20-20 கிரிக்கெட் - Challenge
நம் நாட்டிற்காகப் பல நாட்டில் விளையாடிய அவர் விளையாட்டு ஆரம்பிக்கும் முன் கை நடுக்கமோ, வியர்வைக் கொட்டவோ, படபடப்பு ஏற்படாமல் ஜாலியாக சிரித்துக் கொண்டே களம் இறங்குவது போல், நீங்களும் இந்த கல்வியாண்டில் பல தேர்வுகளை எழுதி எழுதி சாதித்தவர்கள். எத்தனைக் கேள்விகள் கேட்கப்பட்டாலும், அசராமல் பதிலை எழுதிக் கொடுத்தவர்கள். நீங்க தேர்வு எழுதுவதில் கில்லாடி, ஆல் ரவுண்டர். எனவே என்னப் பெரிய கேள்வியைக் கேட்டுவிட முடியும். எல்லாவற்றிற்கும் வரைமுறையாகப் பாடத்திட்டம் தந்தாகிவிட்டது. இதைத்தாண்டி கேள்வியைக் கேட்க முடியாது. எனவே இறைவனுடைய பெலத்தோடு தைரியமாய்த் தேர்வு அறைக்குள் செல்லுங்கள். உங்களை உற்சாகப்படுத்த, வெற்றிபெற இறைவனிடம் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருப்போம்.
No Tension
விளையாடும் போது சில வீரர்கள் டென்சன் ஆகிவிட்டால் உணர்ச்சி வசப்பட்டு அடிக்க ஆரம்பித்து, நிதானத்தை இழந்து கிளின் போல்டு ஆகி விடுவார்கள். அதே போன்று பரீட்சையில் வெற்றி பெற வேண்டுமானால் டென்சன் ஆகக்கூடாது. டென்சன் வந்தாலே படித்தது எல்லாம் மறந்து போகும். கடைசி நேரம் ஆகிவிட்டதே இனி எப்படி மருத்துவம் படிக்கும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும் என்று துவண்டு விடாதீர்கள். சந்தோஷமான மனநிலையில் தொடர்ந்து படித்தால் முன்பு படித்தவைகள் கூட நினைவில் ஓடி வரும். அப்புறம் ஏன் பயம்?
Hard work
விளையாட்டு வீரர் ஒருவரிடம் நீங்கள் எப்படி இவ்வளவு சிறப்பாய் விளையாடிப் பதக்கங்களைப் பெற்று வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், போட்டிகள் வரப்போகிறது என்றால் நான் 14 மணிநேரம் பயிற்சி செய்வேன் என்றார். சிறப்பாகத் தேர்வு எழுத வேண்டுமானால் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். அதை வெறுப்போடு அல்ல விருப்பத்தோடு செய்யுங்கள். அப்பொழுது அதிக மதிப்பெண் உங்கள் வசப்படும்.
நான் ரெடி நீங்க ரெடியா?
விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த மண்ணில் மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் சென்று போட்டிக்கு வாரியா? என்று சவால் விடுகிறார்கள். போட்டி இல்லாவிட்டால் விருவிருப்பு இருக்காது. கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு பந்தையும், ஒரு மட்டையையும் கொடுத்து விளையாடுங்கள் என்றால் ரசிகர்கள் வருவார்களா? ரசிக்கத்தான் முடியுமா?
ஆனால் போட்டியாளர்கள் இருக்க வேண்டும் என்றால் நமக்குள்ளே இருக்க வேண்டும். என்னால் 1000 மதிப்பெண் பெற முடியுமானால் நமது திறமையை வெளிப்படுத்தி 1150 மதிப்பெண்கள் பெற்று நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும். 800 மதிப்பெண்கள் பெறுகிறவர்கள் 1050 மதிப்பெண்கள் பெறு கிறவர்களுடன் போட்டிப் போட்டு மனம் உடையக் கூடாது. இப்படிச் செய்தால் தாழ்வு மனப்பான்மை வந்து விடும்.
உங்களால் எவ்வளவு முடியும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப முன்னேற முற்படுங்கள். பிற மாணவர்களை மனதில் கொண்டு என்னால் இப்படி மதிப்பெண் பெற முடியவில்லையே என்று ஏங்காதிருங்கள் அல்லது குறைந்த மதிப்பெண் பெருகிறவர்களுடன் ஒப்பிட்டு நான் அதிக மதிப்பெண் பெறுகிறேன் என்று அலட்சியமாய் இருக்காதிருங்கள்.
எப்படி வெற்றி பெற்றார்கள் ?
ஒவ்வொரு கிரிக்கெட் போட்டி முடிவுற்றதும், கேட்கப்படும் கேள்வி, எப்படி சிறப்பாக ஆடமுடிந்தது என்பது தான். இந்த இரகசியம் நமது பழைய கதையை மையமாக கொண்டே கூறலாம். ஆமை முயல் கதையில் முயல் ஆமையோடு போட்டியிட்டது. தன்னைக் காட்டிலும் மெதுவாக ஓடக்கூடிய மிருகத்துடன் போட்டியிட்டது. இதனால் இளைப்பாறும் எண்ணம் வந்தது. இதைப் போன்று படிக்கிற மாணவர்கள் தேர்வில் இறுதிக்கட்டத்தில் மற்றவர்களுடன் ஒப்பிட்டு நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.
Over Confident ஆக நம்மால் ஓடமுடியாமலா போய்விடும்? என்று முயல் இருந்து கொண்டது போன்று பல மாணவர்களுக்கு ஒரு முறை படித்து விட்டு நான் எல்லாம் படித்தாகி விட்டது என்று கதையடிப்பதும், தொலைக்காட்சிப் பார்ப்பதும்,Internet, Cellphone-ல் நேரம் செலவிடுவதுமாய் இருப்பார்கள். இதனால் படித்ததும் மறந்து விடும். தேர்வு நேரத்தில் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். Confidence இருந்தால் படித்ததை தனியாக எழுதிப் பார்த்துச் சந்தோஷப்படுங்கள்.
சரியான நேரத்திற்குள்ளாக நாம் எல்கையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை முயல் மறந்துவிட்டது. எப்பொழுது சென்றாலும் பரிசைப் பெற இயலும் என நினைத்துவிட்டது. அதே போல் நீங்களும் தேர்வு எழுதும் முன் படித்தால் மட்டுமே பயன். MBBS, Scientist போன்ற கனவு நிறைவேற +2 வகுப்பு இறுதித் தேர்வைச் சரியாகச் சந்திக்க சரியாக நேரத்தைப் பகிர்ந்து படிக்க வேண்டும். காலம்ப் போன பின் கண்ணீர் விட்டுப் பயனில்லை.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment