பிள்ளைகள் உறவில்...
இதைப்போன்று வேதனையடையும் பெற்றோர் பலர். இச்சூழல்களில் பெற்றோர் நம்பிக்கையற்றவர்களாக இனிப் பிள்ளைகளை நம்மால் கன்ட்ரோல் பண்ணவே முடியாது, நம் பிள்ளைகள் நம் அன்பைப் புரிந்து கொள்ள மாட்ட்டார்கள் என்ற வெறுப்புணர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்து விடுகின்றனர். பல பெற்றோர் அவர்களை அடித்துத் திருத்த நினைக்கின்றனர். சில தாய்மார்கள் அழுது புலம்புகின்றனர். இவைகளில் பயன் ஏற்படவில்லையெனில் திகைத்து விடுகின்றனர். எனவே இச்சூழலில் பிள்ளைகளோடு இணைந்து தோழமையோடு அவர்களை சரி செய்வதற்கு முன்வர வேண்டும். வீணாக அடித்து உதைப்பதால் பிள்ளைகள் எதிரிகளாகத்தான் மாறிவிடுகின்றனர். பெற்றோர், பிள்ளைகள் என்ற உறவே பாதிப்புக்குள்ளாகி விடும். பிள்ளைகள் பெற்றோரிடம் பேசவே விரும்பாமல் புதிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்க முற்படுகின்றனர். எபேசியருக்குப் பவுல் குறிப்பிடும்போது, பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனைகளிலும் அவர்களை வளர்ப்பீர்களாக என்றார். கோபம் என்பது பிள்ளைகளைப், பெற்றோரின் உறவு நிலையிலிருந்து பிரித்து விடும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.
ஏன் பிள்ளைகள் இப்படி மாறுகிறார்கள் என குழம்புகின்றிர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.
நமது பிள்ளைகள் பெரியவர்களாக மாறிவிட்டார்கள். பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்ததும் வெளிப்புறமாகத் தெரிகிறது. ஆனால் ஆண் பிள்ளைகள் வயதுக்கு வந்ததை, பலர் புரிந்துகொள்வது இல்லை. எனவே தான் இந்த சிக்கல். பிள்ளைகள் பெரியவர்களாக மாறியதும் தங்களுக்கென்று ஒரு சுதந்திர வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுகின்றனர். அதற்குள் பெற்றோர் நுழைவதை விரும்புவதில்லை. நானும் பெரியவன் ஆகிவிட்டேன். எனவே மற்றவர்கள் என்னை மதிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தனக்கும் சிந்திக்கும் திறன் உண்டு என்பதையும், தனது தனித்திறமைகளைக் காட்டிட வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இதில் யார் தலையிட்டாலும் அவர்களை அவர்கள் எதிர்க்க விரும்புகின்றனர்.
தன்னுடைய சிந்தையின் அடிப்படையில் தங்களது வளர்ச்சிப் பாதையை நிர்ணயிக்கின்றனர். இதில் தங்களது திட்டத்தை எதிர்ப்பவர்கள் எதிரியாக மாறிவிடுகின்றனர். எனவே பெற்றோர் அவர்கள் திட்டத்தின் நஷ்ட, லாபத்தை மெதுவாக பொறுமையாக எடுத்துக்கூறி அன்போடு பழகினால் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் மட்டுமல்ல, நல்ல நண்பர்களாகவும் மாறிவிடுவீர்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க எங்களின் facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
super adviser
ReplyDelete