எதிர்மறையான பெற்றோர்
சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு Negative Role Model-லாக வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையைப் பாழாக்குகின்றனர். சில பிள்ளைகளிடம் உங்கள் வாழ்க்கையின் (Ambition) எதிர்காலம் என்ன ? என்று கேட்டால் மருத்துவர், இஞ்சினியர், ஆடிட்டர், கலெக்டர் என்று கூறுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாகச் சில பிள்ளைகளிடம் வித்தியாசமான Ambition இருக்கிறது. அது ஏன் என்பதை டாக்டர். விஜயராகவன் குறிப்பிடும்போது எதிர்மறையான பெற்றோர்களின் வழிகாட்டுதலும், ஊக்குவிப்பதுமே காரணம் என்கிறார்.
ஒரு இளைஞனிடம் உன்னுடைய Ambition என்ன? Role Model யார் என்றால், பக்கத்து வீட்டு Uncle தான் Role மாடல், அவரைப் போல் Arts College-யில் படிக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட துறையில் பணிபுரிய வேண்டும் சம்பளம் போக, பணம் தேடி வரும், கார், வீடு, பங்களா, வெளியே சுற்றுலா போனால் எல்லாம் இலவசம். இதை விட்டு விட்டு, டாக்டருக்குப் படித்து, துக்கம் இல்லாமல் வேலைச் செய்வதும், Engineer படித்து விட்டு கைகட்டி நின்று வேலைபார்ப்பதும் சுத்த வேஸ்ட் என்று கூறிமுடித்தான்.
காரணம் தாய் தன்னுடைய மகனைப் பார்த்து, பாருடா நீயும் அந்த Uncle மாதிரி ஜாம் ஜாம்னு வாழனும், உங்க அப்பா மாதிரி Honest மனிதன் என்று அப்படி இப்படி என்று வாழக்கூடாது. கை நிறையப் பணம் சம்பாதிச்சா ஊரு, உலகம் எல்லாம் உன்னைச் சுத்திச் சுத்திதான் வரும் என்று அம்மா advice. படிப்பதே பணம் சம்பாதிப்பதற்குத் தான் என்ற உணர்வை பெற்றோர்கள் ஊட்டி விடக்கூடாது. லஞ்சம் வாங்குவது தவறு அல்ல, பெரிய பணக்காரன் ஆவது தான் முக்கியம் என்ற தீய நச்சு வேரை ஆழமாகப் பதியவிடக்கூடாது.
Product is important, but
Process is more important
Destination is important, but
Journey is more important
வாழ்க்கையில் பணம் பொருள் முக்கியம். ஆனால் பொருளை அடையும் வழியும் முக்கியம். அதேப்போல் இலக்கு முக்கியம் இலக்கை அடையும் வழியும் முக்கியம் என்பதைத் தாய் தன் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இன்றையச் சூழலிலே பெண்கள் மத்தியில் மதுகுடிக்கும் பழக்கம் பெருகிவருகிறது. இது பிள்ளைகளுக்கு மோசமான முன்மாதிரியாக அமைந்து வருகிறது. இவைகளைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் குடிக்க ஆரம்பிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தினசரி நாளிதழில் இடம் பெற்ற செய்தி என்னவென்றால், பள்ளிக்குச் செல்லும் போது குடித்து விட்டு உளறுவதும், School Final day-யில் மாணவிகள் உட்கார்ந்து மது குடிப்பதும், பேருந்து நிலையத்தில் குடித்து விட்டுக் கலாட்டா பண்ணுவதும் நாம் காணும் போது பெற்றோர்களின் மோசமான முன்மாதிரியேப் பிள்ளைகளை இந்த இழிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. பெற்றோர் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் மதுவை வாங்கி வைத்திருக்கும்போது பிள்ளைகள் அதை எடுத்து டேஸ்ட் பார்க்க ஆரம்பிக்கின்றனர். பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்கவில்லையென்றால் நம்முடைய தவறுகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
சிகரெட்டைப் பிள்ளைகள் குடிக்கின்றபோது, டேய், இப்படிக் குடிச்சி சீரழிகிறாயே, நல்ல filter வைத்த சிகரெட்டைக் குடி என்று கூறும்போது அவர்கள் செய்த தவறை ஊக்குவித்தாற்போல் மாறிவிடுகிறது. எனவே எதிர்மறையான பெற்றோராய் விளங்குவதற்கு ஒரு முடிவைக் கட்டுங்கள். அப்பொழுதுதான் குடும்பம் மகிழ்ச்சியாக அமையும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment