படி....! படி.....! படி......!



ஒரு நாள் ஒரு குடும்பத்திற்குச் சென்றிருந்தேன்.  குடும்பத்தில் உள்ள பிள்ளைகளைப் பற்றி விசாரித்தேன்.  ஒழுங்காகப் பாடகர் வரிசையில் வந்து பாடும் அவர்கள்   மகனைப் பற்றிக் கேட்டேன். ஏன் ஆலயத்திற்கே அவன் வரவில்லையே, ஏதாவது சுகம் இல்லையா என்றேன்.  பெற்றோர் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.  ஐயா இரண்டு வருஷம் அவனை நீங்க இனிப் பார்க்கவே முடியாது.  அவன் +1 படிக்கிறான், எனவே +2 பாடங்களுக்கு டியூசன் போகிறான்.  ஞாயிற்றுக் கிழமையும் டியூசன் உண்டு.  அதனால பாடகர் குழுவுக்கும் வரமாட்டான்,  ஆலயத்திற்கும் வரமாட்டான்.  காலையில் 5 மணிக்கு Maths Tuition ஆரம்பிச்சு School, அப்புறம் இரவு 9 மணிக்குத்தான் எல்லாம் முடிந்து வருவான் என்றார்கள்.  எனக்கு  ஷாக்காக இருந்தது.  என்னப்படிப்பு படிக்கிறான்.  ஆலயம் கிடையாது.  பண்டிகை கிடையாது.  சுகதுக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. பகலில் வீட்டில் இருக்கக் கூடாது என்றால் அவன் பிள்ளையா அல்லது Computer- ரா என்ற கேள்வி எழும்பியது.        

இரண்டு வருடம் முடிவதற்குள் உடலே உருகிப் போயிற்று.  Medicine படிக்கணும் என்ற பெற்றோரின் ஏக்கத்திற்கு மகன் பலியானான்.  பள்ளியிலும் பாடம் நடத்தப்படும்,  டியூசன் Center-லும் பாடம் நடத்தப்படும், பள்ளியிலும் தேர்வு, டியூசனிலும் தேர்வு.  இதுபோக Medical Exam, CMC மற்றும் இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தனி ஆயத்த வகுப்புகள்.  மகனின் மனநிலைமை மிகவும் குழப்பமாக மாறியது.  எதிலும் முடியாத சூழலில் எப்பொழுதும் பதட்டம், வீட்டிற்கு வந்ததும் ஏன் சும்மா இருக்கிறாய், ஏதாவது படி TV-யை எல்லாம் மறந்திடு என்று விரட்டும் பெற்றோர்.  மகனுக்கு மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய விழாகாலத்தில் அதிலேயும் பங்கேற்க முடியாத சூழல்.  இறுதியாகப் பள்ளிக்குக் கட் அடிக்க ஆரம்பித்தான்.  நிலைமை பரிதாபமானது.      

பெற்றோர்களே, பிள்ளைகள் படிக்க வேண்டியது முக்கியம், அதற்காக ஆண்டவரிடம் கூட நேரம் செலவிட இடமில்லையென்றால் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  படிக்கும் முன் ஜெபிப்பது, திருமறையை வாசிப்பது என்பது பிள்ளைகளின் மனதைச் சுத்தமாக்கவும், Concentrate பண்ணவும் ஏதுவானது என்பதை மறந்து விட்டீர்களா?   

அன்று இயேசு கிறிஸ்துவிடம் தங்களுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படிக்குப் பெற்றோர்கள் கொண்டு வந்தார்கள் என மாற்கு குறிப்பிடுகிறார்.  ஆனால் பெற்றோராகிய நாம் பிள்ளைகளைக் கர்த்தரிடம் கொண்டு வருவதற்கு விரும்பாத சூழல் உருவாகி வருகிறது.  எதற்காக நம்பிள்ளைகள் ஆலயத்திற்கு வந்து தடவை வேஸ்ட் பண்ணணும் என்ற எண்ணம் பெற்றோரிடம் வருவது வருந்தக்கூடியது.  

இயேசுவிடம் தன் பிள்ளைகளை அழைத்து வந்த போது சீடர்கள் அவர்களை விரட்டி விட்டனர் (லூக். 18:15-17) அன்று சீடர்கள் விரட்டினர்.  இன்று பெற்றோரே பிள்ளைகளை டியூசனுக்கு விரட்டி விடுகின்றனர்.  Bible, Prayer எல்லாம் இரண்டு வருடத்திற்கு Leave கொடுக்கக் கூறுகின்றனர்.  நல்ல காரியங்களைக் கற்றுக் கொள்வதற்கு நாம் உதவிச் செய்ய வேண்டும்.  ஆண்டவர் இயேசு அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்தார்.  அன்பிற்குரியோரே இயேசு நம் பிள்ளைகளைத் தொட விரும்புகிறார்.  ஆசீர்வதிக்க விரும்புகிறார்.  

படிப்பு மாத்திரம் பிள்ளைகள் தரத்தை உயர்த்த முடியாது.  ஆண்டவருடைய கிருபையும் அவசியம் தேவை.  பிள்ளைகள் நல்வழியில் நடக்க வேண்டுமென்றால்  ஆண்டவருடைய வார்த்தை முக்கியம். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்.  உம்முடைய வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்ளுகிறதினாலே என்று சங்கீதம். 119:9 கூறுகிறது.  ஏனென்றால் ஆண்டவரின் வசனம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.  நடக்க வேண்டிய வழியில் நடத்துகிறவர் ஆண்டவர் தானே.  மருத்துவராயினும், பொறியாளராயினும், தத்துவமேதைகளாயினும், பேராசிரியராயினும், யாரானாலும் நல்லவர்களாகக் காணப்பட வேண்டுமானால் ஆண்டவரின் வார்த்தை ஒன்றே தான் காரணமாகும்.  எத்தனைப் படிப்பாளிகள் போதைக்கு அடிமைகளாகிக் கீழான நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.  மருத்துவம் படித்தும் போதை ஊசிக்கு அடிமையாயிருப்பவர்கள் எத்தனைபேர்.  மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர், பேராசிரியரே போதைக்கும், புகைக்கும் அடிமையாகிக் குடும்பங்கள் சிதைகிறதே.  காரணம் என்ன? இயேசுவுக்கு முதல் இடம் இல்லை.  எனவே சிந்திப்பீர் பெற்றோர்களே. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ Subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்