பெற்றோர் பிள்ளைகளோடு தரமான நேரம் செலவிடுதல்

 


வெளிநாட்டில் தகப்பனார் ஒருவர் தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காகப் பணம் சம்பாதிக்க சென்றார்.  பணம் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை வாழ்வை நிர்ணயிக்கக் கூடியது.  பணம் இருந்தால் தான் என் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெரியவர்களாக இருப்பார்கள்  என்ற பெரிய கனவோடு இரவு பகலாக எடுத்து பணி செய்தார்.  5 வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து குடும்பத்துடன் செலவிடுவார்.  30 நாட்கள் முடிந்த உடன் வெளிநாடு திரும்பி விடுவார்.  

வரும்போதெல்லாம் வெளிநாட்டில் உள்ள விலை உயர்ந்த pencil, pen என்று வாங்கி வந்து பிள்ளைகளை மகிழ்விப்பார்.காலங்கள் புரண்டு ஓடின.  பிள்ளைகள் படிப்பைக் குறித்து வந்த செய்திகள் மனதை உடைத்தது.  சரியாகப் படிப்பதில்லை.  Computer Game, Friends உடன் பள்ளிக்குச் செல்லாமல் வெளியே சுற்றுவது, சுற்றுலாத் தலங்களுக்கு வீட்டில் உள்ள பணத்தை எடுத்துச் சென்று நண்பர்களுடன் செல்வது போன்ற காரியங்கள் வேதனையை அளிக்கிறது.  இறுதியாக நம் ஊருக்குச் சென்று அங்கேயே வாழ்வோம் என்ற முடிவுக்கு வரும்போது பிள்ளைகள் எல்லாம் படிப்பில் நாட்டமின்றி வழிதவறிச் சென்று விட்டனர்.  பள்ளிப்படிப்பைக் கோட்டை விட்டனர்.  மனம் வருந்தினார்.  இதைப் போன்று பல குடும்பங்களில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெற்றோருக்குப் பிள்ளைகள் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறதே தவிர.  அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மையை இழந்து விட்டனர்.  பிள்ளைகள் விரும்பிய பணத்தைக் கொடுப்பதால் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னுக்கு வர இயலாது.  பிள்ளைகள் பணத்தைக் காட்டிலும் பெற்றோர் தங்களிடம் நேரம் செலவு செய்ய வேண்டும் என்பதைத் தான் அதிகமாக விரும்புகின்றனர்.  அதாவது Quality time தரமான நேரம்.  வேறு வேலைகளைச் செய்து கொண்டே பேசுவது அல்ல.  முழுமையாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், மனம் விட்டுப் பேசவும் நேரம் அளிக்க வேண்டும்.  பிள்ளைகளுடன் இணைந்து விளையாடுதல், நடைப்பயிற்சியில் இணைந்து செல்லுதல், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருத்தல், பள்ளியில் சகமாணவ, மாணவியிடம் ஏற்பட்ட சிக்கல்கள், சந்தோஷமான நிகழ்வுகள் பாராட்டப்பட்ட நிகழ்வுகள் அல்லது சண்டையிட்ட நிகழ்வுகள் அனைத்தையும் சக நண்பனைப் போல் உட்கார்ந்து பேச வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.  அரைமணிநேரம் செலவிட்டாலும் அது முழுமனதுடன் இருக்க வேண்டும்.

என் பெற்றோர் என்னுடைய பிரச்சனைகளைக் குறித்துப் பேசினால் கேட்பார்கள்.  என்னைக் கேலிச் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் வரவேண்டும்.  ஆசிரியருடன் பிள்ளைகளுக்குப் பிரச்சினை இருக்குமானால் அதனையும் காது கொடுத்து கேட்க வேண்டும்.  ஆசிரியருடன் எப்படி நல் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.  ஆசிரியருக்கு நம் பிள்ளைகள் மீது கோபம், எரிச்சல் இருந்தால் எப்படி அச்சூழலைக் கையாள வேண்டும் என்பதை உட்கார்ந்து பேச வேண்டும்.  நம்பிள்ளைகள் ஆசிரியருடன் வெறுப்புடன் பள்ளிக்குச் செல்லாமல் ஆசிரியருடன் நல்உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சூழலைக்குறித்துப் பேசி முடிவெடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து படிப்பின் மீது வெறுப்பு வரும்போதெல்லாம் பெற்றோர் உள்ளே நுழைந்து சரிசெய்ய முற்படவேண்டும்.  அதை விட்டுவிட்டு ஆசிரியருக்கோ, பிள்ளைகளுக்கோ சாதகமாகப் பேசி வெறுப்பை வளர்க்கக்கூடாது.

இவைகளை இன்றையப் பெற்றோர் செய்வதை விட்டுவிட்டனர்.  பிள்ளைகள் பள்ளியில் ஏற்பட்ட நிகழ்வுகளைச் சொல்ல வரும்போதே சரிசரி உங்க School மேட்டரை இப்பொழுது பேசாதே, போய் படிக்கிற வழியைப்பாரு என்று அதட்டும்போது பிள்ளைகள் உணர்வுகளெல்லாம் உள்ளே சுருங்கி  விடுகின்றது.  நத்தை எப்படி தன் உடலைக் கூட்டுக்குள் அடக்கிக் கொள்ளுகிறதோ அதைப்போன்று பிள்ளைகளின் தங்கள் உணர்வுகளை எல்லாம் அடக்கி, அடக்கிச் செயல்பட முடியாதவர்களாக மாறிவிடுகின்றனர்.

நம் பிள்ளைகளுக்கு நல்ல Computer, Cell Phone, I Pad, நல்ல உணவு , விலை உயர்ந்த, ஆடைகள் என்று வாங்கிக் கொடுத்துத் திருப்திப்படுத்தினாலும் உள்ளத்தில் உள்ள காரியங்களைப் பகிர்ந்துகொள்ள இடம் இல்லையானால் பிள்ளைகள் சிறந்தவர்களாக வர இயலாது.  மனஅளவில் மகிழ்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறந்த படைப்பாற்றல் உள்ளவர்களைக் காட்டிலும் சிறந்த திறமை உள்ளவர்களே உலகத்தில் ஜொலிக்கிறார்.  உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.  அவைகளைப் புரிந்து கொள்ளவும், தங்களைச் சரியான பாதையில் நிலை நிறுத்திக்கொள்ளவும் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும்.  

சூழலோடு ஒத்துப்போகும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பிரச்சனையான சூழலில் இருந்து தப்பிக்கும் மனப்பான்மை, வெற்றி தோல்விகள் என்று அனைத்தையும் சந்தித்து அழவும், மகிழவும் பழக்குவிக்க வேண்டும்.  என் பிள்ளை தோல்வியே அடையக்கூடாது என்று நினைத்தால் அது தவறு.  என் பிள்ளை First Rank தான் இருப்பான்.  இரண்டாவது இடம் வரவேக்கூடாது என்று நினைத்தால் பிள்ளைகளை அதிக மன அழுத்தத்திற்குள்ளாக்கப்படுவார்கள்.  எனவே சிறுவயது முதற்கொண்டே பிரச்சனைகளைச் சந்திக்கவும், சமாளிக்கவும் பெற்றோர் பிள்ளைகளை விட்டுப்பிடிக்க வேண்டும்.

யோசேப்பை யாக்கோபு தன் மகன்களோடு பழகவிட்டு பிரச்சனைகளை சந்தித்ததால் தான் யோசேப்பு சிறையில் இருந்தாலும் வெற்றி பெரும் வரை விடாமல் போராடினார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  யோசேப்பின் சொப்பனங்களை மனதில் வைத்துச் சிந்தித்தவன் யாக்கோபு.  கேலி பேச வில்லை.  பெற்றோர்களே பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்.  பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி