நமது பிள்ளைகளை நாம் நேசிப்போம்


பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிப்பதாகவும் அவர்களுக்காக உழைப்பதாகவும் பிள்ளைகளிகளிடம் கூறுகின்றனர்.   ஆனால் பிள்ளைகளோ எங்கள் பெற்றோர் எங்களை நேசிப்பதில்லை.   வீட்டிற்குச் செல்லவே விருப்பமில்லை என்கின்றனர்.   ஏன் இந்தக் குழப்பம்?

நமது பிள்ளைகள் எப்பொழுது பெற்றோர் தன்னை நேசிக்கவில்லை என்று உணருகின்றனரோ அப்பொழுதே துக்கம், ஏமாற்றம், கடுங்கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகளால் தாக்கப்படுகின்றனர்.

பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகள் போல் இருப்பார்கள் என்று சங்கீதக்காரன் தாவீது கூறுகின்றான்.   பிள்ளைகள் மகிழ்ச்சியாகவும், இணக்கமாகவும் நம்மோடு இருக்க வேண்டுமானால் அவர்களை நாம் நேசிப்பதை அவர்கள் உணர வேண்டும்.   

அன்பு என்பது ஒரு உணர்ச்சி. அதனை, பிள்ளைகள் பல வேளைகளில் புரிந்து கொள்ளுவதில்லை. பசியில்லாத போது உணவைத் திணிப்பதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது பாடத்தைப் படி என்று திணிப்பதும், தூங்கும்போது தூக்கிக் குளிப்பாட்டிப் பள்ளிக்கு அனுப்புவதும் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்புணர்ச்சி என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் பார்வையில் இது பெரிய வெறுப்புணர்வாக இருக்கும்.

எந்தக் காரியத்தையும் வலுக்கட்டாயமாகச் செய்யச் சொல்வது வெறுப்பை சம்பாதிக்கும் வழியாகும். பெற்றோர் பிள்ளைகளின் ஆசைகளுக்கும், நோக்கங்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். தகாத ஆசையாக இருக்குமானால் அன்பான வார்த்தைகளைக் கூறி எடுத்துக்காட்டாக அவர்களுக்கு முன் நீங்கள் வாழுங்கள். 

பிள்ளைகளின் உள்ளம் என்பது வெள்ளைநிறக் காகிதம் போன்றது.   நாம் எந்த நிற மையைக் கொண்டு எழுதுகிறோமோ அதுவே நிலைத்து நிற்கும். சிறந்த குணாதிசயங்கள் அவர்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால் பெற்றோரின் வாழ்க்கை முன்மாதிரியாக இருக்க வேண்டும். பிள்ளையாண்டானை நடத்த வேண்டிய வழியில் நடத்து.அப்பொழுது அவன் முதிர் வயதிலும் விடாதிருப்பான் என்று வேதம் நமக்கு எடுத்துரைக்கிறது. நாம் அவர்களை நல்வழியில் நடத்த நல்ல முன்மாதிரி வாழ்வு அவசியம்.

செடி வளருகிறதென்றால் அதற்கு வேலியைப்போட்டு ஆடு, மாடு சாப்பிடாவண்ணம் காக்கலாம். ஆனால் செடி தானாகத்தான் வளர முடியும்.  அதுபோன்று அவர்கள் வாழ்க்கைக்கு வாய்க்காலாக பெற்றோர் அமையலாம்.

பெற்றோர் பிள்ளைகள் நல்லவர்களாக, உயர்ந்த அந்தஸ்துடையவர்களாக வாழவேண்டும் என்று அறிவுரைகளைக் கூறிக்கொண்டேயிருப்பர். பிள்ளைகள் அதை வெறுப்பர்.   குழந்தைகள் எப்படியிருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ? அப்படி நாம் இருக்க முயல வேண்டும்.

பிள்ளைகள் பிடிவாதமான முடிவுகளை எடுக்கும்போது அடித்து, கண்டித்து, அறைகளில் அடைத்தோ, முழங்கால்படியிடக் கூறியோ திருந்தாமல் காரணம் என்னவென்பதை அறிந்து சரி செய்ய வேண்டும்.   அப்பொழுது பிள்ளைகளின் வாழ்வில் தன்னம்பிக்கை வளரும். சில பிள்ளைகள் மற்றவர்கள் நம்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கருதி பொய்சொல்லி பிறர் கவனத்தை ஈர்ப்பர். அப்படிப்பட்ட பிள்ளைகள் மீது அன்பும், கரிசனையும் செலுத்த வேண்டியது அவசியம்.

பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் எதிர்த்துப் பேச ஆரம்பித்து விடுவர். அதை பெற்றோரால் சகிக்க முடியவில்லை. பிள்ளைகள் தங்கள் மனவலிமையையும், சொல்வன்மையையும் வெளிக்காட்ட முற்படுகின்றனர். அவர்கள் நியாயமான உணர்வுகளை எடுத்துக்கூறுவதை எதிர்த்துப் பேசுதல் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே வேளையில் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்தால் பிள்ளைகள் பெற்றோர் சொற்படி செய்கிறவர்களாக மாறுகின்றனர்.   எனவே பெற்றோர் பிள்ளைகள் உறவு என்பது சுமூகமாக இருக்க வேண்டும். பெற்றோர் வரும் சந்ததிக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி