மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் பெற்றோர்

 


ஒரு குடும்பத் தலைவியைச் சந்தித்து ஏன் நீங்கள் ஆலயத்திற்கு அதிகமாக வரவில்லை என்றுக்கேட்டேன்.  ஐயா வீட்டிற்கு வாருங்கள் கூறுகிறேன் என்றார்கள்.  ஒரு நாள் சபை ஊழியரோடு அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.  அவர்கள் ஒரு அறையை எனக்குக் காட்டினார்கள்.  அங்கு ஒரு சிறுவன் படுத்து கிடந்தான்.  சிறு குழந்தைப்போல் அழுது கொண்டிருந்தான்.  ஒலிபெருக்கியில் பாடல் பாடிக்கொண்டிருந்தது.  ஐயா என் மகனுக்கு வயது 14 ஆகிறது.  ஆனால் சிறு குழந்தையைபோல் அவனைக் கவனித்து வருகிறேன்.  மூளைவளர்ச்சி குறைந்தவன் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டார்கள்.  நான் எப்படியாவது சுகமாகிவிடமாட்டானா என்று கடந்த 12 வருடங்களாகப் போகாத மருத்துவமனை இல்லை, என்னுடைய தகுதிக்கு மிஞ்சி என் பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன்.  இனிக் கடவுள் விட்டபடி என்று இருக்கிறேன்.  இப்பொழுது தூக்கிக்கொண்டு எந்த மருத்துவமனைக்கும் செல்ல முடியவில்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே சாரைசாரையாக கண்ணீர் விழுந்தது. 

அவனுக்காக என் வாழ்க்கையையே இழந்துவிட்டேன்.  எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள முடியவில்லை.  ஆலய ஆராதனைக்கு வர இயலவில்லை கணவரோடு எந்த ஊருக்கோ, கடைகளுக்கோ சென்று வர முடியவில்லை.  என் வாழ்க்கையே இந்த அறைக்குள்ளே முடிந்து போனது என்றார்கள்.

மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரால் அவர்களைப் பார்த்துப் பார்த்து இழைத்துப்போகும் மனநிலை வந்து விடுகிறது.  சில பிள்ளைகள் பெரியவர்களாகும் வரையிலும் பெற்றோல் கவனிக்கப்படுகிறார்கள்.  அதன்பின்பு அவர்களைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாமல் ரோட்டிலே விடப்படுகிறார்கள்.  சிலர் வீட்டிலேயே அடைத்து வைத்து விடுகிறார்கள்.  சிலரைப் பராமரிப்பதற்கு விருப்பம் இல்லாமல் சுற்றுலா இடங்களில் விட்டுச் சென்று விடுகின்றனர்.  

ஆனால் இந்த மனவளர்ச்சி குன்றியவர்கள் என்றும் குழந்தையைப் போல இருக்கிறார்கள்.  40வயது உடையவர்களும் 10வயது பிள்ளைகளைப் போன்ற குழந்தை உள்ளத்தோடு இருக்கின்றனர்.  இவர்களில் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.  இவர்களெல்லாம் சாபத்தினால் பிறந்தவர்கள் அல்ல.  கடவுளின் தண்டையினால் விளைவதல்ல இவர்களும் கடவுளின் அன்புக் குழந்தைகளே.  இவர்கள் மீது பாசத்தையும் அன்பையும் செலுத்தவேண்டும்.  அளவுக்கு மிஞ்சி இவர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை வைக்கக்கூடாது.  எப்படியாகிலு பெரிய எஞ்ஜினியராக்கிடவேண்டும் என்று நினைப்பதோ, அல்லது பெரிய தொழிலதிபராக மாற்றிவிட வேண்டும் என்று நினைப்பதோ தவறு.

அவர்களுடைய IQ வைப்பொருத்தே நாம் அவர்களிடம் எதிர்பார்க்க வேண்டும்.  குறிப்பாகத் திருமணம் செய்துவைக்கும் போது குடும்பவாழ்வை நடத்துவதிலே  தடுமாற்றம் ஏற்படக்கூடும்;  மருத்துவ ரீதியாக மருத்துவரிடம் தொடர்புகொண்டு முடிவு எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் திருமணத்திற்குப் பின் தன் பிள்ளையை மருமகனோ அல்லது மருமகளோ மதிக்கவில்லை என்ற வருத்தம் ஏற்படும்.  திருமணம் செய்துக் கொள்ளத் தகுதியில்லை என மருத்துவம் கூறலாகின் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது.

மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளைப் பெற்றோர் பராமரித்துப் பார்த்தாலும் தங்களின் பிற்காலத்திற்கு பின் அவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கும் என பெற்றோர் கலங்குவதைக் காணமுடிகிறது.  பெற்றோர் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை வைப்பதுடன் ஒரு விதத்தில் உதவியாக இருக்கும்.  மற்றும் அரசு பதிவுபெற்ற இல்லங்களில் சேர்ப்பதும் உதவியாக இருக்கும்.  இப்படிப்பட்ட இல்லங்களில் துவக்கத்திலிருந்தே அனைத்து பணிகளையும் செய்வதற்கு பழக்குவிக்கப்படுகிறார்கள்.  சற்றுத் திறமையுள்ள பிள்ளைகளைச் சிறு சிறு அலுவலக வேளைகளில் பயன்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கென்று தன்னம்பிக்கையை வளர்க்கவும் வேண்டும்.

முழுச் சமுதாயமும் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி  அவர்கள் வாழ்வு  முன்னேறப் பாடுபடவேண்டும்.  பெற்றோர் அவர்களை வெறுக்காமல் அரவணைத்தால் பல மாற்றங்கள் அவர்களுக்குள் உருவாகும்.  தேவன் அவர்களைக் கைவிடமாட்டார் என்று பெற்றோர் இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்.  அப்பொழுது அவர்கள் மன நிறைவாக வாழலாம். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி