குணசாலியான பெண்ணின் இரகசியம்


என் மகள் நான் சொல்லுகிறதைக் கேட்கவே மாட்டேன் என்கிறாள், குறிப்பாக Dress விஷயத்தில் எனக்கும், என் மகளுக்கும் இடையே எப்பொழுதும் யுத்தம்தான் நடக்கிறது.  ஜவுளிக் கடைக்கு மகிழ்ச்சியாகச் சென்று திரும்ப முடியல.  அவள் போடுகிற Dress ஐப் பார்த்து மத்தவங்க எல்லாம் சிரிக்கிறாங்க.  ஏன் இப்படிப் பிள்ளையை வளர்க்கிறாய் என்று என்னிடம் கேட்கிறார்கள்.  எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று கண்கலங்கினார்கள்.  சரி கவலைப்படாதிங்க.  அவள் எப்பொழுது இருந்து இப்படி மாறியிருக்கிறாள் என்றேன்.  அதற்கு அவள் சிறு பிள்ளையாக இருக்கும் போதே இப்படித்தான் dress போடுகிறாள் என்றார்கள்.  

அப்படியானால் சிறு பிள்ளையாக இருக்கும் பொது நீங்க தானே dress select பண்ணியிருப்பீங்க என்றேன்.  ஆமா, அப்பொழுது modern dress போடும் போது அழகாக இருந்ததால் போட்டு மகிழ்ந்தேன்.  ஆனால் இப்பொழுது பெரிய பிள்ளையாகி விட்டாய் இப்படி போடாதே என்றாள் அதற்கு உடன்படமாட்டேன் என்கிறாள் என்றார்கள்.  

குணசாலியான பெண்களே dress விஷயத்திலே உங்கள் பிள்ளைகளைச் சரியாக வழிநடத்துவது உங்கள் கரத்தில்தான் இருக்கிறது.  சிறு பிள்ளையாக இருக்கும்போதே சரியான உடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும்.  சிறு வயதில் modern dress போட்டுப் பழகினவர்களால் பின்பு மாற இயலாது.  எனவே அவர்கள் பெரியவர்களாக மாறிய பின் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே சிறு வயதில் இருந்து வளர்க்க ஆரம்பியுங்கள்.

தொலைகாட்சி, சினிமா, வலைத்தளம் என்று பல காரியங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து தாக்கத்திற்குள்ளாக மாற்றி விடுகிறது.  வெளிநாடுகளில் மக்கள் அணியும் ஆடைகள்,  மாடல்கள் உடனடியாக  நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது.  சினிமாக்களில், தொலைக்காட்சிகளில் வரும் உடையைப்பார்த்து, நம்முடைய டெய்லர்களும் அப்படியே தைத்துக் கொடுத்து விடுகின்றனர்.  எனவே பெரியவர்களும் வித்தியாசமாக ஆடை அணிவதால் பிள்ளைகளும் வித்தியாசமாக ஆடைகள் அணிய ஆரம்பிக்கின்றனர்.  

யார் யாரை control செய்வது? பெற்றோர் வித்தியாசமான டிரஸ் போடுவதைப் பார்த்துப் பிள்ளைகள் அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடும்போது, பிள்ளைகள் அரைகுறை ஆடைகள் போடும் போது பெற்றோர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.  பெற்றோர்கள் முதலாவது முன்மாதிரியாக இருக்க வேண்டும்.  

பேதுரு எழுதிய முதல் கடிதம் 3- ஆம் அதிகாரத்தில் 3,4-ஆம் வசனம் இவ்வாறாகக் கூறுகி றது.  மயிரைப்பின்னி, பொன்னாபரணங் களை அணிந்து உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற "சாந்தமும் .... விலையேறப்பெற்றது" எனவே உடை அலங்காரம் தேவையில்லை என்று கூறவில்லை, மாறாக நம்முடைய உடை அலங்காரம் மற்றவர்கள் பார்க்கும் அளவிற்கு இருக்கிறதா அல்லது முகம் சுழிக்கும் அளவிற்கு இருக்கிறதா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.  

சமகாலத்தில் வாழ்பவர்களுக்கு அழகாயிருப்பது, வயதானவர்களுக்கு அசிங்கமாக இருக்கலாம்.  இருப்பினும் எல்லாக்காலத்தவரும் ஏற்கும் படியாக சரியான உடைகளை அணிய முற்பட வேண்டும்.  குறிப்பாகப் பெண் பிள்ளைகளுக்குக் குணசாலியான பெண் சரியாக எடுத்துரைக்க வேண்டும் அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவும் முயற்சிக்க வேண்டும்.  கிறிஸ்தவக் குடும்பங்கள் சமுதாயச் சீரழிவால் பாதிக்கப்படாதபடி காத்துக்கொள்ள வேண்டுமாயின் பெண்கள் பிள்ளைகளுடன் உள்ளம் திறந்து பேச வேண்டும்.  

உலக நடப்புகளை எடுத்துக் கூறவேண்டும்.  உலகில் நடைபெறும் தீய சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்பதை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.  சினிமாவைத் தொடர்ந்து தொலைக் காட்சியில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  காரணம் அவைகள் பிள்ளைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.  சினிமாவைப் பார்க்கும் போதே அவர்களை அறியாமல் hero, heroin போல் மாற முயற்சிக்கின்றனர்.  எனவே தொலைக்காட்சியைத் தவிர்த்து நல்ல புத்தகங்கள் படிப்பதற்கு ஊக்கப் படுத்துங்கள்.  நீங்களும் படியுங்கள்.  நல்லவற்றை விதைத்தால் நல்லதை அறுவடைச் செய்யலாம்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ subscribe பண்ணுங்கள்  



Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்