வாழ்க்கையின் நங்கூரம்


இல்லற வாழ்வில் கணவன் மனைவியை நம்புவதும், மனைவி கணவனை நம்புவதும் பெற்றோர் பிள்ளைகள் உறவில் ஒருவரை ஒருவர் நம்புவதும் இன்றியமையாததாகும்.

இரவு 9.30 மணிக்குத், தொலைபேசியின் அழைப்பு கேட்டு ரிசிவரை எடுத்தேன். அப்பொழுது எதிர்முனையில் இருந்து அழுகைச் சத்தம். ஐயா என் கணவருக்கு counselling கொடுக்க வேண்டும் என்று கூறி அழுதார்கள். ஏன் அழுகிறீர்கள் என்ற போது என் கணவன் என் மீது நம்பிக்கையில்லாமல் என்னை அடித்து உதைக்கிறார். கல்லூரி படிக்கிற மகன் இருக்கிறான். அப்படியிருக்க என்னைத் தவறாக நினைப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. யார் சொல்லியும், கேட்கும் மனப்பான்மை என் கணவருக்கு வரவில்லை என்று அழுதார்.

இன்று நம்பிக்கை இல்லாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதே வேளையில் ஒருவர் நம்பிக்கையை இழக்கும்போது பிறர் மீது கோபமும், வெறித்தனமும் வெளியாகிறது. ஒருவரை ஒருவர் துன்புறுத்தவும், வன்முறையில் ஈடுபடவும் செய்கின்றனர். வீணான சந்தேகமும், நம்பிக்கையில்லாத தன்மையையும் வாழ்க்கையின் சந்தோஷத்தை இழக்கச் செய்து விடுகிறது.   

ஒருவரை ஒருவர் நம்பவில்லையெனில் வாழ்க்கையில் பிறரைப் பற்றி தேவையில்லாத ஆராய்ச்சியும், பிறர் நடை, உடை பாவனங்களைத் தெரிந்து கொள்ள முற்படுவதும், தேவையில்லாத வேதனைகளும் பெருக ஆரம்பிக்கும்.

பிறரைப் பற்றிய சந்தேக உணர்வு, மனநிலையில் தெளிவில்லாமல் நடுநிலையில் மாறுபடும்போது ஏற்படுகிறது. குடித்து வெறிக்கிறவர்களும் நாளடைவில் சந்தேகத்தோடு பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இவர்களைத் திருத்த முயற்சி எடுப்பது மிகவும் சிக்கலானதாக இருக்கும். ஏனெனில் இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை, பொருள் கொடுத்துப் பார்க்கும்போது அவர்களை திருப்திபடுத்த இயலாத நிலையாக மாறிப் போகிறது.

நம்பிக்கை என்பது வாழ்க்கையின் நங்கூரம் போன்றது. எவ்வளவு காற்றடித்தாலும் கப்பலை அசையவிடாமல் பாதுகாப்பது தான் நங்கூரத்தின் முக்கிய தன்மை. அதே போன்று ஒருவர் மீது பலர் பல குற்றச்சாட்டுகளை வைத்தாலும் குடும்ப வாழ்வில் மற்றவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களைப் பொருட்படுத்தாமல் நம்பிக்கையில் உறுதியாக வாழ உதவியாக இருக்கும்.

கப்பல்கள் துறைமுகத்திற்கு வரும்போது அவைகளை வேறு இடத்திற்கு அலைகள் அடித்துச் செல்லாமல் இருக்கவும், கடல் கொந்தளிக்கும் போது கவிழ்ந்து விடாமல் இருக்கவும் நங்கூரம் உதவுவது போன்று வாழ்க்கையில் பலர் பல பொய்களையும் நிஜமானதாகக் கூறும் பல்வேறு உண்மையற்ற தன்மையையும் பெரிதாக எடுக்காமல் நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

அதே வேளையில் அவநம்பிக்கை ஒருவர் பேரில் எழுமாயின் அதை நேரடியாகப் பேசித் திருத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படி நினைக்கிறேன் அல்லது கேள்விப்படுகிறேன் என்று நேர்முகமாகப் பேசித் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நங்கூரம் இல்லாத கப்பல், பாறை போன்ற இடங்களில் இடித்து நொறுங்கி விழுவது போன்று நமது வாழ்க்கையும் நொறுங்கிப் போகும்.   பிள்ளைகளும் நொந்து வேதனையடைவர். 

நம்பிக்கையிழக்கும் நேரம் நாம் இயேசு கிறிஸ்துவிடம் தான் கூற வேண்டும். ஆண்டவர் நம் நம்பிக்கையை வலுப்படுத்துவார். உன் நம்பிக்கை வீண் போகாது (நீதி 23:18) என்று புது நம்பிக்கை கொடுத்துப் பலப்படுத்துவார்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்