பெற்றோரே தவறான முடிவுகளுக்கு மாதிரிகள்


ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்டார்.  காரணம் கணவன் அதிகமானப் பணத்தை வாங்கிச் செலவு செய்துவிட்டுத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போகவே, ஊரை விட்டுத் தப்பி ஓடி விட்டார்.  கடன் கொடுத்தவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல், தாய் தன் பிள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டுத் தானும் தூக்குமாட்டி இறந்து விட்டாள் என்பது தினசரிப் பத்திக்கையில் வெளியான செய்தி.

கஷ்டங்கள் வரும்போது அவைகளை எதிர் கொள்ள முடியாமல் சாவு மட்டுமே முடிவு என்ற சூழ் நிலைக்குத் தான் மட்டும் வராமல் தன் பிள்ளைகளுக்கும் வழிகாட்டுவது தவறான வழிகாட்டுதலாகும்.  மாலை வேளையில் சாலையில் செல்லும் போது, வாகனங்கள் அதிகமாக வருகின்றன.  பிள்ளைகள் கல்விக்கூடம் சென்று திரும்புகின்றனர். வேலை செய்பவர்கள் வேலை முடிந்து திரும்புகின்றனர்.  காலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை.  மரணம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.  ஆயினும் யாராகிலும் வாகனத்தை ஒட்டாமல் சாலையின் ஓரத்தில் நிற்கிறார்களா? இல்லை. இளம் பெண்கள், முதியவர்கள் அனைவரும் கூட்ட நெரிசல் மத்தியில், பலர் ஏசினாலும் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக வண்டியில் போக நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறோம் அல்லவா?  அப்படி இருக்கும் போது வாழ்வில் ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கும் தற்கொலை முடிவு என்றுச் சொல்லிக் கொடுக்கலாமா? அல்லது அப்படிப்பட்ட முன் மாதிரிகளை நாம் காட்டுவது சரியாகுமா? கொசுவுக்குப் பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா?

பிரச்சனை இல்லாத உலகம் எங்கிருக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாமே? என்று பிறக்கிறோமோ அன்றிலிருந்து பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன.  நாம் சிலருக்குப் பிரச்சனையாய் இருப்போம் அல்லது மற்றவர்கள் நமக்குப் பிரச்சனையாய் இருப்பார்கள்.  நாம் பிறருக்குப் பிரச்சனையாய் இருப்பதை மறந்து விடுகிறோம். பிறர் நமக்குப் பிரச்சனையாய் இருப்பது தான் நமக்கு வலிக்கும்.  அதனால் தவறான முடிவுகளை எடுக்க முற்படுகிறோம்.  

தாமஸ் ஆல்வா எடிசன் மிகச் சிறந்த கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்.  ஒருமுறை மாலை வேளையிலே படச் சுருள்கள் உடைய, லேப் தீப்பிடித்து எரிந்தது.  அதைப்பார்த்தவர்கள் எல்லாம் ஐயோ தாமஸ் இதைப் பார்த்தால் உயிரோடு இருப்பாரா? அவரின் கண்டு பிடிப்புகளும் அனைத்தும் போய் விடுமே என்று வருந்தினர்.  இரவு வேளையில் தீயணைப்பு வீரர்கள் மூலம் தீயணைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  காலையிலே தான் தீ கட்டுக்குள் வந்தது.  காலையில் தாமஸ் தன்னுடைய பணியாளர்களைப் பார்த்துச் சொன்னார்.  "நல்லது, எனது தவறுகள் எல்லாம் அழிந்து விட்டன புதிதாகக் கண்டு பிடிப்போம்", என்றார்.  

ஒரு குறிப்பிட்ட சேமிப்பு, முதலீடு அழிந்து போகும் போது வாழ்வே அழிந்து விட்டது என்று முடிவு பண்ணி விட்டால், இந்த உலகத்தில் யாரும் வாழவே முடியாது.  அவைகளைத் தாண்டி ஒரு வாழவைக் கடவுள் அருளிச் செய்வார் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும்.  விதைகள் இப்பூமியில் விதைக்கப்படும் போது அவை

இப்பூமியோடு மக்கி விட்டதாகக் கருதாமல் விதையைப் பார்த்துக் கொண்டு துளிர் விடுகிறதே, அதைப் போன்று தான் கர்த்தர் நமக்குப் புது ஆற்றலைக் கொடுப்பதற்கு வல்லவராக இருக்கிறார்.  

"போதும் கர்த்தாவே, என் ஆவியை எடுத்துக் கொள்ளும்" என்ற எலியா ஆண்டவரிடம் சொன்ன போதும், ஆண்டவர் அவனுக்கு உணவைக் கொடுத்து 40 நாள் நடப்பதற்குப் பெலன் கொடுத்து, மகத்தான பணிகளைச் செய்யத்தக்கதாக புதிய வல்லமையினால் நிரப்பி அனுப்பினார்.  

தாவீது தன மகனால்  விரட்டப்பட்டபோது, ராஜாங்கம் பறிபோனது தன் குடிமகனாக விளங்கியவனே தன் மீது மண்ணை அள்ளிப் போடும் போதும், அவைகளைச் சகித்துக் கொண்டு, கர்த்தர் அவனை இப்பொழுது என்னைத் தூசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.  எனவே அவனை ஓன்றும் செய்ய வேண்டாம் என்று கூறிக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறினான்.  காலம் கனிந்து மீண்டும் அரசனாக மாறினான்.  வாழ்வில் துயரங்களும், பிரச்சனைகளும், எதிர்ப்புகளும் ஒரு அளவிற்குத்தான்.  அது கடலின் அலையைப் போன்றதுதான்.  குறிப்பிட்ட இடத்திற்கு மேல் அது வர இயலாது.  கர்த்தர் அதற்கு அனுமதிக்கவில்லை ஆகவே தவறான முடிவுகளை நாமும் எடுக்கக் கூடாது.  நம் பிள்ளைகளுக்கு முன் தவறான முன் மாதிரிகளாக வாழவும் கூடாது.           

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே  

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ  Subscribe பண்ணுங்கள்      


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்