குணசாலியான பெண்ணும், டீன் ஏஜ் மகளும்



ஒரு வீட்டிற்கு ஜெபிப்பதற்காகச் சென்றிருந்தேன்.  அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய டீன் ஏஜ் பிள்ளைகளைப்பற்றி என்னிடம் குறைகூற ஆரம்பித்தார்கள்.  என் மகள் என்னைப்பார்த்து "நான் ஏன் தான் உங்கள் வீட்டில் வந்து பிறந்தேனோ இப்படி உங்க நிமித்தமா நான் வேதனைப்படுகிறேன்" என்று என்னைப்பார்த்துக் கேட்கிறாள்.  நான் எதைக் கூறினாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளுவது இல்லை.  என்னை மதிப்பதும் இல்லை.  என்னைப்பார்த்து, "உலகமே தெரியாத உங்களிடம் பேசுவதே சுத்த வேஸ்ட்" என்று கூறுகிறாள் என்றார்கள்.  

அவர்கள் மகள் அருகில் நின்றுகொண்டிருந்தாள்.  என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே, "அதுவெல்லாம் ஒன்னும் இல்லங்கைய்யா, எதெடுத்தாலும் advice பண்ணிக்கிட்டு, அங்கே போகாதே, இங்கே போகாதே, போனையே வச்சிக்கிட்டு இருக்காதே என்று நச்சரிச்சிக்கிட்டே இருக்காங்க.  அதனால்தான் எனக்குக் கோபம் வருது" என்று தன்னுடைய நியாயத்தை எடுத்துக் கூறினாள்.

சிறுவயதில் அம்மாவை விட்டுப் பிரிக்க முடியாத அளவு பாசத்தில் திளைத்து இருக்கும் பிள்ளைகள், டீன் ஏஜ் வந்ததும் அவர்களுடைய பேச்சும், கோபமும், எதிரான பார்வையும் தாயை சற்று உலுக்கத்தான் செய்து விடுகிறது. எதிரிடையாகப் பேசாத பிள்ளைகள், திடீரென்று எதிர்த்துப் பேசும்போது அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  

குறிப்பாக, திருமறையில் தீனாள் என்ற இளம் பெண்ணைப்பார்க்கிறோம்.  அவள் இளம் வயதில் பெற்றோரின் துணையின்றி ஊரைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறாள்.  இறுதியாகப் பிரச்சனைக்குள் மாட்டிக்கொள்ளுகிறாள்.  அதினிமித்தமாக பெரிய கலவரம் உண்டாகி விடுகிறது.  இதைப்போன்று டீன் ஏஜ் பிள்ளைகள் நிமித்தம் பல குடும்பங்களே கதிகலங்கி நிற்கின்றன.  எப்படிச் சரிசெய்வது என்று தெரியாமல், திகைத்து விடுகின்றார்கள்.  

டீன் ஏஜ் - யில் நுழையும் போதே பிள்ளைகள்பெற்றோரின் அரவணைப்பிலிருந்து விடுபட்டுச் சகநண்பர்களோடு உறவை வலுப்படுத்த நினைப்பது இயற்கையானதே.  இதைப் பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அதே வேளையில் தாயைப்பார்த்து உங்கள் வீட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று சொன்னாலும் பரவாயில்லை.  மகளே உன்னைப் பெற்றதற்காக நான் செய்யவேண்டிய கடமைகள்  அனைத்தையும் தவறாமல் செய்து விடுகிறேன்.  உன்மேல் என்றும் நான் அன்பாயிருக்கிறேன் என்று கூற வேண்டும்.  ஏனெனில் பிள்ளைகள் பேசுகிற வயது, பேசினது பிறரைப் புண்படுத்தும் என்று தெரியாத வயது.  எனவே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  

தன்னுடைய சுயநலமாற்றத்திற்காகப் பிள்ளைகள் இப்படிப் பேசிச் சாதிக்க நினைக்கலாம்.  ஆனால் சத்தத்தை உயர்த்திப் பேசினாலும் நாட்கள் ஆக ஆக 16 வயதை அடையும்போது சற்றே புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடக்கூடும்.  தொடர்ந்து தாய் தன் மகள்மீது பாசத்தைச் செலுத்திக் கொண்டேயிருந்தால் அவர்கள் சகஜமாகப் பழக ஆரம்பித்து விடுவார்கள்.  ஏன் அவ்விதமாகக் கோபப்பட்டார்கள் என்பதை உங்களிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்து விடுவார்கள்.  தன் தாயிடம் தன் உள்ளத்தைத் திறப்பதால் மனதின் பாரம் குறைந்துவிடும்.  தன்னைப் புரிந்துகொள்ளுவார்கள் என்ற மனப்பான்மைக்குள்ளாக வந்து விடுவார்கள்.  

பிள்ளைகளின் கோபத்திற்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொண்டாலே பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர இயலும். பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கும் போது ஜாலியாகப் பேசி முன்பு நடந்து கொண்டதின் காரணத்தை மெதுவாகக்கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.  முடிந்தவரை அவர்களை Correct பண்ணுகிறேன் என்று எதிர்மறையாகப் பேசுவதை விட்டு விட்டு, encourage பண்ணும் விதமாகப் பேசப் பழகினாலே தோழராக, தோழிகளாக மாறிவிடுவார்கள்.  அப்புறம் என்ன உங்கள் மகன், மகள் உங்கள் கைக்குள்தான்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல புதிய செய்திகளை படிக்க இந்த website ஐ subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி