காலத்தின் அருமை
மாணவர்களாகத் தங்கள் பிள்ளைகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களைக் குறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். அதிலும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கிறார்கள் என்றால் பெற்றோருக்குத் தூக்கமே வருவது இல்லை. பிள்ளைகள் எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டும். வெளியே யாரிடமும் வீணாக்கப் பேசி விடக் கூடாது, விளையாடக் கூடாது என்று நினைக்கின்றனர்.
காலை 5 மணி முதல் பள்ளி செல்லும் வரை டியூஷன் போக வேண்டும். பள்ளி முடிந்தவுடனே தொடர்ந்து இரவு 10 மணி வரை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி டியூஷன். பிள்ளைகள் யார் தான் இந்தக் கல்வியைக் கண்டுபிடித்தார்களோ எப்பொழுது முடியும் இந்தப்பாடு என்ற வருத்தத்தோடே படிக்கின்றனர். மகிழ்ச்சியோடு கற்பது போய் வருத்தத்தோடு படிப்பதைப் பல முறை எழுதிப் பார்த்து வேதனைப்படுகின்றனர். மாணவர்களிடம் எதிர்காலத்தில் என்ன படிக்கப் போகிறீர்கள் என்றால் 50% பேர் Doctor, 49% பேர் Engineer, 1% Other Courses.
பிள்ளைகளுக்கு வருகிற புதிய வேலை வாய்ப்புகள், படிப்புகள் குறித்த தெளிவு இல்லாமல் இருக்கிறது. மாணவர்களின் வாழ்க்கையைக் குறித்து அவர்கள் முடிவெடுக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோரின் விருப்பங்களை பிள்ளைகளுக்குத் திணிக்கும் பொது விருப்பம் இல்லாமல் படித்து முடிப்பர். பணியாற்றும் போதும் அதில் மனநிறைவோடு பணியாற்ற முடியாமல் தவிப்பர். Creative ஆகச சிந்திக்கும் திறனையும் இழந்து போய் காணப்படுவர். இச்ச்சூழலில் மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் பட்சத்தில் அவர்களின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கென்று Career development Counsellors சிறப்பான psychological test வைத்திருக்கின்றனர்.
மாணவர்கள் தங்களுடைய வாழ்வை தாங்களே முடிவெடுக்கும் போது அந்தக் குறிக்கோளை அடைய ஒரு வெறித்தனம் உருவாகும். அப்பொழுது படிக்கும் போதே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் தேடல்கள் உருவாகும். இதனால் வெற்றியும் மற்றும் மனநிறைவும் அவர்களுக்குக் கிடைக்கும். ஒரு மாணவன் தன்னுடைய எதிர்கலாத்தை நிர்ணயிப்பதில் அவனுடைய குடும்பத்தின் தாக்கம் இருக்கும். அவர்களுடைய நண்பர்கள் வட்டமும் முக்கிய பங்காற்றுகிறது. சமய வாழ்க்கையும் அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்க முன் வருகிறது. எப்படிப்பட்ட மரியாதையான வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் அவர்களை ஒரு முடிவு எடுக்காத தூண்டுகிறது. இவையனைத்தோடும் பெற்றோர் முக்கிய பங்காற்றுகின்றனர். இவையாவுமே மாணவ மாணவியரைச் சரியான முடிவெடுக்க தூண்டி விடுகிறது.
படிக்கின்ற மாணவர்கள் தன்னுடைய மனநிலையை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றிக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கின்றது. மனம் எப்பொழுதும் ஒரு நிலையான முடிவை எடுக்காமலும் சூழல்கள் மாறும் போது மாறலாம். சிலவேளை தன்னுடைய திறமையை உற்று நோக்கி நம்மால் இந்தப் பணிக்குச் செல்ல முடியுமா என்று கேள்வி கேட்டு, முடியாதென்றால் மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். துவக்கத்தில் High Ambition உடன் ஆரம்பிக்கின்றனர். சிலர் முயற்சி எடுப்பதில்லை இதனால் அவர்கள் தங்கள் எதிர்கால நிர்ணயத்தை மாற்ற முற்படுவர்.
ஒவ்வொருவருடைய வாழ்விலும் குறிப்பாக 1 முதல் 14 வயது வரையிலும் அதிகமான காரியங்களைப் அதிகமான காரியங்களை புரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றனர். 15 முதல் 24 வயது வரையில் கற்ற பல காரியங்களை ஆராய்ந்து பார்க்க விரும்புகின்றனர். தொடர்ந்து 25 முதல் 45 வயது வரையிலும் தாங்கள் எடுத்த பணியை விரிவாக்க, மென்மேலும் வளர்க்க ஆரம்பிக்கின்றனர். 45 முதல் 65 வயது வரையிலும் தங்களுடைய பணியில் நிரந்தரமாக, நிதானமாகப் பணிபுரிய ஆரம்பிக்கின்றனர். 65 வயதிற்குப் பின்பு ஓய்வு பெற்றுப் பணியைக் குறித்து நல்ல சிந்தனையுடன் வாழ ஆரம்பிக்கின்றனர்.
மாணவர்களின் தொடக்க காலத்தில், உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க முற்பட்டாலும், தன்னால் குறிப்பிட்ட பணிக்குச் செல்ல முடியுமா? முடியாதா? என்று 15 முதல் 24 வயதில் தீர்க்கமாக முடிவெடுக்கின்றனர். இப்பருவத்தில் தான் அவர்களைச் சரியாக ஊக்குவித்து நல்ல தீர்மானத்தை அடைய உதவிட வேண்டும். இந்த மாணவப் பருவத்தில் சரியான முடிவெடுத்து நிற்க முடியாத நபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த வேலையையுமே சரியாகப் பார்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டே அலைவர். எந்தப் பணியைச் செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் பல பணிகளுக்குச் சென்று சென்று திரும்பி வருவார். எதிலும் நிலையாக நிற்க மாட்டார்கள். எந்தப் பணியிலும் திருப்தியிருக்காது. சரியான வருவாயை ஈட்ட முடியாமல், வயதான பின்னும் கஷ்டப்படுவார். தன் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்ற சூழலுக்குத் தள்ளப்படுவர். எனவே சரீர டெஸிஸின் மேக்கிங் என்பது மாணவப் பருவத்திலேயே சரியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தைத் தவறவிடக் கூடாது.
சரியான தீர்மானத்தை எடுக்கும் பொது நாம் விரும்புகிற வேலை நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதில் நாம் மகிழ்ச்சியோடு பணியாற்ற முடியும். எனவே காலத்தைக் கருத்தில் கொண்டு சரியான தீர்மானம் எடுங்கள். மனநிறைவான வாழ்வு கிடைக்கும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com
Comments
Post a Comment