முதலும் கோணல் முற்றிலும் கோணல்


வீடு  சந்திப்பிற்காகச் சென்று இருந்தபோது ஒரு குடும்பத்தின் நிலை என்னைச் சிந்திக்க வைத்தது.  அப்பொழுது காலை 9.00 மணி வீட்டிற்கு முன் நின்று தட்டினேன்.  திறப்பதற்குப் தாமதம் ஆனது.  எல்லாரும் வேலைக்குச் சென்று விட்டார்களோ என்று நினைத்த போது தான் உதயமானது.  இன்று அரசு விடுமுறையாச்சே.  வேலைக்குச் செல்ல வாய்ப்பில்லை என உணர்ந்தேன்.  மீண்டும் காலிங்பெல்லை என்னோடு வந்த ஊழியர் அடித்தார்.  தட்டுத் தடுமாறி வந்து வீட்டின் கதவை வெறுப்போடு திறந்தனர்.  யாரு இப்போது வந்து தொந்தரவு பண்ணுவது என்ற உணர்வோடு.

நாங்கதான் வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்த உடன் வீட்டிற்குள்ளே போய் பிள்ளைகளைத் தட்டி எழுப்பி, "ஓடு ஓடு, ஐயா ஜெபம் பண்ண வந்திருக்காங்க" என்று விரட்டி விட்டார் குடும்பத்தலைவர். 

ஐயா வேறு ஒன்றும் இல்லை.  இன்றைக்கு விடுமுறை அதான் கொஞ்சநேரம் தூங்கலாமே என்று தூங்கிக் கொண்டிருந்தோம்.

மனைவி கண்ணைத் துடைத்துக் கொண்டு ஸ்தோத்திரம் போட்டாங்க.  என்னம்மா மணி 9 ஆயிட்டே எப்பொழுது சமைப்பீர்கள் என்று கேட்டேன்.  

சிரிச்சிக்கிட்டே, 'ஐயா இனி எங்க சமைக்க.  அவங்க போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க, மத்தியானமும் பிரியாணி வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கிறேன், அதனால தான் இவ்வளவு நேரம் தூக்கம்' என்றார்கள்.  

தூக்கம் என்பது மனுஷனுக்கு முக்கியம்தான்.  ஆனால் படிக்கிற பிள்ளைகளுடன் இரவு முழுவதும் T.V   பார்த்துவிட்டுப் பகல் முழுவதும் தூங்குவது நல்ல எடுத்துக்காட்டாக அமையாது.  பிறந்த குழந்தை 18 மணி நேரம் தூங்கலாம், மூன்றிலிருந்து ஐந்து வயது வரை, 11 மணி நேரம் தூங்கலாம். ஆனால் வயது வர வர 8 மணிநேரம் தூங்கினால் போதுமானது.  இப்படித் தூங்கி விழித்தாலே வாழ்வில் 23 வருடம் துங்கிதான் விழிக்கிறோம்.  அப்படி இருக்கும் போது 30 வயதிலே 11 மணி நேரம் தூங்கினால் பிள்ளைகள் நம்மிடம் எதைக் கற்றுக் கொள்வார்கள்.                  

திருமணமாகப்போகும் பிள்ளைகள் தன் தாயிடம் எதைக் கற்றுக்கொள்ளும்.  தன் கணவனுக்கு, பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தெரியாமலே போய்விடும் அல்லவா.  எங்க அம்மா இப்படித்தான் செய்வாங்க, எங்க வீட்டில் லீவு என்றால் பகல் 11 மணிக்குத்தான் எழும்புவோம்.  வேறு வேலைத் தான் என்ன இருக்கிறது என்று தங்களுக்குத்தானே திருப்திபடுத்திக் கொள்வது நியாயமா?.                   

சோம்பல், மறதி, உறக்கம் போன்றவைகள் அழிந்துபோகக் கூடியவர்கள் விரும்பி ஏற்கும் காரியங்கள்.  சோம்பலுடன் உறங்கிக் கழிப்பவர்களுக்கு "தரித்திரம் வழிப்போக்கனைப்போல் வருகிறது" என்று நீதிமொழிகள் கூறுகிறது.  

குதிரைகளைப்பாருங்கள், அவைகள் நின்று கொண்டே தூங்குகின்றது.  அவைகளின் கால்கள் தடுமாறாமல் நின்று கொண்டுதான் இருக்கிறது.  பட்டுப்பூச்சி, விட்டில் பூச்சிகள் தூங்கினாலும் அவற்றின் தோல் மூலம் வெளிச்சத்தை  உணர்கின்றனவாம்.         

திருமறையில் சிம்சோன் தெலீலாளின் மடியில் தூங்கினதால் தன் பலத்தை இழந்துப்போனான் .  தூக்கம் என்பது நமது சரீரத்திற்குத் தேவைதான். தூங்கி எழுவதால் நமது உடல் மற்றும் மூளை  கூட சுறுசுறுப்பாய் இயங்கப் புதுப் பெலன் கிடைக்கின்றது.  ஆனால் எப்பொழுதும் தூக்கத்தை விரும்பக்கூடாது.  "தூக்கத்தை விரும்பினால் தரித்திரனாவாய்" என்று சாலமோன் திட்டவட்டமாகக் கூறுகிறார்.  எனவே நமது பிள்ளைகள் நம்மைப்பார்த்து அதிகநேரம் தூங்குவதற்குக் காரணமாய் மாறிவிடக் கூடாது.  நமது நாட்டின் பிரதம 

மந்திரியாய் இருந்த இந்திரா காந்தி அவர்கள், 3 மணி நேரம் தான் தூங்குவார்களாம்.  புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் போர்க் காலங்களில் 2 மணி நேரம் தான் தூங்குவார்களாம்.  இவர்கள் சாதனைக்குக் காரணம் நேரத்தைப் பணி செய்ய ஒதுக்கியதே.  காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் தான் நமது பிள்ளைகள் உலகத்தில் பிழைக்க முடியும் என்பதை மறந்து விடாதிருங்கள்.  

குறிப்பாகப் புதிதாகத்  திருமணமான பெண் பிள்ளைகள் காலை  எழுவதும் தூங்கச் செல்லும் நேரமும் புகுந்த வீட்டில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும்.  எங்க வீட்டில் இப்படித்தான் 11 மணி வரை தூங்குவோம் என்றால் கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேரிடும்.  

தூங்கித் தூங்கிச் சுகம் காண்பதிலல்ல, தேனீக்கலாய் அங்கும் இங்கும் பறந்து வாழ்வை இனிமையாக்குவதில் சுகம் காணவேண்டும். அதுவே வாழ்வில் இனிமை.           

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்