மன்னிப்பு


வாழ்வு இனிப்பதற்கான சில சான்றுகளைக் கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில் ஒளிரும் வாழ்க்கை சிந்தனையை வலுப்படுத்துவதற்காக இந்த ஒரு முயற்சி இது.   பத்துக் கட்டளை என்ற புத்தகத்தின் சாரத்தைத்  தழுவிக் கேள்விகள் அமைத்துள்ளேன். கீழே காணும் பகுதியில் எவை எல்லாம் ஆம் என்று நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு நமது இல்லறம் இனிக்கிறது என்றும், இல்லையெனில் அந்த அளவிற்கு இல்லறம் கசக்கிறது என்றும் பொருள்.கிறிஸ்தவ இல்லறம் அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல்,ஒருவரை ஒருவர் தாங்குதல் என்பவற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறது.

ஆண்களுக்கு

1. மன்னிக்க இயலாத தவற்றை மனைவி செய்தாலும் பிறர் முன்னிலையில் கடிந்து பேசாமல் இருப்பீர்களா?

2. திருமண நாள், மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்து, பரிசு வழங்குவீர்களா?

3. மனைவியின் தனிப்பட்ட செலவுக்கென்று பணம் கொடுப்பீர்களா?

4. ஓய்வு நேரத்தில் மனைவியைத் தட்டிக் கொடுத்துப் பேசி மகிழ்வீர்களா?

5. மனைவி கோபப்படும் நேரங்களில் பொறுமையுடன் சகித்துக்கொள்வீர்களா?

6. மனைவியைப் பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவீர்களா?

7. மனைவியின் திறமையைப் பாராட்டிப் பேசுவீர்களா?

8. மனைவியின் கருத்தை மதிப்பீர்களா?

9. கணவன் தன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதை மனைவிக்குப் புரியவைப்பீர்களா?

10. மனைவி செய்யும் உதவிகளுக்கு நன்றியுடையவராக இருப்பீர்களா? 

பெண்களுக்கு 

1. வெளியே அழைத்துச் செல்லும் அல்லது செல்லாத பெண்ணாக இருந்தாலும் கணவன் மீது அக்கறை செலுத்துவீர்களா?

 2. கணவனை அடக்கும் மனப்பான்மை இல்லாதவரா?

3. குடும்பத்தினருக்குப் புதிதாக சுவையான உணவைத் தயாரிக்கும் மனம் உடையவரா?

4. கணவனுடைய அலுவல்களிலும் தேவைப்படும் ஆலோசனை கூறுபவரா? 

5. வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்க்கையை அமைக்கும் மனப்பான்மையுடையவரா?

6. கணவனின் பெற்றோரிடம் தம் பெற்றோரைப் போன்று அன்புடன் நடந்து கொள்ளும் மனப்பான்மையுடையவரா?  

7. கணவனின் விருப்பப்படி வாழ முயற்சி செய்பவரா?

8. கணவன் உங்களுக்கு விருப்பமில்லாத காரியங்களைச் செய்யும் போது பொறுமையுடன் இருந்து பின் ஓய்வு நேரத்தில் தவற்றை உணர்த்துகிறவரா?   

9. கணவனின் பொழுதுபோக்கை ஒதுக்கித் தள்ளாமல், இணைந்து நேரம் செலவிட விரும்புகிறவரா?

10. பிரச்சினைகள் வரும்போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடையவரா?  

மேலே குறிப்பிட்ட கேள்விகளில் பல பதில்கள், இல்லை என்று வருமானால் நாம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். வாலிப வயதில் நமக்காக, நம் உடலை வளப்படுத்த என்று சுயநலமாக வாழ முயற்சி எடுப்போம். திருமணமான பின் நான் எனக்காக அல்ல என் கணவனுக்காக அல்லது மனைவிக்காக அல்லது பிள்ளைகளுக்காக வாழப் போகிறேன் என்ற மனப்பக்குவம் வரவேண்டும். 

திருமணமான பின்னும் நான் எனக்காக வாழ்ந்தால் நான் ஒரு சுயநலவாதி. கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிப்பவன் அல்ல. கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தேவன் தம்முடைய அன்பை விளங்கப்  பண்ணினார்.   நான் என் மனைவிக்காக அல்லது கணவனுக்காக எதையாவது இழக்க நேரிட்டாலும் அது தான் தியாக அன்பு. அந்தத் தியாகம் வருமானால் மேற்கூறிய விடைகள் யாவும் ஆம் என்றே வரும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்  

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்