இணையதளத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர்



காலை வேளையிலே ஒரு குடும்பத்தைச் சந்திக்க சென்றிருந்தேன்.  வீடு மிகவும் அமைதியாக இருந்தது.  இருட்டறையில் உட்கார்ந்திருந்த அவர்கள் மகனைப் பார்த்தேன்.  அவன் Computer Game- இல் மூழ்கியிருந்தான்.  அப்பொழுது தான் புரிந்தது இன்று இளம் தலைமுறையினரை எந்த அளவிற்கு internet and computer game பிறரிடம் இருந்து பிரிக்கிறது என்பது.

ஆண்கள் ஆங்காங்கே சுற்றி வந்தாலும், ஒருதாய் தன் பிள்ளையைச் சரிதானப் பாதையில் வழி நடத்த வேண்டியது மிகவும் முக்கியம்.  நமது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது சாலையைக் கடக்க முற்படும் போது, அவர்கள் கரங்களைப் பிடித்து வழி நடத்துவோம் அல்லவா! அதைப் போன்று வலைத் தளங்களில் பிள்ளைகள் நுழையும் போது வழி நடத்துவது மிகவும் அவசியம்.  

கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே பிள்ளைகள் வலைத் தளங்களில் நுழைந்து விடுகிறார்கள்.  Project பண்ண வேண்டும் என்று கூறி வலைத்தளத்திற்குள் சென்று விடுகின்றனர்.  WhatsApp, Facebook -இல் முகம் தெரியாத பல நபர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர்.    பலசிக்கலான நபர்களிடம் தொடர்பு கொண்டு, தவறான வாழ்வுக்குள் செல்லக்கூடிய சூழலும் ஏற்படுகிறது. 

குறிப்பாக இரவு 10 மணிக்குமேல் ipad மற்றும் மடிக்கணினியில் உட்காரும் போது மனம் போல் நேரத்தைச் செலவு செய்து, மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்ல, எழ முடியாமல் தவிக்கின்றனர் அல்லது பள்ளியில் போய்த்  தூங்கி விழுகின்றனர்.  இச்சூழலில் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வரைமுறையைப் பின்பற்றத் துவக்கத்திலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.  இல்லையெனில் பல குற்றங்களில் ஈடுபடக் கூடிய  சூழல்கள் உருவாகி விடுகிறது.

தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளுகிற நண்பர்கள் அவர்களைத் தவறான பாதைக்கு வழிநடத்திச் சென்று விடுகின்றனர்.  இவைகளைக் களைய வேண்டுமானால், துவக்க காலங்களிலேயே பிள்ளைகளோடு உட்கார்ந்து பெற்றோர் அல்லது குடும்பத்தலைவி கற்றுக் கொடுக்க வேண்டும்.  பலவேளைகளில் பெற்றோருக்கு அநேக இணைய தளம் பற்றிய தகவல் தெரிவதில்லை.  எனவேப் பிள்ளைகள் அவர்களை ஏமாற்றி விட்டு, வலைத் தளங்களில் தாறுமாறாக விளையாடி விடுகின்றனர்.  

படிப்பதற்குப் பிள்ளைகளுக்கு internet வேண்டும் என்று கேட்கின்றனர்.  பெற்றோர் மறுக்காமல் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.  காரணம் படிப்பிற்காக பெற்றோர் பிள்ளைகளுக்கு எவ்வளவு செலவு செய்யவும் ஆயத்தமாயிருக்கின்றனர்.  வாங்கிக் கொடுத்த laptopயை, internetயை,  படிப்பிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் கற்றுக் கொடுக்க மறந்துவிடுகின்றனர்.  எந்தெந்த வயதில் எப்படிப்பட்ட இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறையை உருவாக்குவதற்கான வலை உள்ளடக்க filterகளை இணைத்துக் கொடுத்து விட வேண்டும்.  அப்பொழுது தேவையில்லாத இணையத்தளத்திற்குள் செல்ல முடியாது.  

தற்பொழுது cellphone இல் internet வசதியை வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.  வாட்ஸ் அப் உள்ளது.  இதுவும் பிள்ளைகள் விரும்பிப் பார்க்கின்ற ஒன்றாக இருக்கிறது.  பல தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடிகிறது.  பல்வேறு நன்மைகள் இருப்பினும், பிள்ளைகள் selfie எடுத்து பிறருக்குப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இதை விளையாட்டாகச் செய்தாலும் பலவேளைகளில் எதைச்செய்கிறோம் என்று தெரியாமல் செய்வதாலும் நம் புகைப்படம் தேவையற்ற நபர்களிடம் போய்ச் சிக்கிக் கொள்ளுகிறது.  

சில வேளைகளில் பிள்ளைகள் அதற்கு அடிமைகளாகி விடுகின்றனர் நேரில் பார்க்கின்றவர்களுடன்கூட நேரில் பேசாமல் வாட்ஸ் அப்பில், Facebook-இல் பேசிக் கொள்ளுவோம் என்று சென்று விடுகின்றனர்.  உண்மையான அன்புப் பரிமாற்றம் மாறி, போலியான அன்பும் உறவுகளும் பெருகி வருகிறது.  எனவே உண்மை நிலைகளைப் பிள்ளைகளுக்கு உணர்த்த நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்.  பின்பு பிள்ளைகளுக்குத் துவக்கத்திலேயே கற்றுக் கொடுங்கள்.  அப்பொழுது பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் நல்ல உறவு வளரும்.    

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ Subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி