நல்ல பிள்ளைகளும் எதிர்மறையான பெற்றோரும்


ஒருநாள் ஒரு சிறுவனை என்னிடம் அழைத்து வந்தனர்.  ஐயா, இவனுக்காக ஜெபியுங்கள்.  இவன் ஒரு இடத்தில் இருப்பதில்லை.  அங்கும் இங்கும் ஓடுகிறான்.  எந்தப் பொருளை எடுத்தாலும் உடைக்கிறான்.  அருகில் உள்ள சிறு பிள்ளைகளை எல்லாம் அடிக்கிறான்.  ஏதாவது பிசாசுக் கோளாராக இருக்குமோ தெரியவில்லை.  நன்றாக ஜெபம் பண்ணுங்க என்று கூறினார்கள்.

உடைப்பது, அடிப்பது போன்ற பழக்கங்கள் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் உள்ளது.  இதைக்குறித்து ஆராய்ச்சிகளும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.  சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே   ஸிஸேர் லாம்ரோஸா என்ற இத்தாலியக் குற்றவியல் நிபுணர் ஆராய்ச்சி மேற் கொண்டு "வன்முறை மனிதன்" என்ற புத்தகத்தை 1876-இல் வெளியிட்டார்.  அதில் வன்முறையில் ஈடுபடும் மனிதர்களில் தலை மற்றும் முக அமைப்பை வைத்தே கண்டுபிடித்து விடலாம் என்று குறிப்பிட்டுள்ளார் "phrenology" என்ற கலை ஐரோப்பாவில் மிகவும் புகழ்பெற்றது.  காரணம் ஒருவரின் தலை வடிவத்தை வைத்து ஒருவரின் குணத்தை நிர்ணயிப்பது.  தலையில் உள்ள மேடு பள்ளங்களை வைத்துக் கண்டுபிடித்தனர். எனவே வன்முறையில் ஈடுபடும் மனிதர்களை அழைத்து ஆராய்ச்சி நடத்தினர்.  இதன் விளைவாகப் பிறந்த குழந்தைகளிலேயே கிரிமினல் மண்டை இருந்தால் கொன்று விடலாம் என்ற எண்ணம் வெளிவரக் காரணமாக  அமைந்தது.  இருப்பினும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பால் முகசாயலை வைத்து முடிவுக்கு வருவது நிறுத்தப்பட்டது. இச்சூழலில் மூளை பற்றிய ஆராய்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததினால் லாம்ரோஸோலின் தத்துவம் மெதுவாகச் செயலிழந்தது.  இறுதியில் ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் வளரும் சூழ்நிலையே பிறர் மீது வெறுப்பையும், கோபத்தையும், வெறியையும், உருவாக்கி விடுகிறது என்ற முடிவுக்குள் வந்தனர்.  

சூழ்நிலைதான் ஒரு மனிதனின் குணங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே நமது பிள்ளைகள் வெறியுடனும், கோபத்துடனும் நடந்துக் கொள்ளுகிறார்களானால் நம்முடைய செயல்கள் பிள்ளைகளை வெறுப்பூட்டக் கூடியவைகளாக இருக்கின்றனவா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  அத்துடன் நமது பிள்ளைகளைச் சுற்றிலும் நடைபெறும் செயல்கள் வன்முறையைத் தூண்டக்கூடியவைகளாக இருக்கின்றனவா என்பதையும் நாம் கண்ணோக்க வேண்டும்.  

ஒரு மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படும் போதே, மனிதன் வெறித்தனமாகத் தாக்கக்கூடிய மனதைப் பெறுகிறான்.  ஒரு குக்கரில் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்தவுடன், சற்று நேரத்திற்குள்ளாக அது விசில் அடிக்கிறது.  காரணம் காற்றின் அழுத்தம் குக்கருக்குள் அதிகமாகிவிட்டது.  அது விசில் அடிக்க வேண்டும் இல்லையெனில் குக்கர் வெடித்துவிடும்.

இதைப்போலத்தான் மனிதனின் செயல்பாடும் அமைகிறது.  முடிந்த அளவு பிரச்சனையைத் தாங்குகிறான்.  பிரச்சனை அதிகமானவுடன் பிள்ளைகளை வார்த்தையினால் தாக்க ஆரம்பிப்பார்கள் அல்லது அழுவார்கள் அல்லது மூன்று தெருவுக்குக் கேட்கும் அளவிற்குச் கூச்சல் போடுவார்கள்.  அதையும் தாண்டும் போது தங்களது கோபத்தை அருகில் உள்ள பிள்ளைகளிடமோ அல்லது  உடன் பிறப்புகளிடமோ காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.  வயது முதிர்ந்த பிள்ளைகள் பெற்றோரையே தாக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  

எதிர்தாக்குதலை  செய்ய முடியாத பிள்ளைகள் தற்கொலைக்கு நேராக சென்று தங்களது இயலாமையைக் காட்டிவிடுவர்.  எனவே வன்முறையில் ஈடுபடும் பிள்ளைகளைப் பார்த்து பேய் பிடித்துள்ளது என்று தவறாக சிந்திக்காமல் பிள்ளைகள் ஏன் அப்படி நடந்துக் கொள்ளுகிறார்கள். அதற்கான மூலக் காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  அப்படிச்செய்யாமல் பிள்ளைகளை அடித்து மட்டும் திருத்த இயலாது.  அடிப்பது என்பது ஒரு முழு தீர்வாகாது.  பிரச்சனையை அறிந்து பிள்ளைகளை நேர்வழிப்படுத்த வேண்டும்.  எனவே பிள்ளைகள் நல்ல வழியில் நடக்க உதவி செய்வோம்.  யோசேப்பைப்போல் கனிதரும் வாழ்வு வாழ்வதை கண்டு மகிழ்வோம்.   

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ  Subscribe பண்ணுங்கள்   


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்