ஓய்விலும் உழைப்பு


அமெரிக்காவைச் சார்ந்த ராக்பெல்லர் என்ற பணக்காரர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.  அவருக்கு மிகவும் வயதாகி விட்டது.  அவர் அருகில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான்.  அவன் ராக்பெல்லரிடம் பேசும்போது ஐயா, நீங்கள் பெரிய பணக்காரராக இருக்கிறீர்கள்.  ஆனால் இன்னும் ஏன் நீங்கள் உழைக்க வேண்டும், ஓய்வு எடுக்கக்கூடாதா? என்று கேட்டான். ராக்பெல்லர் சிரித்துக் கொண்டே நாம் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.  விமானம் வானத்தில் மேலே பறந்து கொண்டிருக்கிறது.  இப்பொழுது இயந்திரத்தை நிறுத்தி விட்டால் என்ன ஆகும் என்றார்?  அப்படிச் செய்தால் விபத்துக்குள்ளாகி விடும் என்றான்.  இதைப் போன்று தான் நமது உழைப்பை என்று நிறுத்துகிறோமோ அப்பொழுதே நமது மனமும், உடலும் சீர்கெட்டுவிடும் என்றார்.

அன்பிற்குரியோரே! உங்கள் வாழ்க்கை இன்பமாக அமைய வேண்டுமானால் எப்பொழுதும் உழைக்கிறவர்களாக இருக்க வேண்டும் சில பெரியவர்கள் VRS வாங்கிக்கொண்டு வீட்டில் இருப்பார்கள்.  இதனால் வீட்டிலே வீணாக நேரத்தைச் செலவு செய்து கொண்டிருப்பர்.  சிலர் வேறு வேலைகளில் தங்களை இணைத்துக் கொள்வர்.

யாரெல்லாம் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்களோ அவர்கள் வாழ்க்கை இன்பமாக அமைகிறது.  பல வருடங்களாக அரசாங்கத்திலோ, தனியார் நிறுவனங்களிலோ அல்லது சுய தொழில் செய்தவர்களோ ஓய்வு பெறும்போது, இறைப்பணிகளிலோ, சமுதாயப் பணிகளிலோ தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

வயது ஆக ஆக நோய்கள், பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.  இவற்றைச் சமாளித்து வாழ்வை வள மாக மாற்ற வேண்டுமானால் நமது மனதை இறைப்பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக இனம் புரியாத மகிழ்ச்சி வாழ்க்கையில் ஏற்பட ஆரம்பிக்கும்.ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதன் மூலமும், எளியோருக்கு வாழ்வில் உயர வழிசெய்து கொடுப்பதன் மூலமும், எழுத்துப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திச் சமுதாயத்திற்குச் சேவை செய்வதன் மூலமும் மகிழ்ச்சி ஏற்படும்.

இப்படிப்பட்ட பணிகளில் கணவன் மனைவியாக ஈடுபடும்போது முதிர்வயதிலும் நல்ல ஈடுபாட்டுடன் வாழவும், ஒருவருக்கு ஒருவர் உதவுவதன் மூலம் வாழ்வின் விருப்பத்தை நிறைவேற்றவும் வாய்ப்புக்கு கிடைக்கிறது.  பல வருடங்களாக எட்ட முடியாத விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு ஏற்ற காலமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்