எதிரும் புதிரும்

    வாலிப தம்பி ஒருவர் மிக நேர்த்தியாக உடை அணிந்து மிகுந்த மகிழ்ச்சியோடு ஆலயத்திற்கு வந்திருந்தார்.  ஆராதனை முடிவுற்றதும் அவருடைய பேண்ட் மிக அழகாகவும், அதிகமான பாக்கெட் உள்ளதாகவும் இருக்கிறதே என்று கூறினேன்.  எல்லா பொருட்களையும் நீ பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.  எதையும் கையில் தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் என்று நான் கூறியதும் விழுந்து விழுந்து சிரித்தான்.  உங்களுக்கு கூட பிடிச்சிருக்கு ஆனா எங்க அம்மா அப்பாவிற்குப் பிடிக்கல என்ன சொல்ல என்று வருந்திக் கொண்டான்.  சற்று தொலைவில் அவன் பெற்றோர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.  அவர்களிடத்திற்குப் போய் உங்கள் மகன் மிக அழகான பேண்ட் அணிந்திருக்கானே என்று கூறினேன்.  

     அந்த காண்ட்ராவிய ஏன் கேட்கறீங்க. அழகான பேண்ட் அவங்க அப்பா வாங்கிக்கொடுத்ததை வேண்டாம் என்று கூறிவிட்டு இதை எடுத்து வைத்துக் கொண்டான்.  அதனால் அவங்க அப்பாவும், மகனும் பேசமாட்டாங்க  என்று வருத்தத்தோடு பையனின் அம்மா கூறினார்.  பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான உறவு நிலைகளில் பல இடங்களில் விரிசல் காணப்படுகிறது.  பையனின்        fashion           என்று எடுத்துக் கொள்ளுகிறார்களே நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?

ஆலோசனையும் அலட்சியமும் 

     பிள்ளைகள் வாழ்வில் பெற்றோர் ஆலோசனைகளைக் கூறுவது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் work out ஆகும். தோளுக்கு மேல் வளர்ந்தவுடன் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் இருப்பர்.  அநேக காரியங்களை நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கென்று சுய சிந்தனை, முடிவெடுக்கும்  ஆற்றல் பெருகிவிடுகிறது.  எனவே பெற்றோரின் ஆலோசனைகளைப் பிள்ளைகள் அலட்சியமாக பார்க்கும் சூழல் நேரிடுகிறது.  

     பெற்றோர் தங்கள் அனுபவங்களை பிள்ளைகளுக்கு ஆலோசனையாக வைக்க விரும்புகின்றனர்.  ஆனால் பிள்ளைகளுக்கோ பழங்கால கதைகளைச் சொல்லி நம்மை திசை திருப்புகிறார்களே என்ற ஆத்திரம் வருகின்றது.  தங்களது தனித்துவம் பாதிக்கப்படுவதாக நினைத்து ஆத்திரப்படுகின்றனர்.  அதே வேளையில் பிள்ளைகள் பெற்றோரையே எதிரிகளாக பார்க்கும் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர்.

     எனவே, பிள்ளைகளுக்குப் பெற்றோர் ஆலோசனை சொல்ல முடியாத சூழலுக்குள் செல்லுகிறதே என்ன செய்வது என்ற குழப்பங்கள் ஏற்படலாம்.  பிள்ளைகள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதனை ஒவ்வொரு நடக்கையிலும் பிள்ளைகள் புரிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும்.  அவர்களிடம் நண்பர்களை போன்று பழகி விளையாட்டாக  தமது கருத்தைப் பகிர்ந்து கொள்ள முற்பட வேண்டும்.  

கண்டிப்பும் பிரிதலும்   

     ஒரு பள்ளியில் பெற்றோர் கூடுகை நடத்த சென்றிருந்தேன்.  அப்பொழுது பெற்றோரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.  உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளைக் கேட்காமல் செல்லும் போது என்ன செய்வீர்கள் என்று பெற்றோரிடம் கேட்டேன்.  அதற்கு பெரும்பான்மையான பெற்றோர்கள் அடிப்போம் என்றனர்.  அடிப்பதினால் உங்கள் பிள்ளைகள் திருந்தி  விடுகின்றனரா? என்று கேட்ட போது திருந்தினாலும், திருந்தாவிட்டாலும் அடி கொடுத்தாச்சு என்ற ஒரு மனதிருப்தி என்றனர்.  

     இந்த மனதிருப்திக்குப் பின்விளைவுகள் என்னவென்றால் பெற்றோரிடம் பிள்ளைகள் பேச மறுத்து ஒதுங்கி விடுகின்றனர்.  நிரந்தரமாக பிரிவும், தனியாக நேரத்தைச் செலவிடுவதுமாக மாறிவிடுகின்றனர்.  பரஸ்பர அன்பும், உரையாடலும் அற்றுப்போகும்  போது பிரிவையே சாதகமாக்கித் தாங்கள் விரும்பிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடத் தொடங்கி விடுகின்றனர்.  

     கண்டித்து திருத்துவது என்பது எப்போதும் சாத்தியமானது இல்லை.  

மரியாதையால் விளையாதது அதிகாரத்தால் விளையாது என்ற மகாத்மாவின் கூற்று மிகவும் உண்மையாகும்.  எனவே, பிள்ளைகளின் மனநிலையை அறிந்து அவர்கள் உணர்வுகளைப் புரிந்து சரியான பாதைக்கு வழி நடத்த வேண்டும்.  

திருத்த நினைப்பதும் மறுப்பதும்

     பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் தாயை மிகவும் வெறுத்தான்.  அடிக்கடி படிக்கக்கூறுவதால் படிக்க மறுத்து விட்டு தன தாய்க்கு பாடம் கற்பிப்பதற்காக நண்பர்களுடன் உட்கார்ந்து அரட்டை அடிப்பதும், சினிமாவிற்குச் செல்லுவது, காலம் தாழ்த்தி இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து தூங்குவதும், காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து விடுபவனாக மாறினான்.  மகனை திருத்த முயற்சி எடுத்ததால் அந்த முயற்சிக்கு பல மடங்கு எதிராக செயல்பட்டான்.  

     இப்படி பல பிள்ளைகளைத் திருத்த முயலும் போதும் அவர்களது தவறான குணங்களை விமர்சிக்கும் போதும் வெகுண்டு எழுப்புகின்றனர்.  எனவே பிள்ளைகளின் வித்தியாசமான நடக்கையை விமர்சிக்கும் போது உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள நட்பைக் கொல்லும் நஞ்சாக விமர்சனம் மாறிவிடுகிறது.  எனவே திருத்த வேண்டுமானால் நட்பை வலுப்படுத்திப் பக்குவமாகப் பகிர வேண்டும்.

     அதே வேளையில் நம்மைப் போலவே இருக்க வேண்டும் என்று அவர்கள் தனித்துவத்தை இழக்கச் செய்ய நினைப்பது பெற்றோரின் தவறாகும்.  ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தனி குணமும் விருப்பமும் விருப்பமும் நிறைந்தவர்களே.  இதில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  எனவே, பிள்ளைகளுடன் நல் உறவை வலுப்படுத்திப் இன்பமாய் வாழ்வோம்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம்

 உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி