கத்தி கத்தரிக்காய் வெட்டவா? கழுத்தை அறுக்கவா?


 
கல்லூரி ஒன்றிக்குச் சென்றிருந்தேன்.  MBA மாணவன் free  ஆக உட்கார்ந்து கொண்டிருந்தார்.  என்ன Class இல்லையா என்றேன்.  இனிதான் information வரும் என்றார்.  5 நிமிடம் கழித்து Email யை பார்த்துவிட்டு,  எனக்கு night 7 மணிக்கு class இருக்குது.  அப்புறம் 8.30 மணிக்கு எனக்கு ஒரு guide நேரம் ஒதுக்கியுள்ளார்.  அவரை நான் சந்திக்க வேண்டும் என்றான்.  எனக்குப் புரியவில்லை, எப்படிச் சொல்றீங்க என்றேன்.  Email அனுப்பியுள்ளார்கள், என்றும் எங்கள் கல்லூரியில் அனைத்து information- ம் Email வழியாகக் கொடுக்கப்படும் என்றான்.  மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.  Intercom மூலம் செய்தி சொல்வதும் Notice Board ல் பார்த்து தெரிந்து கொள்ளுதலும் மற்றும் Email வழியாக செய்திகளை அறிந்து கொள்வதும் மகிழ்ச்சிதான்.  

இளைஞர்கள் பலர் சமுகத்தில் நடக்கும் அவலங்கள் பலவற்றை YouTube ல் ஏற்றிச் சிந்திப்பதற்கு உதவுவதை ப் பார்க்கும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.  இன்னும் சிலர், இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது அந்த படங்களை எடுத்து மக்களுக்கு புரியவைத்து, Charity பண்ணுபவரைக்காணும் போது, internet எவ்வளவு பெரிய சேவை செய்கிறது என்ற பெருமை ஏற்படுகிறது.  

கிணற்றுத் தவளையாக இல்லாமல் உலகில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் பல அறிய தகவல்களை எல்லாம் internet ல் பார்த்து கற்றுக் கொள்ளும் பொது நாம் எவ்வளவு பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது.  இன்னும் ஏன்? என் மருமகள் internet ல் சமையல் கலையைப் பார்த்து பன்னீர் பட்டர் மசாலா செய்த போது பரவாயில்லையே சமையலறை வரை internet வந்துள்ளதே என்று சிரிப்பாக இருக்கிறது.   

Library யை தேடிப் போய் படித்த காலம் போய் Internet ல் பாட சம்பந்தமான தகவல்களை எளிதாகத் தேடிப் படிக்கும் போது இருக்கும் சுகமே வேறுதான். அதே வேளையில் facebook, Tweeter, games என்று சதாகாலமும் அதையே தஞ்சமாக்கிக் கொண்டு, பிறரிடம் பேசக்கூட விரும்பாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னை மறைத்துக் கொள்ளுவது தான் பெரிய சிக்கலை உருவாக்குகிறது.

எனது உறவினர் திருமண வைபவத்திற்கு சென்றிருந்தேன்.  அங்கே ஒரு திருமணத் தம்பதியர் சென்னையிலிருந்து வந்திருந்தனர்.  பல நாட்களாக பார்க்காத அவர்களை பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அவர்களிடம் பேசுவதற்காக உட்கார்ந்த போது அவர்கள் கையில் புதிய model phone ஓன்று இருந்தது.  அதில் அவர்கள் facebook ஐ Open செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  எங்களிடம் பேசுவதைக் காட்டிலும் facebook ஐப் பார்ப்பதும் அதில் வலம் வரும் comments ஐ ரசித்துத் தானாகச் சிரிப்பதுமாக இருந்தனர்.  உடனே மெதுவாக நாங்கள் கழன்று கொண்டோம்.  எனக்கு ஒரு கேள்வி எழும்பியது.  பல நாட்களாகச் சந்திக்க முடியாத நமது உறவினர் நம்முடன் பேசி மகிழ்வதைக் காட்டிலும், அடையாளம் தெரியாத, முன் பின் அறிமுகமாகாத நண்பர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரே இவர் நிஜ உலகில் வாழ்கிறாரா அல்லது மாயையான உலகில் சஞ்சரிக்கிறாரா என்ற உணர்வு மேலோங்கியது.     

உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதைக்காட்டிலும் facebook நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நம் வாழவைத்த தடம்புரளச் செய்துவிடுகிறது.  

நேரம் போவதே தெரியவில்லை என்று Net க்கு அடிமையானவர்கள் சொல்லுகிறார்கள்.  எவ்வளவு விஷயம் நமக்கு அங்கு இருக்கிறது என்று Youtube  போய் video, படம் பல்வேறு காட்சிகளில் லயித்துத்துப்போய் இளம் சமுதாயம் காணப்படுகிறது.  

கட்டின மனைவி கூட, YouTube ல் வரும் அந்த So and So போல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு சிக்கலுக்குரியது.  எவ்வளவோ படங்களை ஆள்மாறாட்டம் செய்து, பல்வேறு இணைப்புகளைத் துண்டித்து, புத்துணர்வு கொடுக்கப்பட்ட படங்களைப் பார்த்துக்கொண்டு அதே போல் நாம் வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான ஒன்றாகும்.  

Internet, T.V. போன்றவை பெரிய வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.  எனது உறவினர் ஒரு முறை T.V. யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து விட்டு இந்த saree எவ்வளவு அழகாக இருக்கின்றது வாங்கித் தங்க என்று அடம்பிடித்தார்கள்.  அவருடைய கணவர் எவ்வளவு கூறினாலும் அவர்கள் பொருளின் தரத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை.  இதைப்போன்று பலர் பொருட்களை வாங்குகின்றனர்.  

இளைஞர்களும், இளம்தம்பதியினரும் வலைத்தளங்களுக்குள் சென்று விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர்.  இதனால் மன அழுத்தம், தனிமையான உணர்வு, தற்கொலை உணர்வுகள், முழுமையாகத் தெரியாத நபர்களால் ஏற்படும் அச்சுறுத்தல், மறைத்து வைக்க வேண்டிய ரகசியங்களை பிறருக்கு தெரியப்படுத்தி விட்டு துயருறும் சூழல், முன்பின் தெரியாத நபருடன் அளவுக்கு அதிகமாகப் பழகி ஏமாறுதல் போன்ற சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்கின்றனர்.   

சிலந்தி ஓன்று வலையைப்பின்னி ஒரு அறையில் சொகுசாக இருந்தது.  அப்பொழுது ஒரு சிறிய பூச்சி ஓன்று அதில் போய் உட்கார்ந்தது.  பின்னர் எழ முயற்சிக்கும் பொது வெளியே வர முடியவில்லை.  வலை மேலும் கீழும் ஆடியதே தவிர அதை பிய்த்துக் கொண்டு வெளியே வரமுடியவில்லை.  சிலந்தி வேகமாக வந்தது.  மெது மெதுவாக அதைக்கடித்தது.  இறுதியாக அப்படியே சாப்பிட்டு விட்டது. இதைப்போன்று பலர் வலைத்தளத்தில் மாட்டிக்கொண்டு வெளியே வர இயலாமல் தவிக்கின்றனர்.  

பாலியல் காட்சிகள் இளம் வயதுள்ளவர்கள் கைகளிலும் எளிதாக கிடைக்கிறது.  இளம் தம்பதியரும் இக்காட்சிகளால் பாதிக்கப்பட்டு மாயையான சிந்தனைக்குள் மாட்டிக்கொள்கின்றனர்.  கம்ப்யூட்டர், செல்போன் என்று எல்லா ஊடகங்களிலும் நாம் விரும்பாவிட்டாலும் இத்தகைய காட்சிகள் வந்து காத்து நிற்கிறது.  எளிதாக இளம்தம்பதியர் விழுந்து விடுகின்றனர்.  மூளையானது ஒரு குப்பைத் தொட்டிபோல் ஆகி வருவதோடு சிந்தனையையும் சிதைக்க ஆரம்பிக்கின்றது.  

பிறருடைய ரகசிய படங்களையும் வெளிவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளுபவர்கள் பலர்.  அதே வேளையில் தவறான தகவல்களை சரியென்று நினைத்து மக்கள் ஏற்றக்கொள்ளுகிற போது இளம் வயதிலேயே அது மனதில் நஞ்சாக பதிந்து விடுகிறது.  எனவே அதிகமாக internet, T.V பார்க்கும் பிள்ளைகளிடம் அவற்றின் நன்மை தீமைகள் குறித்துப் பெரியவர்கள் பிள்ளைகளுடன் கலந்துரையாட வேண்டும்.  இருட்டறையிலே வாழ்வை முடித்துவிடாமல் வெளியே வந்து செயல்புரியக் கூடிய ஆற்றலை பிளளைகளுக்கு கொடுக்க வேண்டும். 

இந்த ஊடகங்கள் தான் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும், கணவன்: மனைவிக்குமிடையேயும் இடைவெளியை உண்டாக்கக் கூடிய காரணிகளாக அமைகிறது.  இதை அறிந்து இயல்பான வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும்.  மாயையான வாழ்வில் மிதக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  ஆசிரியர் தங்கள் மாணாக்கர்களுக்கு இதைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.  ஆசிரியர் தங்கள் மாணவர்களின் வாழ்வு எவ்வாறு மாறியுள்ளது என்பதை புரிந்துக்கொண்டு பேசவேண்டும்.  சரியான நேரத்தில் விழிப்புணரவைக் கொடுத்தால்தான் facebook என்ற அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுப் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி