வருமுன் காக்க
குடும்ப வாழ்வில் ஈடுபடுமுன், வரன் பார்க்கும்போதே குடும்பத்தின் அந்தஸ்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு குடும்பத்தில் மணமகனையோ, மனமகளையோ தேர்ந்தெடுக்கும்போது குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நாம் அந்தக் குடும்பத்தில் சென்று வரும்போது மதிக்கப்படுவோமா? நம்முடைய குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஒத்துப்போகுமா? மருமகனாக, மருமகளாக நடத்தப்படுவோமா அல்லது வேலைக்காரனாக, வேலைக்காரியாக அந்நியனாகப் பார்க்கப்படுவோமா என்பதனை உணர்ந்து திருமணத்தை நடத்த வேண்டும்.
ஒருவர் பணம் படைத்தவராகவும் மற்றவர் வறியவராகவும் இருக்கும் போது தாழ்வு மனப்பான்மை நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளது. இதேபோன்று படிப்பு மற்றும் பதவி வகிப்பதிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ள முடியாத திராணியற்றவர்களாக மாற்றி விடுகிறது. குடும்பநிலை அறிந்து திருமணம் செய்வதே சிறந்தது.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment