில் மின் விளக்கை உடைப்பவர்கள் பின் நாட்களில் தீவிரவாதிகளாகவும், அரசுப் பேருந்துகளை ஆட்களை வைத்துத் தீக்கொளுத்துகிறவர்களாகவும் மாறிவிடுவர்.  கல்வி கற்றுக் கொடுப்பது பதவியை, பணத்தைச் சம்பாதிக்க மட்டுமல்ல. கல்வி, ஒரு மனிதனை மனிதனாக, சமுதாயத்திற்கு உகந்தவனாக மாற்ற வேண்டியது அவசியம்.  கல்லாதவனைக் காட்டிலும் கற்றவன் திருடுவதில், சமுதாயத்தை அழிப்பதில் பெயர் பெற்றவன் என்பதை மாற்றிக் காண்பிக்க வேண்டும்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க visit: blog.TdtaChristianMatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்