திருப்தி
1. நான் விரும்பிய வாழ்வு அமைந்துவிட்டது. அதை ஏற்றுக்கொள்கிறேன்.
2. விரும்பிய வாழ்வு அமையவில்லை, விரும்பாததை ஏற்றுக்கொள்கிறேன்.
3. நான் எதையும் விரும்பவில்லை. ஆயினும் நான் விரும்பாத வாழ்வு அமைந்து விட்டது. அதை ஏற்றுக்கொள்கிறேன்.
4. விரும்பாததை நான் ஏற்றுக்கொள்ளாமலே வாழ்கிறேன்.
வாழ்க்கையில் அழகு என்பது மாறிப்போகும், பணம் என்பது இன்று நம் கையில் நாளை மற்றோருவர் கையில். எனவே வாழ்க்கையில் நிரந்தரமற்றவை மீது கனவு கண்டு அவற்றை எதிர்பார்த்து வாழ்வது சிக்கலை உருவாக்கும். கிடைக்கிற வாழ்க்கையில் மனமகிழ்ச்சியோடு வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். பணக்காரரைக் கரம்பிடித்துத் திடீரென்று வறுமை. தொழிலில் நஷ்டம் வந்தால் துணைவரை விட்டு விட இயலுமா? அழகான பெண்ணை மணந்து, எதிர்பாராத விபத்தில் அழகை இழப்பதால் மனைவியை வெறுக்க இயலுமா? வாழ்கின்ற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான வழிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நான் எதிர்பார்த்த பணம், அந்தஸ்து இந்த குடும்பத்தில் இல்லையே என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்நாள் முழுவதும் நரகம்தான். எனவே திருப்திகரமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எனவே கீழ்க்கண்டவாறு சிந்தனையை மாற்றிப் பழக வேண்டும்.
1. விரும்பியது கிடைக்காமற் போனாலும், கிடைத்த வாழ்வில் திருப்தியாக வாழப் பழக வேண்டும்.
2. விரும்பாத நிலை வாழ்வில் ஏற்படும் போதும் அனுசரித்து வாழ முற்பட வேண்டும்.
3. விரும்பியது நமக்குக் கிடைக்கவில்லை, ஒருவேளை கிடைத்திருந்தால் நன்மையை விடத் தீமை விளைந்திருக்கலாம் என்று எண்ண வேண்டும்.
4. கிடைத்திருக்கிற வாழ்க்கை கடவுள் கொடுத்த ஈவு என்று சிந்திக்க வேண்டும்.
நம் எண்ணம் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வேதனையையும் கொடுக்கிறது. நல்ல தீர்மானத்தை வாழ்க்கையில் அமைப்போம். வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவோம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment