உள்ளம் கொள்ளை போகுதே

 


ஐயா நான் பெண்ணைத் திருமணம் செய்யவில்லை, பிசாசை திருமணம் செய்துள்ளேன், ஆகையால் என் வாழ்க்கையே கசப்பாக உள்ளது என்று கத்தினான் திருமணமான ஒரு இளம் ஆண். பதிலுக்கு அந்தப் பெண் நான் ஏமாந்து போய் விட்டேன் என்று கத்தினாள். வாழ்க்கையில் அனைவரும் விரும்பினது போன்று வாழ்வு அமைந்து விடுகிறதா என்ற கேள்வியை எழுப்பினாலோ அல்லது நாம் நினைத்த அத்தனை குணமும் எதிர்பார்ப்பும் நமது துணையிடம் இருக்கிறதா என்றாலோ இல்லை என்பதே நமது பதிலாகும். அப்படி என்றால் சேர்ந்து வாழ இயலாதா? சேர்ந்து வாழ்கிறவர்கள் எல்லாரும் அவர்கள் விரும்பியபடி அமைந்துவிட்டதால் தான் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை.
வாழ்க்கையை நரகம் ஆக்குவதும் பரலோகம் போன்று மகிழ்ச்சியாக வைப்பதும் நம் கையிலேதான் உள்ளது.
ஒருவர் மற்றோருவரிடம் "நமது மனைவியை விட்டுக்கொடுப்பது, தட்டிக்கொடுத்து எது நல்லது" என்றார். அதற்கு மற்றவர், "தட்டிக் கேட்டுப் பாருங்கள் பதிலுக்கு முறைத்தால் விட்டுக் கொடுத்து விடுங்கள்" என்றார். இப்படிப்பட்ட சுழலில் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்பதற்கு சில குறிப்புகள்.
ஒரே குறிக்கோளுடன் வாழ வேண்டும்
வாழ்க்கையில் நாம் இருவரும் துன்பத்திலும் இணைந்து நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக வாழப்போகிறோம் என்ற உறுதியான குறிக்கோளை மனதில் நிலை நிறுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நாம் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என்று மனதில் பலமுறை கூறி உறுதி எடுக்க வேண்டும். ஆலயத்தில் நாம் கொடுக்கிறோமே வாக்குறுதி நன்மையிலும், தீமையிலும், சுகத்திலும், சுகவீனத்திலும், நாம் உயிரோடிருக்குமளவும், என்பதை உள்ளத்தில் நன்றாகப் பதிந்திருக்க வேண்டும்.
இறைவனின் குறிக்கோள் "மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல". ஆகவே ஏற்றதுணையை நமக்கு தந்துள்ளார் என்ற நிறைவு நமக்கு வர வேண்டும். இவனை அல்லது இவளைக்காட்டிலும் மற்ற நபர் நம் வாழ்வில் இருந்தால் சிறந்ததாக இருக்கும் என்று இரண்டாம் திருமணத்தை நோக்கும்போது நமது குறிக்கோள் இறைவனின் திட்டத்தை உடைத்தெறிகிறது.
நான்கு வழிச்சாலையின் வழியாக நான் கன்னியாகுமரிக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எனது நண்பர்கள் மற்றோரு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்கள், ஒரு குறிப்பிட்ட பகுதி வந்த உடனே பின்னால் இரண்டு சாலைகள் ஓன்று போல் சென்றது. அதில் ஆளுக்கொன்றாக முன்னும் பின்னும் சென்று கொண்டிருந்தோம். சில நிமிடங்களுக்குப் பின்னால் அவர்களை நான் பார்க்க முடியவில்லை. நான் கன்னியாகுமரி சென்று அடைந்த பின்னரும் எனது நண்பர்கள் வந்து சேரவில்லை. அரைமணி நேரம் கழித்து வந்தனர். அவர்கள் வந்த பாதை கன்னியாகுமரியின் வெளிப்பகுதிக்கு நேராக கொண்டு சென்றுவிட்டது. வாழ்க்கைப் பயணத்திலும் கணவன்-மனைவியாக வாழ முற்படும்போதும் நாம் செல்லும் பாதை, சற்று மாறும் போது நம்மை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அடிக்கடி நமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இல்லற வாழ்க்கையில் பயணிக்கிறோமோ என்று கலந்துரையாடித் தெரிந்து கொள்ள வேண்டும். இருவரும் ஒருவர் மற்றவரை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கமுற்பட வேண்டும். "அவனவன் தனக்கானவைகளுக்காக அல்ல பிறனுக்கானவைகளையே நோக்குவானாக" என்ற திருமறை வாக்கியத்தின்படி இல்லறத்தில் இனிய வாழ்க்கை என்ற பொதுநோக்கோடு வாழ முன்வர வேண்டும்.
உணர்வுகளை மதிக்கவேண்டும்
ஒரு நபர் பிற நபரின் உணர்வுகளில் இருந்து நிச்சயமாக வேறுபடுவர். பணி, பிறந்த சூழல், கலாச்சாரம், கிராமம், நகரம் போன்று பல்வேறு சூழல்களில் வளர்ந்த நபர்கள் சேர்ந்து வாழ முற்படும்போ,து பிறர் உணர்வுகளைப் புரிந்து மதிக்கவேண்டும்.
ஒரு குடும்பத்தில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் உற்சாகமாக இருந்தனர். இருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து வாடா, போடா என்று பேசிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்ட அந்த வீட்டுப் பெரியவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன நமது மகனை மரியாதை இல்லாமல் வாடா, போடா என்று பெயர் சொல்லி அழைக்கிறாளே என அதிர்ந்து விட்டனர். ஆனால் இன்றைய நாகரீக சூழலில் பெண்கள் தங்கள் கணவனை இப்படி வாடா, போடா என செல்லமாக அழைக்கின்றனர். அதை அவர்கள் மகனும் விரும்புகிறான். ஆனால் என்னங்க, என்னங்க என்று அழைத்தவர்களுக்குத் தான் இதை ஏற்க முடியவில்லை.
மற்றோரு புறத்தில் பணத்தை மையமாகக்கொண்டு வீண் செலவு செய்யாமல், கருமியாக இருக்கும் நபர்களை மணக்கும் சமூக ஆர்வம்கொண்டு செயல்படும் பெண்களுக்கும் பிரச்சனைகள் வர நேரிடும். ஏனென்றால் இருவரின் உணர்வுகளும் மனதில் தாங்கியுள்ள சிந்தனைகளும் வேறுபடுகிறது. இதை புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் மதிப்புக்கொடுத்து செயல்படும்போது அதனால் வரும் பிரச்சனைகளை மேற்கொள்ள முடியும்.
டாக்டர்கள், எஞ்சினீர்கள், முனைவர்கள் என்று சமூக அந்தஸ்தைப் பெற்றவர்கள் குடும்பவாழ்க்கையில் சமாளிக்க முடியாத காரியங்களை, உணர்வுகளை மிக எளிதாக ஏழை குடியானவர்கள்,படிக்காதவர்கள் சமாளிக்கின்றனர். ஒரு தினசரி குலி வேலை செய்யும் மனிதன் என்னோடு பேசும் போது இதனை புரிந்து கொண்டேன்.
இரவு எங்கள் வீட்டில் மண்சுமப்பதற்காக வந்திருந்தார். அவர் காலை முழுவதும் வேலைசெய்துவிட்டு வீட்டிற்கு செல்லாமலே இரண்டாவது இரவு வேலைக்கு வந்திருந்தார். அவர் மனைவிக்கு இது தெரியாது. ஆனால் வீட்டிற்குச் செல்லும்போது மனைவி கோபப்படுவாள். எனவே வீட்டின் மாடியில் சத்தம் போடாமல் படுத்துக் கொள்வேன் என்றார், பின்பு காலையில் நான் வேலை செய்தது உண்மைதானா என உங்களுக்கு போன் பண்ணுவாள், உண்மைதான் என்றதும் என்னை புரிந்துக்கொள்வாள். எனவே நான் அவளிடம் சண்டையிடுவதில்லை. என் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு நாங்க இரண்டுபேரும் சேர்ந்து இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்றார். இதைக்கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்
திருமணம் நிச்சயம் செய்தவுடன் மணமக்கள் பரிமாறிககொள்ளும் ஒரே gift செல்போன்தான். நானும், நீயும் பேசிக்கொண்டே இருப்போம் என்று பல்வேறு செல்போன்கள் free call பண்ண வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
ஒரு வாலிபன் திருமணம் நிச்சயம் ஆனவுடன் மணிக்கணக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் பேசிக்கொண்டே இருந்தான். வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் என்ன தான் பேசுகிறானோ ? என நினைத்தனர். படித்தவர்களுக்கு ஒரு எண்ணம் பிள்ளை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வார்கள் என்ற திருப்தி. திருமணம் சிறப்பாக முடிந்தது. போனில் பேசியவர்கள் நேரில் பேச விரும்பாமல் முறைத்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது போன் செய்தால் கட் பண்ணப்படுகிறது. குடும்பம் இரண்டாக பிரிந்தது. பல மணிநேரம் போனில் பேசினாலும் நிஜவாழ்க்கை என்பது மறைவாகவே இருக்கிறது. போலி தோற்றமே போனில் தெரிகிறது.
வாழ்க்கையில் உங்கள் துணையின் விருப்பங்கள், பொறுப்புகள், பலம், பலவீனம், ஆகியவற்றைப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். தன் மனைவி தன்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்று தெரியாமல் ஒரு காரியத்தைச் செய்தால் பயனளிக்காது.
ஒரு கணவன் தன் மனைவிக்கு அடிக்கடி பை (Bag) வாங்கிக் கொடுப்பார். அந்த மனைவிக்கு அவர் வாங்கிவரும் Bag பிடிக்காது. எனவே நீங்கள் வாங்க வேண்டாம் என்று கூறினாள். ஆனால் அந்தக் கணவனோ திரும்பத் திரும்ப வாங்கிக் கொடுத்தார். ஒரு நாள் தனக்குப் பிடித்த ஒரு பொருளை தன் கணவனுக்கு கிப்ட் ஆக வாங்கிக் கொடுத்தாள், அந்த கணவனோ, முகம் சுளித்தான். நாம் நமது விருப்பத்தை மற்றவர் மீது திணிக்கக்கூடாது மற்றவர்விருப்பத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
மேலும் பல செய்திகளை படிக்க visit: blog.TdtaChristianMatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி