வேற்றுமையில் ஒற்றுமை
நம்மைப் போலவே நமது வாழ்க்கைத் துணையும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நமது துணையும் விரும்ப வேண்டுமென நினைக்கிறோம். நாம் குறிப்பிட்ட காரியத்தில் எந்த உணர்வை, முடிவை எடுக்க விரும்புகிறோமோ அதைத்தான் தன் துணையும் உணர வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் தான் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
வாழ்க்கையில் ஒருவர் மீது மற்றொருவருக்குப் பல நல் எண்ணங்கள் இருக்கலாம், பல உதவிகள் செய்யலாம். கணவன், மனைவி இருவரும் அன்பில் வாழ்க்கையின் துவக்கத்தில் காணப்படலாம். ஆனால் அன்பு மறைவதற்கு முக்கியக் காரணம், தனது துணையின் விருப்பங்கள், வெறுப்புகள் எதிர்கால நோக்குகள் நம்மிலிருந்து வித்தியாசப்பட்டது என்ற உணர்வு வரும் போது அல்லது ஏற்றுக் கொள்ளும் போது மாத்திரமே அன்பு தொடரும்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக நினைப்பது என்னவெனில் கணவன் தான் கூறுவதைக் காது கொடுத்து கேட்பதே கிடையாது என்பது தான்.
ஆண்கள் தங்கள் மனைவியின் பிரச்சினையைக் கேட்டவுடன் அதற்கு ஒரு முடிவை எடுத்து விடுகிறார்கள். இது சிறிய பிரச்சினைதான் நான் சொல்வதுபடி நட என்று ஒரு தீர்வைக் கூறிவிடுகின்றனர்.
அந்த தீர்வின்படி மனைவி நடக்கவில்லை என்றால் ஆணுக்குக் கோபம் வருகிறது. நான் கூறியபடி ஏன் நீ நடப்பதில்லை என்று கேட்கிறான். மனைவி எதிர்பார்ப்பது தீர்வு அல்ல, அக்கறை தான் என்பதை ஆண்கள் உணர்வதில்லை.
மனைவி மீண்டுமாக இதே பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது ஆணுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. அவள் பேசும்போதே உன் பிரச்சினையெல்லாம் எனக்குப் புரிகிறது என்று இடைமறித்து விடுகிறான்.
எனவே பெண்களின் பிரச்சினைகளுக்கு ஆண்கள் தீர்வு கூறுகிறவர்களாகக் காணப்படாமல், அவர்கள் மீது அனுதாபப்பட்டு அவர்களை அரவணைக்கிறவர்களாக இருந்தாலே போதும் குடும்பத்தில் பாதி பிரச்சினை முடிந்து விடும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment