கலப்புத் திருமணம்


கவுன்சிலிங் பெறுவதற்காக ஒரு இளம் பெண் வந்தாள்.  நல்ல ஒரு உத்யோகத்தில் இருந்தாள்.  கடவுள் பக்தியுடையவளாகக் காணப்பட்டாள்.  அதைப்போன்று அவள் வேலை பார்த்த இடத்தில் நல்ல வேலை பார்த்த இளைஞன் ஒருவன் இருந்தான்.  அவனும் கடவுள் பக்தியுடைய கிறிஸ்தவன்.  இருவரும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்கள், ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்.  இருவரும் திருமண வயதை அடைந்தார்கள்.  ஆகவே பெற்றோர்கள் அறிந்து திருமணம் செய்து வைக்க முன் வந்தார்கள்.  கடைசி வேளையில் தான் தெரிந்தது ஒரே இனத்தை சார்ந்தவர்களாயினும் உட்பிரிவுகளில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது.  எனவே குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  எப்படி நமது மகனுக்கு இந்தப் பெண்ணை முடிப்பது என்று பையனின் தாயார் முறுமுறுத்தார்கள்.  ஆனால் தகப்பனாரோ அதைப் பெரிதாகக் கருதாமல் நாம் கிறிஸ்தவர்கள் தானே.  இதுவெல்லாம் பெரிதல்ல என்றார்.   

பெண் வீட்டார் மனம் உவந்து திருமணம் செய்து வைக்க முன் வந்தனர்.  இறுதியாக ஆண்டவர் சந்நிதியில் சிறப்பாகத் திருமணம் நடந்தது.  திருமணம் முடிந்த மறுநாளே மணமகளோடு மாமியார் பேசவில்லை.  மணமகளுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.  மாமியாரோ தன் மகனைத் தனிக்குடித்தனம் செல்லவும் அனுமதிக்கவில்லை.  தன் மகனும் தன் மாமனார் வீட்டுக்குச் செல்வதை அந்தஸ்து குறைவாக நினைக்கும்படி வலியுறுத்தினார்.  இறுதியாக மணமகள் மிகுந்த நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்டாள்.  சிறு சிறு காரியங்களிலும் நீ ஏன் அப்படியிருக்கிறாய் தெரியுமா என்று குறைகூறி ஒதுக்கித் தள்ளினார்கள்.  இறுதியாக மணமகனும், மணமகளும் பிரிந்து போய்விட்டனர்.     

ஆயினும் அந்த பெண் தன் கணவனோடு சேர்ந்து வாழவே  விரும்பி Counselling பெற வந்திருந்தாள்.

பிரியமானவர்களே! ஒரு ஜாதியைத் தாண்டி ஒருவர் திருமணம் செய்வதும், ஒரே ஜாதிக்குள் உட்பிரிவுகளுக்குள் திருமணம் செய்துக் கொள்ளுவதும் இன்று சாதாரணமாகக் காணப்படுகிறது.  ஆனால் பிரச்சனை எங்கு ஏற்படுகிறது என்றால் ஒருவர் பிறந்து வளர்ந்து வரும்போது சில கலாச்சாரப் பாரம்பரியங்கள் சடங்காச் சாரங்கள் அவர்களோடு இணைந்திருக்கும்.  அந்தக் கலாச்சாரத்தை சடங்காச்சாரங்களை அவர்கள் செய்யும் போது மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது.  

திருமறையில் யாக்கோபுடைய மகள் தீனாளை ஒரு அரசனின் மகன் திருமணம் செய்து வாழ விரும்புகிறான்.  இச்ச்சூழலில் விருத்தசேதனம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறான்.  இருப்பினும் அவனை ஏற்றுக் கொள்ள யாக்கோபுடைய பிள்ளைகளுக்கு இயலவில்லை.  இதனால் ஒரு பெரிய கலவரமே உண்டாயிற்று.

பெருந்தன்மையுடன் கலப்பு திருமணம் செய்துக் கொள்ளுகிறார்கள்,  பெருந்தன்மையுடன் பிறருடைய கலாச்சாரப் பழக்க வழக்கங்களை ஏற்க மறுக்கும் போது குடும்பத்திற்குள் பிரச்சனைகளும், ஏற்றத்தாழ்வு மனப்பான்மையும் தோன்றிவிடும்.  இதனால் என் குடும்பம் பெரியதா உன் குடும்பம் பெரியதா என்று வீண் பிரச்சனைகள் உருவாகிவிடும்.  பிறருடைய பழக்க வழக்கத்தைப் பார்த்து கேலி செய்வதும். கிண்டலடிப்பதும் மனதை புண்படுத்தும்.  பிறருடைய உணர்வுகளை மதிக்காதவர்கள் அவசரப்பட்டு கலப்புத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.  

நட்சத்திரப் பொருத்தம், ஜாதகப்பொருத்தம் பார்க்கும் பலர் இருக்கிறார்கள்.  இவைகளெல்லாம் பொருந்தினாலும் மனம் பொருந்தவில்லையென்றால் ஒரு பயனும் இல்லை.  ஒருவர் மனம் ஒத்திசைவுடன் இருக்கிறதா என்று கண்டறிய எந்த ஒரு "psychometrics"கும் இல்லை.  இன்று பணப் பொருத்தம் மட்டுமே பார்க்கப்படுகிறது.  சிலவேளை அழகு பொருத்தம் மட்டும் பார்க்கப்படுகிறது.  ஆனால் மனப் பொருத்தம் கொஞ்சமும் இல்லையென்றால் இலட்சக்கணக்காகப் பணத்தைச் செலவுச் செய்து திருமணம் செய்தாலும் பயன்கிடையாது.  நல்ல மனம் படைத்தவர்கள் மட்டுமே திறந்த மனதுடன் பிறரின் ஆளுமைக்குணத்தை ஏற்று மகிழ்வுடன் வாழ முடியும்.  அப்படி மனப்பொருத்தத்தை உருவாக்கிக் கொள்வோம்.  மகிழ்வோடு வாழ்வோம்.        

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே  

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்