உறவை வலுப்படுத்தும் கருத்துப் பரிமாற்றம்
பெற்றோர் பிள்ளைகள் இடையே உறவை வலுப்படுத்த வேண்டுமானால், சரியானக் கருத்துப்பரிமாற்றம் நடைபெற வேண்டும். பிள்ளைகளின் உணர்வுகளைப் பெற்றோர் புரிய முடியாமலும், பெற்றோர்களின் உணர்வுகளைப் பிள்ளைகள் சரியாகப் புரிந்துகொள்ளாததாலும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
அநேக வேளைகளில் தகப்பனுக்கும், மகனுக்கும் தாய்க்கும் மகளுக்கும் இடையே சரியான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படாமல் உறவில் விரிசல் காணப்படுகிறது. மகன் தன் கருத்தை அம்மா மூலம் அப்பாவுக்கு வெளிப்படுத்துகிறான். மகள் தன் கருத்தை அப்பா மூலம் அம்மாவுக்கு தெரியப்படுத்துகிறாள். இவ்வாறு கருத்தை, உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்த முடியாதபடி இருப்பதைத் தவிர்க்க மூன்று முக்கிய குறிப்புகளை மனதில் நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்:
பொதுவாகக் கருத்துப்பரிமாறும் போது வார்த்தையால் 7 முதல் 10 சதவீதமும், குரல் ஏற்ற இறக்கத்தில் 40 சதவீதமும் உடல் உறுப்புகள் இயங்கும் விதத்தில் (Body Language) 50 சதவீதமும் நடைபெறுகிறது. எனவே பிள்ளைகள் பேசினாலும் அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை மட்டும் கணக்கில் எடுக்காமல் அதன் தொனியையும், உடல் அசைவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி உள்ளத்தின் உணர்வுகளைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டுமானால் பெற்றோர் பிள்ளைகளிடத்தில் பரிவோடும், பாசத்தோடும் பழகிப் பேச வேண்டும் (Empathetic listering) ஒருவரின் உணர்வை முழுமையாக அறிவதற்கு அவர்களோடு மிகவும் ஈடுபாடோடு, பொறுமையோடு பழக்காவிட்டால் முழுமையாக அறிந்துக் கொள்வது இயலாது. பல பிள்ளைகள் தன் பெற்றோரைப் பார்த்து என் feeling ஐ புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறீங்க என்று சொல்வதற்குக் காரணத்தை இப்பொழுது புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
வெறுப்பாய் கேட்கக்கூடாது
சிலவேளைகளில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் எதையாவது கேட்டுக் கொண்டிருப்பார்கள், பெற்றோரோ T.V அல்லது பேப்பரை வாசித்துக்கொண்டே உம்.. அப்படியா சரி பார்ப்போம் என்று அவர்கள் பேசுவதைக் கேட்காமல் பதில் அளித்துக் கொண்டு இருப்பார்கள். பிள்ளைகள் தங்களுடைய உணர்வுகள் அலட்சியம் பண்ணப்படுவதாகப் புரிந்து கொள்வார்கள்.
முழு உணர்வோடு கேட்கும் போதுதான் பேசுபவர்களுக்கு ஆர்வமும் சந்தோஷமும் இருக்கும். நாம் கூறுவதைப் பெற்றோர் கேட்கிறார்கள் என்றால் நாளடைவில் முழு உள்ளத்தையும் திறந்து பேச ஆரம்பித்து விடுவார்கள். ஒரு நண்பனிடம் அனைத்துக் காரியங்களையும் பகிர்ந்துகொள்வது போல் பகிர்வதற்கு முன் வருவார்கள். சில வேளைகளில் அவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவமாக்கவும் முன் வருவார்கள். நேரடியாகப் பேசத் தயங்கும் கருத்துக்களைப் பேப்பரில் எழுதுவதற்கு வாய்ப்புகளைக் கொடுக்கலாம். அவர்கள் கண்ணீர் முதற்கொண்டு வடித்து எழுதிவிடுவார்கள்.
சில பெற்றோர்கள் கூட பிள்ளைகளிடம் தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கு யோசிப்பார்கள். வயதான பெற்றோர் சம்பாதிக்கும் பிள்ளைகளிடம் தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்குத் தயங்குவார்கள். ஆனால் பேப்பரில் எழுதிக்கேட்டால் தயங்காமல் உள்ளத்திலுள்ளதை வெளிப்படுத்திவிடுவார்கள்.
உணர்வு பூர்வமான உரையாடல்
பிள்ளைகள் தங்கள் பிரச்சினைகளைக் கூறும்போது அதனைக் காது கொடுத்து கேட்காமல் உடனடியாக மறுத்துப்பேச ஆரம்பிக்கக் கூடாது. அதைப்போன்று மாமியார், மருமகள் பிரச்சனையென்றால் ஆண்கள் உடனடியாக judge பண்ணக்கூடாது அவர்கள் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்டு, பின்பு தீர்மானம் எடுக்க வேண்டும். பிறர் பேசும்போது அப்படியா, எனக்கு இதைப் பற்றித் தெரியாதே. இன்னும் சொல்லுங்க. ஓகே. என்று உள்ளத்தை விசாலமாக்கிக் கொண்டு கேட்டால் மடை திறந்த வெள்ளம் போன்று உள்ளக்கிடக்கைகள் எல்லாம் வெளியே வந்துவிடும். சிறு பிள்ளைகள் என்றால் கிளிப்பிள்ளைப்போன்று அவர்கள் சொல்வதையே திருப்பிக்கூறிக் கேட்கும் போது (Parroting) பெற்றோர் மீது நல் எண்ணம் உருவாகி உண்மையான காரியங்களை வெளிப்படுத்துவர்.
இப்படி உணர்வுப் பூர்வமாக கேட்கும் எண்ணம் இன்று குறைந்து போவதால் அனேக வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் உள்ளதை வெளிக்காட்டமல் உணர்வுகளை அடக்கி, ஒடுக்கி, மனத்தாங்கலோடு வாழ்கின்றனர். இதைப்போன்று அநேக வாலிப ஆண்கள், பெண்களும் பெற்றோரிடம் மனம் திறந்து பேச இயலாமல் முன்பின் தெரியாத facebook நண்பர்களிடம் பேசிப் பிரச்சினைக்குள்ளாகின்றனர். இவைகளைத் தவிர்க்க வேண்டுமானால் quality -யான நேரத்தைப் பிள்ளைகளுடன், பெற்றோருடன் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment