இருவர் உழைக்கும் குடும்பம்


குடும்ப வாழ்வில் மனைவியானவள் சுவையாக உணவு செய்து பரிமாறவும், கணவன் உடையை துவைத்துப் போடவும், வீட்டைச் சுத்தமாக வைக்கவும் வேண்டும். இவர்கள் வெளி உலக நடவடிக்கைகளை அறியாதவர்களாக காணப்பட்டார்கள். இது நாற்பது ஆண்டுகளுக்கு முன்.

ஆண்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்க முயற்சி எடுப்பர். ஆணின் ஆதிக்கமே குடும்பத்தை ஆளுகை செய்யும். கணவன் எடுக்கும் முடிவே இறுதியானது. பெண் புத்தி பின் புத்தி என்பது அந்தக் காலம். இன்று பெண்கள் ஆண்களுக்கு இணையாக உழைக்கிறார்கள். உயர்ந்த இடத்தில்  இருக்கிறார்கள். இன்று ஆண்களின் பொறுப்பு, அந்தஸ்து என்பது மாற்றம் பெற்றுள்ளது என்பதை உணர வேண்டும்.

இன்ஜினியரான ஜோஸ்வா நல்ல வேலை பார்க்கும் பெண்ணைத் தேடிக் கொண்டிருந் தான். ஜோஸ்வா மாதம் ரூ.20,000/- சம்பாதித்தான். தனக்கு இணையாக மனைவியும் இன்ஜினியராக இருக்க விரும்பினான். அப்படியே மனைவியாக அமைந்தாள் ரூபா. ரூபா, இரவு 8:30 மணிக்கு களைப்போடு வீடு வந்து சேர்ந்தாள். வரும் வழியிலேயே தன்னுடைய இரவு உணவுக்காக தோசை மாவை கடையில் வாங்கி வந்து தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஜோஸ்வா இரவு 9:30 மணிக்கு பணி  முடிந்து களைப்போடு வீடு வந்து சேர்ந்தான். முகம், கால் கழுவிக் கொண்டு சாப்பிடுவதற்கு அமர்ந்தான். மனைவி ஒன்றும் கண்டு கொள்ளவில்லை  

என்ன ரூபா பசிக்குது சாப்பிடுவோமா என்றான். ரூபாவோ சீரியலைப் பார்த்துக் கொண்டே என்ன, நீங்க வெளியே சாப்பிட்டு விட்டு வரவில்லையா என்றாள்.

திகைத்தவனாக ஆமா என்றான். அப்படின்னா தோசை மாவு கொஞ்சம் பிரிஜ்ஜுக்குள் மீதி உள்ளது. எடுத்து, சுட்டுச் சாப்பிடுங்க என்று கூறிக் கொண்டே டி.வி யைப் பார்க்க ஆரம்பித்தாள்.

நானா செய்யணும்? என்றவன் தன் தாய், தந்தைக்கு எப்படி உணவளிப்பாள் என்பதை யோசிக்க ஆரம்பித்தான். தன் தந்தை வரும் வரையில் இரவில் உண்ணாமல் தாய் காத்துக் கொண்டிருப்பாள். தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு பின்னரே மீதியை உண்ணுவார்கள். இதை எண்ணியவனுக்குக்  கோபம் ஏறியது. என்னடி சாப்பாடு செய்து தராமல் டி.வி பார்க்க வேண்டுமா என்று டி.வியை அணைத்தான்.

ஏன் டி.வியை அணைத்தீர்கள். இது நான் கொண்டு வந்தது. டி.வியை அணைக்க உங்களுக்கு உரிமையில்லை என்றாள்.

எனக்கு உரிமையிருக்கு என்று கத்தினான். 

இந்தா பாருங்க உங்களைப் போல நானும் காலையிலிருந்து இராத்திரி வரையிலும் உழைக்கிறேன். உங்களுக்கு சமமாக சம்பளம் வாங்குகிறேன். நான் உங்களுக்கு சமைத்துப் போடும் வேலைக்காரியில்லை. இந்தா பாருங்க இப்படி பேசினீங்கன்னா நான் தனியா ஹாஸ்டல்ல போய் தங்கிடுவேன். உங்க தொல்லையே வேண்டாம்.

மலரும் முன்னே மொட்டிலே வாடிப் போனது இவர்கள் வாழ்க்கை.

இருவரும் உழைக்கும் குடும்பத்தில் நன்மைகள் :

1. பணத்தேவைகள் சந்திக்கப்படுகின்றன.

2. பெண்களுக்கு வேலை பார்க்கிறோம் என்ற மனநிறைவு

3. நடுத்தர குடும்பங்களின் தேவை சந்திக்கப்படுகிறது 

4. கணவன் இறந்தாலும் பெண்கள் பயமின்றி வாழ முடிகிறது.

5. பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும்.

பிரச்சினைகள் :

1. மன அழுத்தம் 

2. பிள்ளைகளைக் கவனிக்க முடியாத சூழல்

3. இரு பக்க வேலை சுமை  

4. கணவன் மனைவி சரியாக சந்தித்துப் பேச முடியாத சூழல் 

5. ஒருவரை ஒருவர் சார வேண்டாம் என்ற எண்ணம் 

பிரச்சினையைத் தீர்க்க வழி :

1. பழைய கால சிந்தனைகளை மறந்து பெண்களுக்கு உரிமைகளைக் கொடுக்க வேண்டும்.

2. தனித் தனியாக வங்கியில் பணம் வைப்பதை விட்டுவிட்டு, பொதுவான அக்கவுண்டில் பணத்தைச் சேர்க்க வேண்டும்.

3. மனைவியும் நம்மைப் போன்று வேலைக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும்; அதற்காக சமையலில் உதவிச் செய்யலாம்.

4. துணைவருக்கு சுகவீனம் ஏற்படும்போது வேலைக்கு விடுப்பெடுத்து விடுப்பெடுத்து கவனிக்க வேண்டும்.(கொலோ.3:13,14)

5. துணைவர் பணியிடத்தில் உள்ள பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது பொறுமையாகக் கேட்டு அக்கறை காட்ட வேண்டும்.

6. ஒருவருக்குப் பணி மாறுதல் ஏற்படும்போது மற்றவர் நிரந்தர பணியாற்றாதவர் (கணவனோ அல்லது மனைவியோ) தனது பணிக்கு விடை கொடுத்து விட வேண்டும்.

7. பதவி உயர்வுக்காக இடம் மாறிச் செல்ல நேரிட்டால் துணைவரின் பணியை மனதில் கொண்டு பதவி உயர்வு வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.   

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி