பரம இரகசியம்
இல்லற வாழ்க்கையில் பல மாற்றங்கள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காரணம் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டது. முன்பு பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும் குறைவு. ஆனால் இப்பொழுது பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகின்றனர். மற்றும் பெண்கள் படித்திருப்பதால், தான் கட்டாயம் பணிக்குச் செல்வேன் என்று கூறுவதும் உண்டு. பொருளாதார அளவில் கணவன், மனைவி இருவரும் சமமாக மாற பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. யாருக்கும் யாரும் அடிமையில்லை.
அதிக பணம் சம்பாதிப்பவர்கள், குறைவாக பணம் சம்பாதிப்பவர்களை அடக்க முயற்சிக்கின்றனர். இல்லையென்றால் அதிக பலம் உள்ளவர்கள், குறைவான பலமுள்ளவர்களை அடக்க முயற்சிக்கின்றனர். ஒருவர் அடங்கி மற்றவர் அதிகாரம் செலுத்துவதைப் பொறுத்துக் கொண்டால் பிரச்சினை வராது. மறுக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகள் வளரும்.
புதிதாக இரண்டு மாடுகள் வாங்கி ஒரு வண்டியில் இணைக்கும்போது இரண்டும் தனக்கு விருப்பமான படி ஓட ஆரம்பிக்கும். இவ்வாறு ஒவ்வொரு மாடும் தனது பலத்தைக் காண்பிப்பதால் அதிக சுமையை இழுக்க நேரிடும். வண்டியும் சரியாகச் செல்லாது. நாட்கள் செல்லச் செல்ல இரண்டு மாடுகளும் தங்களுக்குள் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு ஓன்று மற்றொன்றுடன் இணைந்து செல்ல முற்படும். இதுபோன்று தான் மண வாழ்விலும் ஒருவர் அதிகமாக உணர்ச்சி வசப்படும் போது மற்றவர் அடங்கி நடந்து கொண்டால் பிரச்சினைகளை எளிதாகத் தாண்டிச் செல்லலாம்.
அதிகமாகச் சண்டையிடும் ஒரு குடும்பம் இருந்தது. அவர்கள் வீட்டிற்கு அருகிலே சமாதானமாக வாழ்ந்த குடும்பமும் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் சண்டையிடும் குடும்பத்தைச் சார்ந்த கணவன், சமாதானமாக வாழும் குடும்பத்தின் தலைவனைப் பார்த்து, 'சார், நீங்கள் எப்படிச் சமாதானமாக உங்கள் மனைவியுடன் வாழ்கிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே இது மிகவும் சுலபம் என்று கூறிக்கொண்டு விட்டுக் கொடுத்துப் போகணும் அவ்வளவுதான், சிறிய காரியங்களை என் மனைவியும், பெரிய காரியங்களை நானும் பார்த்துக் கொள்வோம் என்றார்.அது எப்படி என்று மீண்டுமாக வினவினார் அந்தக் குடும்பத் தலைவர். அதற்கு, பதிலாக சிறிய காரியம் என்பது குடும்ப வரவு செலவு, பிள்ளைகள் மேற்படிப்பு, திருமணத்திற்கு நகை வாங்குதல், திருமணத்திற்கு வரன் பார்த்து முடிவு செய்தல் என்றும், பெரிய காரியம் என்பது இலங்கைத் தமிழர் பிரச்சினை, மாவோயிஸ்ட் பிரச்சினை, நக்சலைட் பிரச்சினை போன்றவை. இதுதான் இரசியம் என்றார்.நீங்கள் உங்கள் குடும்பங்களில் எவைகளைக் கையாள வேண்டும் என்று யோசிக்கிறீர்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment