இல்லற வாழ்வில் போதை வஸ்து


காலை வேளையில் ஒரு வீட்டிற்குள் காலெடுத்து வைத்தேன். குடும்பத்தலைவரை எங்கே என்று கேட்டேன்.அவர் மனைவி கையைக் காட்டிய அறைக்குள் நுழைந்தேன்.அறைக்குள் சிகரெட் புகையாக இருந்தது. நுழைந்ததும் சற்றும் எதிர் பார்க்காத அவர் Sorry  ஐயா என்னால் விடமுடியவில்லை.அது இல்லன்னா எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது என்று கூறினார். தன்னந்தனியாக டி.வி.யைப் பார்த்துக்கொண்டே புகைத்துக் கொண்டிருந்தார். மனைவி, பிள்ளைகள் அவரைக்கண்டு கொள்ளவில்லை.அந்தப் புகை நாற்றம் எங்களுக்கு வேண்டாம் என்று கதவைப் பூட்டி வைத்திருந்தனர்.   

புகைப்பிடிப்பது  ஸ்டைலுக்காக, பிறரைக் கவருவதற்காக என்று ஆரம்பிப்பவர்கள், இறுதியில் குடும்பத்தாரால் மனைவி, பிள்ளைகளால் ஓரங்கட்டப் படுகின்றனர். புகையிலை, பான், குட்கா போன்ற போதை வஸ்துக்களை உண்டால் இல்லற வாழ்க்கை சுகமாக அமையும் என்று யாராவது கூறியதை நினைத்து உட்கொள்ளுகிறவர்களே உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள். 

மாயையை நம்பி உண்மையிலே கிடைக்கும் சுகத்தை சிலர் இழந்து விடுகின்றனர்.   போதை வஸ்துக்களை உட்கொள்ளும்போது வாய் துர் நாற்றம் வீசும், உடல்நலம் கெட்டுவிடும்.   வீணான எரிச்சல், கோபம் ஏற்படும்.   போதை வஸ்துக்கு அடிமையான பின் அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.   எங்கு போனாலும் அதைச் சுமந்து கொண்டே செல்லும் அவல நிலை ஏற்படும்.மனைவி, பிள்ளைகளுடன் சிறிய பிரச்சினை வந்தாலும் உடனே போதை  வஸ்தை தொடர்ச்சியாகச் சாப்பிட வேண்டும் என்ற மனநிலை ஏற்படும்.  குடும்பத்தில் வீண்சண்டை ஏற்பட்டுக் குடும்பமே சந்தோஷத்தை இழக்க நேரிடும்.

போதை வஸ்துக்கு அடிமையாகும்போது புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட நோய்த் தாக்கத்தால் வாழ்வையே இழக்க நேரிடும் அபாயத்திற்குள் தள்ளப்படுவீர்கள்.

கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு சகோதரன் பான், குட்கா, போன்ற புகையிலையை இளம் பருவத்திலேயே சாப்பிட்டு வந்தார்.திருமணமான பின்பும் மனைவி பேச்சைக் கேட்காமல் சாப்பிட்டார்.பிள்ளைகளைக் கொஞ்சும் போது  புற்றுநோய் வந்ததைக் கண்டு கதறினார். பிள்ளைகள் தகப்பன் காலைப் பிடித்து அழுதுக்கொண்டிருக்கும் போதே உலகத்தை விட்டு கடந்து போனார். வாழ்வதற்கு ஆசைப்பட்டார், பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ மனம் இருந்தது.ஆனால் புற்றுநோய் அதற்கு இடம் கொடுக்கவில்லை.  அன்பர்களே இன்ப வாழ்க்கையைக் குலைத்துப் போடும் போதை வஸ்துவை தூக்கி எறிவோம்.இனிய இல்லற இன்பத்துடன் வாழ்வோம்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி