தனி அறையா...? சிறை அறையா...?

 


சிலர் மனைவி அல்லது கணவனை இழந்து தனியாக வாழ்கின்றனர்.  அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, மும்பையிலோ வசிக்கின்றனர்.  பிள்ளைகள் பெற்றோரைத் தன்னிடம் வைத்துப் பார்க்க இயலவில்லை.  அமெரிக்கச் சுற்றுச் சூழல் வயதான பெற்றோருக்கு ஒதுக்கி கொள்வதில்லை.  சிலருக்கு அங்கு செல்வதற்கு விசா கிடைப்பதில்லை.  இச்சூழலில் தனது கிராமத்தில் தனித்து விடப்படுகின்றனர்.  கீழே விழுந்தால் தூக்கி விடுவதற்கு ஆள் இல்லை, சுகவீனம் வந்தால் தண்ணீர் கொடுப்பதற்கு ஆள் இல்லை.  அருகில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தால் இறந்த பின் தான் தெரிவிப்பர்.  

பெற்றோர் இறந்து உடன் ஆளுயர மாலை கொண்டு வந்து போட்டு விட்டு, கோயில் போன்று கல்லறையை அமைத்து, அணையா விளக்கை எரியவிட்டு, பிரியாணி சாதம் போட்டு அனைவருக்கும் விருந்து வைத்து விட்டு வாழ்கிற பிள்ளைகள் பலர் பெருகி வருகிறார்கள்.  

மாரடைப்பு வந்ததும் நெஞ்சை பிடித்துக் கொண்டு உதவிக்குப் பிறரைக் கூப்பிடச் சென்றால் பிள்ளைகள் பல  மைலுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு கவலைப்படாதே அம்மா, உனக்கு ஒன்றும் செய்யாது, பக்கத்திலே யாரையாவது கூப்பிட்டுச் சென்று ஆஸ்பத்திரியில் காட்டுங்க.  நான் என்ன செய்ய முடியும்.  எனக்கு Project Live ஆகிக் கொண்டிருக்கிறது என்று போனை   வைத்து விட, நெஞ்சை பிடித்துக் கொண்டே Life-ஐப் பெற்றோர் முடித்து விடுகின்றனர்.  

Life முடிந்ததும் அடக்கம் பண்ணிவிட வேண்டாம்.  இரண்டு நாள் பொறுங்க.  நான்   ஏறி வந்து விடுகிறேன் என்று பாசம்  பொத்துக்  கொண்டு வருவதற்குள் பிணத்தைப் போட்டு விட்டு ஊரார் தங்களது வேலைக்குச் சென்று விடுகின்றனர்.  மனித குலம் மாண்பை இழந்து வருகிறது.  

ஒரு முறை வாகனத்தில் ஒரு நாய் அடிபட்டு விட்டது.  அது கீகீகீ... என்று சத்தம் இட்டுக் கொண்டு சாலை ஓரத்தில் காலை தூக்கிக் கொண்டு நின்றது மற்றோரு நாய் ஓடி வந்து அதன் அடிபட்ட காலை முகர்ந்து கொண்டு அதைச் சுற்றிக் கவலையோடு பார்த்தது.  எனக்குப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.  ஆறு அறிவு பெறாத இந்த நாய்க்கு இருக்கிற பாசம் மனித குலத்திற்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே என்று வருத்தப்பட்டேன்.  

பெற்றோர்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல் பணம் சேகரிக்கும் வேளையில் எப்பொழுதும் ஈடுபடுகின்றனர்.  பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம் படி படி என்ற ஏச்சும் பேச்சும் தான் மிஞ்சுகிறது.  

தன் அறையில் உட்கார்ந்த படி வேறு யாருடனும் பேசக் கூடாது என்று சிறுவயதிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம்.  படுத்துக் கிடக்கும் அப்பா மேல் உட்கார்ந்து கொண்டு பிள்ளை நான் Train -ல் போகிறேன் என்று கொஞ்சிக் கொண்டிருக்கிற வயதில் கொஞ்சுவதற்குப் பிள்ளைகளுக்கு நேரம் கொடுப்பது இல்லை.  

படித்தால் தான் வாழ்க்கை இல்லையென்றால் மாட்டைத்தான் நீ மேய்க்க வேண்டியதாய் இருக்கும் என்று, காலையும் மாலையும் Tuition.  அடைவதற்கு மட்டும் கூடு போன்று வீட்டை மாற்றி விடுகின்றனர். 

இப்படிப்பட்ட சூழலில் வளரும் பிள்ளைகள் பின் நாட்களில் பிள்ளைகளால் பெற்றோர்களின் அன்பை நினைத்துப் பார்க்கவே இயலாது.  எப்பொழுதும் படி படி என்று விரட்டும் பெற்றோரையும், ரேங்க் கார்டையும், நோட்டையும் தூக்கி வீசும் சிடுமூஞ்சிப் பெற்றோரும் தான் கண்களுக்கு முன் வருகின்றனர்.  

இவை எல்லாம் எனக்காகவா செய்தேன், என் பிள்ளைக்காகத்தானே செய்தேன் என்று கூறினாலும் நீங்கள் சொல்வது பிள்ளையின் உள்ளத்தில் அன்பைப் பதிக்க இடம் கொடுப்பது இல்லை என்பது தான் உண்மை.  

கொஞ்சி விளையாடும் வயதில் தனி அறை என்ற சிறையைக் கொடுப்பதால் பெற்றோருக்குப் பின் நாட்களில் தனிச் சிறையைப் பிள்ளைகள் கொடுத்து வருகின்றனர்.  தனியா, அமைதியா, அசிங்கப்படுத்தாம.  இந்த அறையிலேயே இருங்கள் என்று பெற்றோரைப் பிள்ளைகள் பெரியவர்களாகும் போது ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.  சிந்தீப்பீர்.  நெருக்கமான உறவை வலுப்படுத்துவீர்.           

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி