வீட்டோடு மருமகன்
மணமகன் மனைவியோடு சேர்ந்து அவளுடைய வீட்டில் வாழ ஆரம்பித்தார். சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். நாட்கள் உருண்டோடியது. மணமகன் கூட்டில் அடைபட்ட கிளியாக, சுயமரியாதை இழந்தது போன்ற உணர்வினால் தாழ்வு மனப்பான்மையில் தவிக்க ஆரம்பித்தான்.
அவன் நண்பர்கள், 'என்ன மச்சான், உன்னைக் கல்யாணம் கட்டிகொடுத்ததா கேள்விப்பட்டோம்' என்று கிண்டல் செய்தனர்.
மனைவியின் அதிகார தோரணை, சிறு பிரச்சினைகளையும் அம்மா, அப்பாவின் சப்போட்டோடு கணவனை எதிர்க்கும் மனப்பான்மையை வளர்த்தது. சில நாட்களுக்குள் மனைவியோடு தனியாக வாழ்கிறேன். ஆனால் அந்த வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான். அடுத்த பக்கத்தில் மாமனார் வீட்டோடு மருமகனாக இருக்கச் சம்மதித்துதானே வந்தீர்கள் என்ற கேள்வி வந்தது.
அன்பிற்குரியோரே! வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தமானது கவனித்து, சிந்தித்து செய்வது. ஒரு செடியைப் பிடுங்கி மற்றொரு இடத்தில நட வேண்டுமானால் முதலிலே நாம் சிந்திக்கிறோம். அந்த மண்ணில் இந்தச் செடி வளருமா வளராதா? அப்படி வேறு மண்ணில் வளர வேண்டுமானால் அது வளர்ந்த இடத்திலுள்ள மண்ணையும் முதலில் சேர்த்து வைக்கிறோம். அது போன்று வீட்டோடு மருமகனாக வைக்க நினைக்கும் போது கஷ்டப்பட்டவனைத் தேர்ந்தெடுத்தால் சரியாகவிடும் என்ற தப்புக் கணக்கு போடக்கூடாது.
மேகாலாயா போன்ற மாநிலத்தில் பெண் வீட்டிற்குத் தான் ஆண் திருமணமாகிச் செல்ல வேண்டும். அப்பொழுது நம்ம ஊர்ப் பெண் பிள்ளைகள் போன்று அங்கு ஆண்கள் அழுகின்றனர். காரணம் அது பெண் வழிச் சமுதாயம். ஆனால் தமிழ்நாட்டில் ஆண் வழிச் சமுதாயம் பாரம்பரியமாக உள்ளது. இதை உணர்ந்து நமது சமுதாயப் பாரம்பரியத்தை மாற்றி அமைக்கும் போது மருமகனை, மகன் போன்று நடத்த வேண்டும். அவன் சுதந்திரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
பெற்றோர், திருமணமான பின்னும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்க வேண்டும்.
படகுப் பயணத்திற்காக இரண்டு பேர் இரவு வேளையில் படகில் ஏறித் தண்டு வலித்தார்கள். ஆனால் விடியும் வரையில் கரை வந்து சேரவில்லை. காரணம் படகுக் கரையில் கயிறு போட்டுக் கட்டப்பட்டிருந்தது. இதைப் போன்று பெற்றோர் பிள்ளைகளின் வாழ்க்கைப் படகைக் கயிறு போட்டுக் கட்டி வைத்திருப்பதைக் கழற்றி விட வேண்டும். (ஆதி. 2:24) இன்ப துன்பங்களை எதிர் கொண்டு வாழ்க்கைப் படகை செலுத்த அனுமதிக்க வேண்டும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment