பொறுப்புணர்வு
ஒரு குடும்பத்தில் கடன்பாராம் அதிகமாக வந்தது. கடன்காரர்கள் வந்து நெருங்கினர். உடனே அந்த ஆண்மகன் வீட்டை விட்டு மனைவியிடம் சொல்லாமலே ஓடி விட்டார். துன்பத்திலும், இன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், உன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்பது மறந்துவிட்டது. தான் பிழைத்தால் போதும் என்ற மனநிலையுள்ள ஆண்களைப் பெண்கள் நல்ல கணவனாக நினைப்பதில்லை. இருப்பினும் இப்படிப்பட்ட ஆண்களையும், பெண்கள் மன்னித்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை ஆபிரகாமின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளமுடியும். ஆதி.20:2இல் ஆபிரகாம் தன் மனைவியை சகோதரி என்று கூறுவது, சிக்கல் வந்தபோது தன் மனைவியை விற்றுப்போட்டது போன்ற சூழலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் சாராள் தன் கணவனை மதித்து, சேர்ந்து வாழ விரும்புகிறாள்.
ஆதிகாலம் முதல் ஆண்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று துன்பங்களை எதிர்கொண்டு வேட்டையாடி உணவு கொண்டு வந்தனர். கடல் கடந்து திரவியம் சேர்த்தனர். இப்படி வாழ்க்கையில் risk taking behaviour உடையவர்களாக ஆண்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் எப்பொழுதும் ஆண்கள் முன்னிலையில் இருக்க வேண்டும். பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தாவீது, தானும் தன்னைச் சார்ந்தவர்களின் குடும்பமும் சிறைப்பிடிக்கப்பட்ட போது மிகவும் நெருக்கப்பட்டான். ஆனால் பிரச்சினையைக் கண்டு ஊரைவிட்டு ஓடாமல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு பிரச்சினையை எதிர் கொள்ளுகிறான். (1சாமு 30:4-20) இதைபோன்று குடும்ப வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிரச்சினைகள், பல்வேறு ரூபத்தில் வரலாம். அவைகள் வந்தாலும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், கரை சேர்க்க வேண்டும் என்ற வேகம் குடும்பத் தலைவனுக்கு வரவேண்டும். இப்படிப்பட்ட உணர்வுகள் இல்லாத ஆண்மகனை எந்த ஒரு மனைவியும் மனிதனாக மதிக்க மாட்டார்கள். ஆகவே ஆண் மக்களே! சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு, வேலைக்குப் போகாமல் சீட்டு விளையாடி, நண்பர்களோடு டிவியில் கிரிக்கெட் பார்த்து மனைவியின் சம்பளத்தை வாங்கிக், குடித்து வாழ்வதை வெறுத்துவிட்டு நல்ல ஆண் மகனாக வாழ முற்படுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment