தன்னம்பிக்கை


இளம் வயது ஆண் ஒருவர், தன் வீட்டு நிலையை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தார்.  மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும் பிறருக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வேதனைப்பட்டார்.  இன்று அநேக ஆண்கள் குடும்பத்தில் மதிப்பை இழந்ததாகக் கருதி வருந்துவதற்குச் சில காரணங்கள் உள்ளன.  அதனைப் புரிந்து நிவிர்த்தி செய்தால் பிரச்சனைகளைத் தீர்க்க இயலும்.

அநேக ஆண்கள் தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வது தான் பிரச்சனைக்குக் காரணம்.  எந்த ஒரு காரியத்திலும் தானாக முடிவெடுக்க இயலாமல் தன் பெற்றோரையோ, மனைவியையோ முற்றிலும் சார்ந்திருப்பது.  இதற்கு அவர்கள் வளர்ந்த சூழல் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.  Over care Parents என்று குறிப்பிடப்படும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 20 வயதானாலும், 6வயது பையனைப் போன்றே அனைத்துக் காரியங்களையும் செய்வார்கள்.  எதைச் செய்தாலும் தன்னுடைய உத்தரவின்றி செய்யக் கூடாது என்று கட்டளையிடும் பெற்றோரும் உண்டு.  சிறிய பிரச்சினைகளானாலும் அதனைப் பேசி முடிப்பதற்கு பெற்றோரே முன்வருவர்.  இப்படி வளர்க்கப்படும் ஆண்கள் திருமணத்திற்குப் பின்னும் தன்னம்பிக்கையோடு ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய பெலன் அற்றவர்களாக மாறி விடுகின்றனர்.   

எல்லாப் பெண்களுமே தங்களது கணவன் சுயமாக Confidence உடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  ஆனால் கணவனோ, தன் பெற்றோரிடம் சென்று தன் மனைவி கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலைக் கேட்டு வந்தால் பிரச்சினை பெரிதாக மாறிவிடும்.

ஆல்ஃபா அனிமல் என்று குறிப்பிடப்படும் வார்த்தை அனைத்து குரங்குகளை அடக்கி ஆளும் குரங்கைக் குறிப்பிடுவதாகும்.  இந்த ஆல்ஃபா குரங்கு தன்னுடைய கூட்டத்திற்குப் பிரச்சினையென்றால் எதிர்த்துப் போராடும் தன்மையுடையது.

இப்படிப்பட்ட ஆல்ஃபா தன்மை என்பது ஒரு குடும்பத் தலைவனுக்கு அவசியமானது.  தன்னுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சினைகளை எதிர் கொள்ளுவதும், கரிசனை கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றுவதும், விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ளுவதும், குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் முக்கியமான கடமை.  தன் வீட்டிற்கு யார் வருகிறார்கள், குடும்பத்தோடு நெருக்கமானவர்கள் யார்? யார் மூலமாவது தன்னுடைய குடும்பத்திற்குப் பிரச்சினை வர வாய்ப்புள்ளதா என்ற சிந்தனைகளை ஆண்கள் நினைவில் நிறுத்திச் செயல்பட வேண்டும்.      

ஆண்கள் குடும்பத்தை வழி நடத்தும் தலைவன் என்பதை திருமறை நமக்குக் காட்டுகிறது. (எபே.5:22), குடும்பத்தைப் போஷித்துக் காப்பாற்றுவது ஆண்களின் கடமை. (வச.29) சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் உட்கார்ந்து கொள்ளுதலும், குடும்பத்தின் மீது கரிசனையில்லாமல் பொறுப்புணர்வு இன்றி ஊர் சுற்றிச் திரிவதும் கடன் வாங்குவதற்குத் தன் மனைவியை வீடு வீடாகவோ அல்லது பெற்றோர் வீட்டிற்கு அனுப்புவதோ ஆணுக்கு அழகில்லை.  இப்படிப்பட்ட ஆண்கள் நாளடைவில் மனைவியாலும், பிள்ளைகளாலும் மதிப்பை இழந்து விடுவார்.  அவருடைய பேச்சுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.  எனவே ஆண், ஆணாக உழைப்பவராக, திறமையுடையவராக, நாட்டு நடப்பு தெரிந்தவராக, குடும்பத்தை வழி நடத்தும் திறமையுடையவராக மாற முற்படவேண்டும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?