கவனம்...! கவனம்...!!


காலை வேளையிலே ஒரு குடும்பத்தினரைச் சந்திக்க சென்றிருந்தேன்.  குடும்பத்தின் பிள்ளைகளை விசாரித்தேன்.  அவர்களுக்கு ஒரு வாலிப மகன் இருந்தான்.    அவனை நான் பார்த்ததில்லை.  எனவே எங்கே என்று கேட்டேன்.  அந்தப் பையனின் தகப்பனார், மகன் தூங்கிக் கொண்டு இருப்பதாகவும், எப்பொழுது வந்தான் என்பதே தனக்குத் தெரியவில்லை.  அவனை நான் எழுப்பினால் பிரச்சனையாகும் என்று கூறினார்.  மகனுக்கும் தகப்பனுக்கும் சரியான உறவு இல்லை.  மகன் எங்கு போகிறான், என்ன செய்கிறான் என்பது தகப்பனுக்குத் தெரியவில்லை.  பரிதாபமான உறவு நிலையைப் பார்த்து வருத்தப்பட்டேன்.  

இதைப் போன்று எண்ணற்ற குடும்பங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.  பிள்ளைகளின் சுதந்திரத்தில் நாம் தலையிடக் கூடாது என்றும் தலையீட்டுப் பார்த்தால் பிரச்சனை வரும் என்றும் ஒதுங்கிக் கொள்பவர்கள் தான் இருக்கிறார்கள்.  இன்று இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பெரியவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.  உங்கள் காலம் வேறு... எங்கள் காலம் வேறு... என்று ஒதுக்குகிற பிள்ளைகளும் பலர்.  இதற்கு மத்தியில் பிள்ளைகளைக் குறித்த கரிசனை நமக்கு அதிகம் வேண்டும்.  

வாலிபர்களுக்குச் சுதந்திரம் கொடுங்கள்.  அதற்காக அவர்கள் செயல்களை எல்லாம் கண்டும் காணாதவர் போல் இருந்து விடக்கூடாது. சில பெற்றோர் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என வேவு பார்க்கும் வேலையை செய்வார்கள்.  அதைச் செய்யக் கூடாது.  இதை பேசக் கூடாது என்று கூறாமல் பிள்ளைகளை விட்டுப் பிடித்துச் சரிசெய்ய வேண்டும்.  தவறு செய்யும் பொது கோபமான முறையில் தண்டிப்பதை விட நாசூக்காகச் சரிசெய்ய முற்பட வேண்டும்.  

ஓர் இளைஞன் நகரத்திலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தான்.  அவனைப் பார்க்க அவன் தாய் முன்னறிவிப்பின்றி அவன் அறைக்குள் நுழைந்தாள்.  அவனோ வெளியே சென்றிருந்தான். அவன் அறைக்குள் சென்ற தாய்க்கு ஒரு பிரமிப்பு.  விதவிதமான போஸ்களிலே நடிகைகளின் படமாக ஒட்டப்பட்டிருந்தது.  அது அந்தத் தாய்க்கு வருத்தமாக இருந்தது.  அவளோ தன் பையிலிருந்து இயசுவின் போட்டோவை எடுத்து நடிகைகளின் போட்டோவிற்கு இடையே ஒட்டிவைத்துவிட்டுப் புறப்பட்டு விட்டாள்.  தன் அறைக்கு தன் தாய் வந்ததை அறிந்த மகனுக்கு மனதெல்லாம் படபடத்தது.  விடுமுறையில் வீட்டிற்கு வரவே வெட்கமாக இருந்தது.  தன் தாய் அனைவருக்கும் முன்பாக வெட்கப்படுத்தி விடுவார்களோ என்று பயப்பட்டான்.

விடுமுறைக்குச் சென்ற பொது அந்தத் தாய் பழைய நிலையைக் காட்டிக் கொள்ளவே இல்லை.  எப்பொழுதும் போல் தன் மகனை அன்புடன் உபசரித்தார்கள்.  மீண்டுமாக ஒரு நாள் அந்தத் தாய் தன் மகனைப் பார்க்க அறைக்குச் சென்றார்கள்.  அப்பொழுது தான் ஒட்டி வாய்த்த இயேசு கிறிஸ்துவின் படமேயன்றி வேறொன்றும் இல்லை. அந்தத் தாய் தன் மகனின் நிலைமையைப் பார்த்து நடிகைகளின் படங்களைக் கிழிக்காமல், இந்தப் படம் குறித்துப் பலருக்கு முன்பாகப் பேசி அசிங்கப்படுத்தாமலே, தன மகனைச் சரி செய்தார்கள்.  அதே போன்று தான் இன்றையப் பெற்றோர் வாலிப பிள்ளைகளிடம் நடந்து கொள்ள வேண்டும்.  

பிள்ளைகளின் தனிமைக்கும், சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிள்ளைகள் தவறும் போது இங்கே போகாதே, அங்கே பார்க்காதே, அதைச் செய்யாதே, என் முகத்தில் முழிக்காதே, உனக்கும் எனக்கும் இனிப் பேச்சே கிடையாது, என்று பேசுவதாய்த் தவிர்த்து ஒரு நண்பனைப் போன்று பழகுங்கள்.  நெருக்கமாகப் பழகும் பொது தன் மனதில் உள்ளதை எளிதாக வெளிப்படுத்த முடியும்.  தவிர்க்க வேண்டியதை பக்குவமாக எடுத்துக் கூற முற்பட வேண்டும்.  இல்லையென்றால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே நெருக்கம், பேச்சு குறைந்து இறுதியில் எதிரியைப் போன்று பிள்ளைகள் நம்மை நினைக்கக் துவங்கி விடுவார்கள்.  பெற்றோர் இறந்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்ற கடினமான வார்த்தைகளை நம் காதால் கேட்க வேண்டிய சூழல் ஏற்படும்.   

பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட வேண்டுமானால் இருவரும் இணைந்து வேலை செய்யக்கூடிய சூழலை உருவாக்குவது நன்று.  இவ்வாறு செய்யும் பொது ஒருவரிடம் ஒருவர் பேசவும் வாய்ப்பு ஏற்படும்.  அதே வேளையில் பொறுப்புணர்வும் ஏற்படும்.  பிள்ளை வீட்டுக்குள் இருந்தால், தகப்பன் வெளியே போய் விடுவார் என்று இருக்கக் கூடாது.  வாலிப வயதை எட்டும் பொது அடிக்கடி பணம் கேட்பார்கள்.  அச்சூழலில் பிள்ளைகள் எதற்காகப் பணம் கேட்கிறார்கள், எப்படிச் செலவு செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.  அவ்வாறு கவனம் இல்லையென்றால் குடி, சிகரெட் போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.  

நம்முடைய உறவினர் வீட்டில் நடைபெறும் விருந்து வைபவங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.  அப்பொழுது நமது உறவினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த இயலும்.  இல்லையென்றால் நண்பர்களைத் தவிர உறவினர்கள் அற்றுப்போகும் சூழல் ஏற்படும்.  உறவு என்பது மனித வாழ்விற்கு முக்கியம்.  நம்மைச் சுற்றி இவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்றாலே அது ஒரு மனபலம், சந்தோசம்.  

பிள்ளைகள் பெரியவர்களாக போது தன்னம்பிக்கையுடனும், பெரியவர்களை மதிக்கும் குணம், அன்பு செய்தல், ஏழைகளுக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகள் மீது கரிசனை போன்ற நல்ல குணங்களுடன் சிறந்து விளங்குவார்கள்.  பெரியவர்களை மதிப்பு இல்லாமல் பேசும் வாலிபர்களை இன்று காண முடிகிறது.  சிறந்த குணங்களை உடையவர்களாக நம் பிள்ளைகள் இருந்தால் மாணவப் பருவத்தில் தவறான மாணவர்களின் பின் செல்ல மாட்டார்கள்.  தவறான நட்புக்கு, பழக்கத்திற்கு "NO" சொல்லி விடுவார்கள்.       

தற்காலத்தில் வாலிபப் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் நடக்கிற போராட்டத்தில் ஓன்று பெற்றோர் அலைக்கும் இடத்திற்குப் பிள்ளைகள் வர மறுப்பது, நான் வரவில்லை என்பர்.  இது பெற்றோருக்கு எரிச்சலைக் கொடுக்கும்.  நம்முடைய விருப்பப்படி பிள்ளைகள் வளரவில்லையே என்ற எரிச்சல் வரலாம்.  சில வேளைகளில் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகளைச் சற்று விட்டுப் பிடிப்பதே மேல்.  இல்லையென்றால் சந்தோஷமான நேரத்தில் வீடே நரகம் ஆகிவிடும்.  பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாத நிகழ்ச்சி எதுவென்று உணர்ந்து அவைகளில் அவர்கள் பங்கேற்காவிட்டாலும் விட்டு விட முடிவெடுக்க வேண்டும்.  

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதிருங்கள் என்று திருமறை கட்டளையிடுகிறது. (Parents, don’t be hard on your children.  Raise them properly)    

வாலிபர்கள் ஆலயத்திற்குச் செல்லும் காரியங்களில் ஊக்கப்படுத்துங்கள்.  நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொடுங்கள்.  ஆலயத்திற்குச் செல்லாமல் tution போக ஊக்கப்படுத்தினால், பின்னர் கர்த்தரையே மறுத்து விடுவர். நீங்கள் மிசனெரியைத் தாங்குபவர்களாகவும், பிள்ளைகள் குடிகாரர்களாகவும் மாறிவிடுவர்.  எனவே சரியான பாதைகளில் பிள்ளைகளை நடத்தக் கர்த்தரிடம் ஞானத்தைக் கேட்போம்.  மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்வோம். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்