நம்பிக்கை
குடும்பத்தில் எந்தப் பிரச்சினை வந்தாலும், பிரிந்து செல்வேன் என்ற மனப்பான்மை மட்டும் வரவில்லை என்றால் வாழ்க்கையில் ஒருபோதும் பிரிவினை ஏற்படாது.
ஒருவர் இரயில் பயணத்தைத் தொடரும்போது எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாரோ அந்த ஊர் வரும் வரையில் இரயிலில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே அந்த நபர் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாரோ அந்த ஊருக்குச் செல்ல முடியும்.
ஆனால் பலர் தங்கள் இரயிலில் பயணத்தைக் தொடர விரும்பாமல் பாதியிலேயே இறங்கி விடுகின்றனர். பின்னர் இரயிலை விட்டு விட்டோமே என்று தவிக்கின்றனர். சிலர் ஓடும் இரயிலில் இருந்து குதித்து விடுகின்றனர். இவர்கள் காயப்பட்டு வேதனைப்படுகின்றனர். சிலர் தன்னுடைய இரயிலை விட்டுவிட்டு மற்றோரு ரயிலில் ஏறி தடம் மாறிச் சென்று விடுகின்றனர். இவ்வாறு, தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் மனஉறுதியை இழந்து விடுகின்றனர். வாழ்க்கையில் இருவர் பயணம் செய்யும்போது இருவருக்கும் இந்த மனஉறுதி வேண்டும். இல்லையெனில் இருவரும் மகிழ்ச்சியை இழந்து விடுவர்.
குடும்ப வாழ்வில் பிரச்சினைகள் வரும்போது சமாளித்து வாழ வேண்டும் என்ற மனப்பக்குவத்தை, பெற்றோரும் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.
"வலிக்கின்ற இதயமும்,
வடிக்கின்ற கண்ணீரும்
நிச்சயம் ஒருநாள் மாறும்
உண்மையான அன்பும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால்"
வாழ்க்கையில் நம்பிக்கையோடு வாழுங்கள். நிச்சயம் திருமண வாழ்க்கை மனமகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment