ஒதுக்கப்படும் குழந்தைகள்
பள்ளி வகுப்பைத் தொடர்ந்துக் கொண்டிருந்த மாணவன் திடீரென்று படிப்பதில் ஆர்வம் குன்றியது. "பள்ளிக்குப் போவதே பிடிக்கவில்லை" என்று அடம்பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்தான். அம்மாவோடு சண்டைப் போட்டுக்கொண்டு அம்மாவை முழுவதுமாக வெறுக்க ஆரம்பித்தான். பலர் advice செய்தும் ஒன்றும் பலனிக்கவில்லை. இறுதியாக counselling கொடுத்துப் பார்க்கலாம் என்று பெற்றோர் முடிவு செய்தனர்.
மாணவன் உடன் உரையாடல் தொடர்ந்தது. அதில் தனக்கு படிப்போ, பெற்றோரா யாரும் பிடிக்கவில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தான். இரண்டு, மூன்று முறை அணுகின பின்னும் தன்னுடையப் பிடியில் உறுதியாக நின்றான்.
இறுதியாக உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு படம் வரை என்று பேப்பர், பென்சில் வழங்கப்பட்டது. அதில் அப்பா, தம்பி, அம்மா மூன்று பேர் அருகில் இருந்தனர். இவனோ தொலைவில் இருப்பதாக படம் வரைந்திருந்தான்.
ஏன் உன்னை மட்டும் தனியாக வரைந்துள்ளாய் என்ற போது தான் உண்மை வெளிப்பட்டது. பெற்றோர் தன் தம்பிக்கு அதிக செல்லம் கொடுப்பதாகவும், ஏதாவது ஒரு பொருளுக்காக இருவரும் சண்டையிட்டால் "தம்பிக்கு விட்டுக் கொடு" அவன் சிறுவன் என்பர்.
இருவரும் சண்டையிட்டால் தப்பு தம்பி மேல் இருந்தாலும் இவனுக்கே அடிவிழுந்தது. தம்பி சுகவீனமானவன் அவனை அடிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்லா என்று அடிவிழும். வீட்டில் படுக்கும் போது கூட தனியாகவே படுத்துள்ளேன். இது இவன் பெற்றோரை வெறுப்பதற்குக் காரணமாய் அமைந்தது.
இரண்டாவது அந்தப் படத்தில் அம்மாவின் வலது கையில் விரல்கள் இல்லாமல் இருந்தது. ஏன் அம்மாவிற்கு விரல்கள் இல்லையா என்ற போது, அவன் ஐயையோ நான் மறந்துவிட்டேன், பென்சில் கொடுங்க நான் வரைந்து கொடுக்கிறேன் என்றான்.
உண்மையிலேயே அவன் மறக்கவில்லை வேண்டுமென்றே அம்மாவிற்கு விரல்கள் வரையவில்லை. அம்மா உன்னை அடிப்பார்களா என்று கேட்டபோது இல்லை, என்னை விரல்களால் வயிற்றைக் கிள்ளி வைப்பார்கள், குட்டுவார்கள் என்றான். எனவே அம்மாவிற்கு விரல்கள் இல்லையென்றால் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்ற உணர்வில் அப்படி வரைந்தான்.
தான் தனிமைப்படுத்தப்படுவதையும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்காததையும் பிரதிபலிக்கவே படிப்பில் நாட்டத்தை இழந்து, பெற்றோரைப் பழிவாங்க, படிக்காமல் இருக்க மாணவன் முடிவுசெய்துள்ளது தெரியவந்தது.
பிள்ளைகளுடைய வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் பெற்றோர் என்பதை மறந்து விடுகின்றோம். பிள்ளைகளைத் தண்டிப்பதினால் பிள்ளைகள் திருந்துவதில்லை. மாறாக நாம் மாறினால் பிள்ளைகள் தானாக மாறிவிடுவர்.
பிள்ளைகள் மீது நாம் அன்பு செலுத்தும் போது கவனமாகச் சரிசமமாக அன்பு செலுத்த வேண்டும். இல்லையெனில் பிள்ளைகளிடையே வெறுப்புணர்வும், பகைமையும் வளரும்.
திருமறையில் ஈசாக்கு, ரெபேக்காள், குடும்பத்தில் நடந்த நிகழ்வை நினைத்துப் பாருங்கள். ஈசாக்கு மூத்தவன் ஏசாவையும், ரெபேக்காள் இளையவன் யாக்கோபையும் நேசித்தார்கள். இதனால் ரெபெக்காள் தன் கணவனை ஏமாற்றுவதற்கு யாக்கோபுக்கு வழி வகுத்துக் கொடுக்கிறான். பிள்ளைகளை நல்வழிப் படுத்த வேண்டிய பெற்றோர் பிள்ளைகளுக் கிடையே சண்டைகள் போடவும், கொலை செய்யுமளவிற்கு வேதனையடையவும் வைத்துவிடக் கூடாது.
அதேப் போன்று நம் பிள்ளைகளுக்கு நம்முடைய பங்குகளைப் பிரித்துக் கொடுக்கும் போதும் முடிந்த அளவிற்கு பிள்ளைகள் திருப்திபடும் அளவிற்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். இன்று முதல் பிள்ளைகளை அணைத்துச் சரிசமமாக அன்பு செலுத்த ஆரம்பியுங்கள். பிள்ளைகள் ஒழுங்காக வளருவார்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment