எப்பொழுதுதான் புரிந்து கொள்வது
வயது முதிர்ந்த நீதிபதி அவர்கள் ஒரு சிறப்புரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மற்றவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கிறது என்று கூறிவிட்டு, நான் முப்பத்தைந்து வருடங்களாகக் குடும்ப வாழ்க்கையை நடந்த்துகிறேன். ஆனால் எனக்கே என் மனைவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் எந்த நேரத்தில் எனது கருத்தை ஏற்றுக் கொள்ளுவாள், எப்பொழுது அதே கருத்தைக் கேட்டு எரிச்சல் அடைவாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். குடும்ப வாழ்க்கையில் இருவர் சேர்ந்து வாழ்வது என்பது கஷ்டமான காரியம்தான், ஆனால் அதைவிடப் பிரிந்து வாழ்வது அதிகக் கஷ்டமானது.
உலகில் கணவன் அல்லது மனைவியை உடனே புரிந்து வாழ முடியுமா என்றால் அது முடியாது. அடுத்தவர் மனநிலையை எவ்வளவு புரிந்திருந்தாலும், படித்திருந்தாலும் கடினமானதே. இயேசு கிறிஸ்துவும் தன்னைப் பற்றி மற்றவர்கள் எப்படிப் புரிந்திருக்கிறார்கள் என்று தமது சீடர்களிடம் கேட்டார். அப்பொழுது அவர்கள் சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், சிலர் எலியா என்றும், சிலர் பழைய தீர்க்கரில் ஒருவர் உயிரோடு எழுந்து வந்துவிட்டார் என்றும் மக்கள் நம்புவதாகக் கூறுகின்றனர். பேதுரு மட்டும் மேசியா என்று குறிப்பிடுகிறார். இயேசு தன்னை இந்த உலகத்திற்கு எப்படியெல்லாம் காண்பித்த போதும் அவரைப் புரிந்து கொள்ளாமல் மக்கள் இருப்பதைக் காணமுடிகிறது. (மத் 16: 13-16)
இறைமைந்தர் இயேசுவையே இந்த உலகம் புரிந்து கொள்ளாமல் இருக்கும்போது உங்களை மட்டும் (உங்கள் கணவனோ அல்லது மனைவியோ) சில வருடங்களுக்குள்ளாகச் சரியாகப் புரிந்து கொண்டு, நடத்த வேண்டும் என்று நினைப்பது நியாயமாகுமா? இருபத்தைந்து, முப்பது வருடங்கள் உங்களை வளர்த்த பெற்றோரையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது அவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும்போது உங்களை (கணவன்/மனைவியை) உடனே புரிந்து கொள்ள இயலுமா என்பதை யோசித்து, புரிந்து கொள்ளுவதற்கு அணு அணுவாக முயற்சி செய்யுங்கள்.
திருமணத்திற்கு முன்பாக எதிர்பாலரைக் குறித்துத் தவறான அபிப்பிராயங்களை நண்பர்கள் மூலமோ, புத்தகங்கள் மூலமோ அறிந்து வைத்திருப்பது தவறான புரிந்து கொள்ளுதலுக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாகத் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் எல்லாரும் நல்லவர்களாக இருக்க மாட்ட்டார்கள் என்று நண்பர்கள் கூறியிருந்தால் அதனை அப்படியே நம்பி, சந்தேகத்தோடு மனைவியை ஆய்வு செய்வது, போன்றவை வாழ்க்கையை நரகமாக்கிவிடும் செயலாகும்.
தவறான அளவுகோலை வைத்திருந்தால் நாம் அளவிடும் எந்தப் பொருளாக இருந்தாலும் தவறாகவே இருக்கும். தவறு வருவதற்குக் காரணம் பிறர் அல்ல, நாம் வைத்திருக்கிற தவறான அளவு கோலே. தவறான புரிந்து கொள்ளலுக்கு அடிப்படையே தவறான தகவல்களை மனதுக்குள் அடைத்து வைப்பது தான். சரியாக உங்கள் துணையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் துணையின் உச்சி குளிர்ந்து விடும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment